கிறிஸ்மஸ் கால சிந்தனைகள் 15 : மாதாவைக் குறித்த பிதாவின் தீர்க்க தரிசனம்!

“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார் “ - ஆதியாகமம் 3:15

மாதாவை பற்றி பின்னாளில் இடறல் படுவோருக்காக ஆண்டவர் இயேசு அன்றே சொல்லிய தீர்க்கமான வார்த்தைகள்..

"மரமும் நல்லது, கனியும் நல்லது என்று சொல்லுங்கள்; அல்லது மரமும் தீயது, கனியும் தீயது என்று சொல்லுங்கள்.

விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்? ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்" மத்தேயு 12 : 33-34

மேலே உள்ள நம் பரலோக பிதாவின் முதல் தீர்க்க தரிசன வார்த்தைகள் மாதாவுக்கும் அலகைக்கும் பகை என்று சொல்லுகிறது. மாதா அமல உற்பவி என்கிறது.. அலகையின் எதிரி மாதா என்கிறது.. அப்படியானால் மாதாவின் எதிரி அலகைக்கு நண்பண்.. அப்படியானால் மாதாவை வெறுப்பவன் பழிப்பவன் யாராக இருக்க முடியும்.. நீசன் அல்லாமல் வேறு யாராக அவன் இருக்க முடியும்..

இந்த பிதாவின் தீர்க்க தரிசன வார்த்தைகளைத்தான் நாம் பாரம்பரியமாக பாடலாகப் பாடி வருகிறோம்..

“ மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் நேசமில்லாதவன் நீசரே ஆவான்… வாழ்க… வாழ்க… வாழ்க மரியே…. வாழ்க… வாழ்க… வாழ்க மரியே….

அன்பான கத்தோலிக்கர்களே ! மாதாவிடம் நேசமில்லாத எந்த ஆட்களிடமிருந்தும் ஒரு பத்து ஆராய்வது தள்ளியே நில்லுங்கள்..

கவனம்…

நம் இயேசு ஆண்டவரின் வார்த்தைகளுக்கு விளக்கமே தேவையில்லை…இருந்தாலும்…

“ விசுவாசமும் நம்பிக்கையும் இல்லாத நாத்தீகர்களே..

ஆண்டவரும் கடவுளுமான நான் மனிதனாக உருவாக… வார்த்தையான என்னை மனிதனாக உருவாக்க என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என் தாய்.. எனக்கே உடல் கொடுத்தவள் என் தாய்.. என் சரீரம் எங்கிருந்து வந்தது ? நான் உங்களுக்காக சிந்திய இரத்தம் எனக்கு எங்கிருந்து வந்தது ?

பழைய கனியை உண்டு பாவம் என்ற பேய் பிடித்துள்ள உங்களை மீட்க வந்த இந்த புதிய கனி எந்த மரத்திடமிருந்து வந்தது.. மரத்தை வெறுப்பீர்கள் ஆனால் கனி மட்டும் வேண்டும் என்பீர்கள்.. உங்களுக்காகத்தான் இந்த வார்த்தைகள்… மாதாவை வெறுப்பவர்களை ஆண்டவர் விரியன் பாம்புக்குட்டிகள் என்று சொல்லி விட்டார்… பேயின் குட்டிகள் பேய்கள்தானே… பிதா சொல்லியதைத்தானே சுதனும் சொல்கிறார்.. நீங்கள் பொல்லாதவர்கள் என்றும் சொல்லிவிட்டார்.. நல்லவர்கள் அல்ல என்றும் சொல்லிவிட்டார்..

மீண்டும் சொல்கிறேன்… மாதாவிடம் நேசம் இல்லை…என்றால் ஆபத்து உங்களுக்குத்தான். உங்களைப்போல நன்றி கெட்டவர் அல்ல நம் பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர். நன்றி கெட்டவர்களிடம் நம் மூவொரு கடவுள் செயலாற்றப்போவதும் இல்லை.. பரிசுத்த ஆவியின் ஆலயமான நம் மாதாவை வெறுப்பவர்கள் மத்தியில் அவர் வருவதும் இல்லை.. பரிசுத்த ஆவியின் பத்தினியையே வெறுப்பவர்களிடம் வந்து அவர் அற்புதம் செய்வாரா?

பழைய ஏற்பாட்டு பெண்களை எல்லாம் தூக்கி வைத்து ஆடுகிறீர்களே மாதா மட்டும் உங்கள் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை…உங்கள் பக்தியில் கோளாறு இருக்கிறது…. ஏன் உங்களிடமே கோளாறு இருக்கிறது.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டிருக்கிறீர்கள்.. சரி அவர்கள் விழித்துக் கொண்டால் பிழைத்துக்கொள்வார்கள்… ஆனால் நம் கத்தோலிக்கர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்தால்…சேறு அவர்களை இழுத்துக்கொண்டு போய்விடும்…

சரி நம்மவர்களிடம் வருவோம்… இது சில பலருக்காக… மாதாவை நேசிக்கிறோம் என்று சொல்லி… கீழே உள்ள் செயல்களை செய்போர்ளும் மாதாவின் பிள்ளைகள் அல்ல…

மாதாவிடம் காரிய பக்தி மட்டும் வைத்திருப்பவர்கள்..எப்போதும் எனக்கு அது வேண்டும்…இது வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருப்பவர்கள்…

மாதாவுக்காக நடை பயணம், மாதாவுக்கு தேர் இழுத்தல், மாதாவின் சுரூபங்களுக்கு சேலை கட்டுதல், மொட்டை போடுதல், கழுத்தில் ஜெபமாலை அணிதல் போன்ற அடையாள பக்தியோடு மட்டும் இருப்பவர்கள்..(இவர்கள் ஜெபமாலை ஜெபித்தால் மாதாவின் பிள்ளைகளாகி விடுவார்கள்.) ஜெபமாலை ஜெபிக்காமல் இது போன்ற அடையாள பக்தியோடு மட்டும் வாழ்பவர்கள் மாதாவின் பிள்ளைகள் அல்ல

மாதாவுக்காக வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிடுபவர்கள்… அவர்களைத் திட்டுபவர்கள். மாதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று வார்த்ததைகளால் மட்டும் சொல்லிக்கொள்பவர்கள்.. மாதா கேட்ட விஷயங்களை செய்யாதவர்கள்.. அவர்களே ஒரு வளையத்தை மாட்டிக்கொண்டு குறைகளை மட்டும் கூறிக்கொண்டு வாழ்பவர்கள்..

அப்படியானால் மாதாவின் பிள்ளைகள்…அதிலும் எஞ்சிய பிள்ளைகளான நாம் எப்படி இருக்க வேண்டும்?..

“ ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.” திருவெளிப்பாடு 12 : 17

இதைவிட மாதாவின் பிள்ளைகளாயிருக்க தகுதி என்ன வேண்டும்…

அலகையை எதிர்த்து இயேசு சுவாமி தந்த ஏற்றுக்கொண்டு அவனோடு போய் செய்ய முதலில் உள்ளத்தில் தூய்மை, பரிசுத்தம், பாவமின்மை வேண்டும்… இவைகளைப் பெற மாதாவின் எஞ்சிய பிள்ளைகளாயிருக்க ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்… அலகைக்கு எதிராக போர் செய்ய ஜெபமாலை வேண்டும்…ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்…அதைப்போல் மாதா அவர் பிள்ளைகளிடம் கேட்கும் எதிர்பார்க்கும் பாத்திமா செய்திகளான “ ஜெபம்;தவம்;பரிகாரம் செய்ய வேண்டும்…

அப்போது மாதாவைப்போல் அலகையின் தலையை மிதித்து இயேசு கிறிஸ்துவாக மாறி அவரின் வெற்றிக்கொடியை நம் ஆன்மாவில் நம்மால் நடமுடியும்…

அதற்கு தயாரிப்பாக மாதாவின் நேசம்… உண்மையான நேசம் நம்மிடம் வளர தினந்தோறும் ஜெபமாலை ஜெபித்து நம்மை கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நம்மை தயாரிப்போம் ஆமென்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !