மாதாவின் மகிமைகள் 2 : ஞானம் நிறை கன்னிகையே.. வேதாகமத்தில் மாதா தொடர்ச்சி....

1. மாதா எப்போதிருந்து இருக்கிறார்கள்…. ?

“உன்னத கடவுள் வாயினின்று நான் புறப்பட்டேன். நானே படைப்புகளுக்கெல்லாம் முன்பே படைக்கப்பட்டேன்.“ (சீராக் 24 : 5, சீராக்கின் ஞானம்)

2. படைத்தவர் தான் படைத்த படைப்பின் மகனானார்.

“ என்னைப் படைத்தவர் என் கூடாரத்தில் இளைப்பாறினார்.” (சீராக் 24 : 12)

3. மாதாவின் புகழ் பாடல் ( என் ஆன்மா இறைவனை ஏற்றி போற்றுகின்றது… )

“ ஞானம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்; கடவுளிடத்தில் மகிமைப்படுத்தப்படும்; மனிதர்கள் நடுவில் மேன்மைப்படுத்தப்படும்.

உன்னத ஆண்டவரை வாழ்த்தும் சபைகளில் தன் வாய் திறக்கும்; அவருடைய வல்லமையின் முன்பாக மேன்மைப்படுத்தப்படும்.

மக்கள் நடுவில் மகிமைப்படுத்தப்படும்; அதன் புனித மேன்மையைக் கண்டுபிடிக்கிறவர்கள் வியப்படைவார்கள்.” (சீராக் 24 : 1-3, சீராக்கின் ஞானம்)

4. மாண்புயர் ஏழு தூண்களுமாய்…..

ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டி, ஏழு தூண்களையும் அறுத்து நிறுத்தினது; ( பழமொழி 9 : 1, நீதி மொழிகள்)

5. மாதாவின் வல்லமை..

“ வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம். (பழமொழி 31 : 10)

6. தூரத்திலிருந்து திவ்ய நற்கருணையை கொண்டு வந்த கப்பல் மாதா, சிந்தாதிரி மாதா, பைபிளில் இருக்கும் இடம்...

“தூரத்தினின்று அப்பத்தைக் கொண்டு வருகிற கப்பல் போலானாள்.” (பழமொழி 31 : 14)

7. மாதா அமல உற்பவி என்பதற்கு இன்னொரு சான்று..

“அது முடிவில்லா ஒளியின் எதிரொளி, கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி; அவருடைய நன்மைத் தனத்தின் சாயல்.” ( ஞான ஆகமம் 7:26)

8. தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்திக்க உடனே விரைந்தார்கள்..

“ ஞானம் அசைவுகளிலெல்லாம் மிக விரைவானது. அதன் தூய்மையின் காரணத்தால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது, எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.” ( ஞான ஆகமம் 7 :24)

9. மாதாவின் பரிசுத்தம்.

“அது கடவுளுடைய வல்லமையின் ஆவி; எல்லாம் வல்லவரது மகிமையொளியின் தூய சுடர்; ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது.” (ஞான ஆகமம் 7 :26)

10. மாதாவின் பணி..

“ ஒவ்வொரு தலைமுறையிலும் பரிசுத்த ஆன்மாக்களில் நுழைந்து, அவர்களைக் கடவுளின் நண்பர்களாகவும் இறைவாக்கினர்களாகவும் ஆக்குகிறது.” ( ஞான ஆகமம் 7 : 27)

11. மாதாவைப் புகழும் தலைமுறைகள் மற்றும் பரித்த ஆவியின் பத்தினி மாதா

“ அவளுடைய புதல்வர் எழுந்து அவளைப் பேறுடையாள் என்று முழங்கினார்கள். அவள் கணவனும் அவளைப் புகழ்ந்தான்.” ( பழமொழி 31 :28)

12. மாதாவின் புதல்வர்கள் ஏன் அருள் நிறை மந்திரம் சொல்கிறார்கள்..?

“ இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.” லூக்காஸ் 1: 48

அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம். ஜெபமாலை மணியை உருட்டி நாமே ஜெயித்துக் காட்டுவோம்..

ஜெபிப்போம்.. ஜெபிப்போம்.. ஜெபமாலை..

நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம்.

குறிப்பு : சென்ற பகுதியில் மாதா உடன்படிக்கைப் பேழை எனவும், மாதாவின் விண்ணேற்பையும் பைபிள் மூலமாக பார்த்ததை நினைவில் கொள்க/ பார்க்க..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !