ஜெபமாலை சிந்தனைகள் 18 : பக்தியுள்ள ஆன்மாக்களுக்கு நல்ல வரப்பிரசாதம் ஜெபமாலை தொடர்ச்சி….

புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் பேசுகிறார்...

"ரோஜாவின் வாசனை எல்லோரும் விரும்புமளவிற்கு இனிமையாக உள்ளது. இதிலே நாம் சேசு மாமரி வாழ்வின் மகிமையான நிகழ்சிகளைக் காண்கிறோம்.

ஆதலால் தயவு செய்து, இவ்வழகிய பரலோக செடியினை பரிகசிக்காதீர்கள். மாறாக உங்களுடைய கையாலே உங்கள் ஆன்மாவென்னும் தோட்டத்தில் இதை நட்டு வையுங்கள்.

எவ்வாறு? ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்வோம் என்னும் தீர்மானத்தைச் செய்து கொள்வதால். தினமும் ஜெபமாலை செய்து நற்செயல்களைப் புரிவதால், நீங்கள் இச்செடியைக் கண்காணித்து, நீர் பாய்ச்சி சுற்றிலும் மண்ணைக் கிளரி விட்டு வருவீர்கள். இவற்றின் பயனாக உங்களிடம் நான் கொடுத்துள்ள விதை, இப்பொழுது மிகச் சிறிதாகத் தோன்றினாலும் ஒரு மரமாக வளரும்.

அதிலே வானத்துப் பறவைகள் அதாவது முன் குறிக்கப்பட்டனவும் அன்புத் தியானத்தில் ஆழ்ந்ததுமாகிய ஆன்மாக்கள் வந்து தங்கி அதிலே தங்கள் கூடுகளை அமைப்பார்கள். அதன் நிழல் அவர்களை சூரிய வெப்பத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கும். அதன் உயரமான கிளைகள் தரையிலுள்ள காட்டு மிருகங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.

யாவற்றிற்கும் மேலாக, அவர்கள் இம்மரத்தின் கனிகளை உண்பார்கள். அதன் கனி வேறு யாருமல்ல, ஆராதனைக்குரிய நம் சேசுதான். அவருக்கே மகிமையும் மாட்சியும் என்றேன்றும் உரியதாகுக. ஆமென்.

அப்படியே ஆகட்டும்.

நன்றி : மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்..

“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “

ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !