அவர்கள் நம்மை மட்டுமே நம்பியுள்ள மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள். நவம்பர் மாதம் முழுவதுமே உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்க வேண்டும். அவர்களுக்காக ஜெபமாலை மற்றும் பரித்தியாகங்கள் செய்ய வேண்டும். ஏன் வருடம் முழுவதுமே அவர்களை அடிக்கடி நினைவு கூற வேண்டும். பாவம் அவர்கள்.
இவர்களின் நிலையே இப்படி என்றால் யாரும் நினையாத ஆன்மாக்களின் நிலை எவ்வளவு கொடுமையானது. பல ஆண்டுகளாக, ஏன் பல நூறு ஆண்டுகளாக உத்தரிக்கும் ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும் உண்டு.கடவுளின் நீதித்தீர்ப்பை அனுபவித்துக்கொண்டு இருக்கும் ஆன்மாக்கள் மேல் மனமிரங்குவோம்.
நம் ஜெபதவத்தால் உத்தரிக்கும் ஸ்தலத்திலிருந்து மோட்சம் போகும் ஆன்மாக்கள் நன்றியுனர்வோடு நமக்காக ஜெபிப்பார்கள். நாளை நமக்கும் இதே நிலைதான். நமக்கும் உதவி தேவைப்படும் என்ற சுய நலத்தை நினைத்தாவது அவர்களை நினைப்போம். அவர்களுக்காய் ஜெபிப்போம். பரித்தியாகங்கள் செய்வோம். ஒரு வேளை உத்தரிக்கும் ஸ்தலம் இல்லாமல் நாம் விண்ணகம் செல்லவும் வாய்ப்பு உண்டு.
பாடல்
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
மண்ணுக்குத் திரும்புவாய் மறவாதே என்றும்
மறவாதே மறவாதே மனிதனே
பூவும் புல்லும் போல் புவியில் வாழ்கிறோம்
பூவும் உதிர்ந்திடும் புல்லும் உலர்ந்திடும்
மரணம் வருவதை மனிதன் அறிவானோ
தருணம் இதுவென இறைவன் அழைப்பானோ
இறைவன் இயேசுவோ இறப்பைக் கடந்தவர்
அவரில் வாழ்பவன் இறந்தும் வாழ்கிறான்