புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் பேசுகிறார்...
"அர்ச். சாமி நாதர் ஜெபமாலைப் பக்தி சபையை நிறுவிய ஒரு நூற்றாண்டு வரை ஜெபமாலையின் மீது ஆதியிலிருந்த ஊக்கம் காணப்பட்டது. அதன் பின் அது மறக்கப்பட்டு புதை பட்டுப்போயிற்று. இது பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் எல்லாக் காரியங்களும்- மிகவும் புனிதமானவை உட்பட அதிலும் மனித சுயாதீனத்திற்கு விடப்பட்டிருந்தால் அவைகள் மாறத்தான் செய்யும். சாத்தானின் தீய திட்டங்களும், அவனுடைய பொறாமையும், ஜெபமாலையை மக்கள் கைவிடப்பட்டதன் பெரும் காரணமாக அமைந்தன.
1349- ஆன் ஆண்டு இறைவன் ஐரோப்பா முழுவதையும் மிகப் பயங்கரமான கொள்ளை நோயால் தண்டித்தார். அதுபோல் கொடிய கொள்ளை நோய் எங்கும் கண்டதில்லை. கிழக்கிலிருந்து ஆரம்பமாகி இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து ஹங்கேரி நாடுகளில் அது பரவியது. எங்கெல்லாம் அது பரவியதோ அங்கெல்லாம் அழிவைக் கொண்டு வந்தது. தன் கதையைச் சொல்ல நூறில் ஒருவன் முதலாய் விடப்படவில்லை. இக்கொள்ளை நோய் பரவிய மூன்று ஆண்டுகளாக பெரிய நகரங்களும் சிறிய பட்டணங்களும், கிராமங்களும் துறவற மடங்களும் ஏறக்குறைய வசிப்பாரற்றுக் காலியாகக் கிடந்தன.
இந்த வாதனை முடியவும், 1376- ஆம் ஆண்டில் ஃபிளாஜெல்லாந்தெஸ் என்ற பதிதப்போதனையும், ஒரு பெரிய பிரிவினையும் ஏற்பட்டது. தேவ இரக்கத்தால் இந்தத் துன்பங்கள் முடிந்ததும் தேவதாய் முத், ஆலன் ரோச்சிடம் பரிசுத்த ஜெபமாலைப் பக்தி சபையைப் புதுப்பித்து நடத்தும்படி கூறினார்கள். முத். ஆலன் பிரிட்டன் தேசத்தில் தினான் மாநிலத்தில் புனித சாமி நாதர் சபையைப் சேர்ந்த ஒரு குரு. இவர் ஒரு சிறந்த வேத சாஸ்திர வல்லுநர். பிரசங்கம் செய்வதில் பெரும் புகழ் பெற்றவர்.
தேவதாய் இவரை இவ்வலுவலுக்குத் தெறிந்து கொண்ட காரணம்: இந்த மாநிலத்தில்தான் முதல்முதல் ஜெபமாலைப் பக்தி சபை தோற்றுவிக்கப்பட்டது. அம்மாநிலத்திலுள்ள சாமி நாதர் உறுப்பினர் ஒருவரே அப்பக்தியை மீண்டும் நிலை நாட்டும் பேறு பெறுவது தகுதியுமாயிருந்தது,,
முத்.ஆலன் ரோச் எப்படி ஆண்டவரின் எச்சரிப்பைப் பெற்று இவ்வலுவலுக்கு வந்தார் எனபதை ஏற்கனவே பார்த்து விட்டோம்..
நன்றி :ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்.
புத்தகம் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், Ph :9094059059, 9790919203, காமராஜர்புரம், கிழக்கு தாம்பரம் அருகில், சென்னை.
“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “
ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !