புனித தந்தை பியோவின் அனுபவம்..
பாத்ரே பியோ இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் படுக்கையில் கிடத்தப்பட்டதும், தம் அறையில் இருந்த துறவிகளிடம், என் ஆயுதத்தைத் தாருங்கள் ! “ என்று கேட்டார்.
வியப்புற்ற துறவிகள், “ அந்த ஆயுதம் எங்கே இருக்கிறது? நாங்கள் எதையும் காணவில்லையே ! “ என்று கேட்க,
"நீங்கள் இப்போது தொங்க விட்ட என் அங்கியில்தான் அது இருக்கிறது ! “ என்றார் பியோ. அவர்கள் தேடிப்பார்த்து விட்டு, “ பாத்ரே, உங்கள் அங்கியில் ஜெபமாலை மட்டும்தான் இருக்கிறது! “ என்றார்கள் துறவிகள்.
“அது ஆயுதமில்லையா?,,, அதுதான் உண்மையான ஆயுதம் “ என்று பதிலளித்தார் பியோ.
இரவில் தம் கழுத்தில் ஜெபமாலையை அணிந்து கொள்ளும் வழக்கம் பாத்ரேக்கு இருந்தது.
“ அடிக்கடி ஜெபமாலை ஜெபியுங்கள். அதற்கு நீங்கள் செலவளிக்கும் நேரம் கொஞ்சம்தான். ஆனால் மிக ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வீர்கள்!.. ஜெபமாலை இல்லாமல் நாம் வாழ முடியாது! நம் காலங்களில் ஜெபமாலை அசாதரனமான மதிப்பு உள்ளது என்பதால் லூர்திலும், பாத்திமாவிலும் மாமரி ஜெபமாலை ஜெபிக்கும்படி நம்மிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
மாமரி ஜெபமாலையில் ஒவ்வொரு தேவ இரகசியத்திலும் பிரசன்னமாயிருக்கிறார்கள். சேசு நாதர் நமக்கு பரலோக மந்திரத்தைக் கற்றுத்தந்தது போலவே மாமரி நமக்கு ஜெபமாலையைக் கற்று தந்திருக்கிறார்கள். நான் எப்போதும் நோயாளிகளுக்காக ஜெபிக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவர்களுக்காக ஒரு ஜெபமாலை ஜெபிக்கிறேன் “ என்று பாத்ரே பியோ அடிக்கடி கூறுவது வழக்கம்.
நன்றி : “புதுமைப் புனிதர் தந்தை பியோ” – வாழ்க்கை வரலாறு நூல், புத்தக தொடர்புக்கு பிரதர் பால்ராஜ் 9487609983, பிரதர் கபரியேல் 9487257479.
“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…”
“ கண்கள் மயங்கி… உடல் ஒடுங்கி… என்னுயிர்தானும் பிரியும் நேரம்…. உன் மடி மீது என் தலை சாய்த்து நின் மகன் பாதம் சேர்த்திடு…தாயே… “
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !