இறைவன் நமக்கு அடைக்கலம் 49


இறைவன் நமக்கு அடைக்கலம்

மீட்பும் வலிமையும் ஆனவர்

உலகம் மாறும் மலைகள் சாயும்

கடலும் பொங்கும் கலங்காதே நீ திகையாதே


1. இறைவன் நம்மோடு இருக்கிறபோது

குறைவுகள் என்றும் நமக்கில்லையே

பரிசுத்த தேவனைப் போற்றிடும் போது

கடுந்துயர் மறையும் கண்முன்னே

என் அன்பு தேவன் அடைக்கலமே

என்றும் கலங்காதே நீ திகையாதே


2. அலைந்திடும் மனதில் ஆறுதல் அளிக்கும்

அமைதியை என்றும் அளித்திடுவார்

எரிந்திடும் உன்மனம் இயேசுவின் அருளால்

சரணடைந்தேன் அவர் துணை நாடும்

என் அன்பு தேவன் அடைக்கலமே

என்றும் கலங்காதே நீ திகையாதே