மாதாவின் மகிமைகள் 1 : மாதா உடன்படிக்கைப் பேழை/ மாதாவின் விண்ணேற்பு வேதாகமத்தில்…

“ பின்பு விண்ணகத்தில் கடவுளின் ஆலயம் திறக்கப் பட்டது. உடன்படிக்கையின் பேழை அவரது ஆலயத்தினுள் காணப்பட்டது. மின்னல்களும் பேரிரைச்சலும் இடிமுழுக்கமும் நில நடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.

விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள். “ - திருவெளிப்பாடு 11: 19, 12:1

“ எழுந்தருளும் ஆண்டவரே, உமது இருப்பிடத்திற்கு எழுந்தருளும்: உமது மாட்சி விளங்கும் உமது பேழையும் எழுவதாக. “ – சங்கீதங்கள் 131:8 ( திருப்பாடல்கள் 132 :8)

“கடவுளாகிய ஆண்டவரே, எழுந்தருளும்! உமது உறைவிடத்திற்கு வந்தருளும்! உமது பேராற்றல் விளங்கும் உம் திருப்பேழையும் எழுந்து வரட்டும்! கடவுளான ஆண்டவரே, உம் குருக்கள் மீட்பின் ஆடையை அணிந்து கொள்ளட்டும். உம் புனிதர்கள் நன்மைகள் பெற்று மகிழட்டும்.” 2 நாள் 6 : 41

“ அன்று தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவராய், "ஆண்டவருடைய பேழை என்னிடத்தில் வருவது எப்படி" என்று சொல்லி, அதை தாவீதின் நகருக்குக் கொண்டு வர விரும்பாது கேத்தையனான ஒபேதெதோமின் வீட்டிற்கு அதைத் திருப்பி விட்டார்.”

ஆண்டவருடைய பேழை கேத்தையனான ஒபேதெதோம் வீட்டில் மூன்று திங்கள் தங்கியிருக்கையில், ஆண்டவர் ஒபேதெதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். “ 2 சாமுவேல் 9-11

“எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று,

"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.

என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?

உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது.

ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறுபெற்றவளே" என்று உரக்கக் கூவினாள்.

மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்தபின்பு வீடுதிரும்பினாள்.” லூக்காஸ் 1 : 42-45,56

“ அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன்தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னாவைக் கொண்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் துளிர்ந்த கோலும், உடன்படிக்கைக் கற்பலகைகளும் இருந்தன.” எபிரேயர் 9 :4

“ ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே.” லூக்காஸ் 1 : 49

சிந்தனை :

பழைய உடன்படிக்கைப் பேழையில் இருந்தவை :

1. பத்து கட்டளைகளை உள்ளடக்கிய கற்பலகை.

2. ஆரோனின் துளிர்த்த கோல்

3. மன்னா

புதிய உடன்படிக்கைப் பேழையில் இருந்தது :

1. வார்த்தையான சர்வேசுவரன் இயேசு சுவாமி ( அங்கு கடவுளின் வார்த்தை. இங்கு வார்த்தையானவர்)

2. தலைமைக்குரு இயேசு சுவாமி ( அங்கு குருக்களின் அடையாளம் ஆரோனின் துளிர்த்த கோல் மட்டுமே )

3. உயிருள்ள திவ்ய நற்கருணை ஆண்டவர் (அங்கு அழிந்து போகும் மன்னா)

புதிய உடன்படிக்கைப் பேழையே ! உயிர் வாழ்வோர் அனைவருக்கும் தாயே !

பரிசுத்த கன்னியான தாயே ! அருள் நிறைந்த மரியாயே நீர் வாழ்க !

“ இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.” லூக் 1 : 48

தலைமுறையினர் உள்ள நாம் மாதாவைப் புகழ்வோம் ஜெபமாலையாக..

ஜெபமாலை இராக்கியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..

ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை..

நன்றி : வாழும் ஜெபமாலை இயக்கம், சென்னை

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !