தன்னுடையை கற்பை காப்பாற்றிக்கொள்ள 14 கத்திக்குத்துகளை வாங்கி இரத்த வேத சாட்சியான புனித மரிய கொரற்றியின் புனிதை பட்ட விழாவில் அப்போதைய பாப்பரசர் 12-ம் பயஸ் பேசிய வார்த்தைகள் (நாள்:24.06.1950) :
இன்று புனித ஆலயத்தில் வைத்து 45 வருடங்களுக்கு முன்னால் தன் கன்னிமைக்கு கேடு வருவிக்க சம்மதிக்காமல் கடவுளுக்காக தன் உயிரை விட்ட பன்னிரெண்டு வயது கூட முடிவுறாத கொரினால்டோவின் (ரோமில் உள்ள ஒரு நகரம்) மகளாகிய மரிய கொரற்றியை நாம் புனிதர்கள் பட்டியலில் சேர்க்கப் போகிறோம். கடவுளுக்காக மறைசாட்சிகளின் முடிசூடிக்கொள்ள ஆன்ம திடன் அவளுக்கு கிடைத்திருக்கிறது. பல்லாண்டுகளுக்கு முன் உரோமை நகரில் வளர்ந்து வந்த அழகு வாய்ந்த பூக்கள்தான் அகந்தாவும், மரியாவும்.
இன்று நம் வலப்பக்கம் இருக்கும் மரியாவின் தாய் அகந்தாவும், தந்தை லூயிஜியும் (இவர் புனித கொரற்றியின் வேத சாட்சியின் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார்) மரியாவின் கிறிஸ்தவ வாழ்விலும், தியாகத்திலும், பெரும் பங்கு பெற்றுள்ளனர்.
சகோதர சகோதரிகளே, சிறுபிள்ளைகளே, இன்று நம் அனைவருக்கும் மகிழ்ச்சியின் தினமாகும். நல்ல கிறிஸ்தவக் குடும்பத்தின் தினமாகும். தாய் தந்தையிடம் பக்தியும், நல்ல கிறிஸ்தவ வாழ்வும் நடத்தும் அன்பான குடும்பத்தில்தான் புனிதர்கள் உருவெடுப்பார்கள். ஏழைகளானாலும் கடவுள் முன் பணக்காரர்களாக இருந்த கொரற்றி குடும்பத்தார், கவலைகளும், கண்ணீர்களும் உண்டானாலும் நிலையான கடவுள் நம்பிக்கையில் வாழ்ந்துள்ளனர்.
இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இளம்பிள்ளைகள், வசீகரமான படங்கள்,புத்தகங்கள், உடை அணிதல், செயல்பாடுகள் இவற்றால் கெட்டுப்போய்க் கொண்டுருக்கிறார்கள். இப்படி சின்னஞ் சிறுவர்களுக்கு இடறலாய் இருப்பவர்கள் கழுத்தில் எந்திரக் கல்லைக்கட்டி கடலின் ஆழத்தில் எரிந்து விடுவது அவனுக்கு நலம் என திருநூல் கூறுகிறது. இதற்கு மாற்றுச் சமுதாயத்தை உருவாக்க கத்தோலிக்க சபையில் உள்ளதாய்தந்தையர்களுக்கு பெரும்பங்கு உள்ளது.
அன்பான சிறுவர் சிறுமியரே, நீங்கள் இன்று ஒரு சபதம் செய்ய வேண்டும். கன்னிமைக்கும், தூய்மைக்கும் ஒருபோதும் கேடு விளைவிக்கும் வகையில் நடக்கமாட்டேன் என்று முடிவுக்கு வர வேண்டும். தீயவனின் கத்தி
முனையைக் கூட எதிர்த்து நின்ற மரியாவைப்போல நீங்களும் வாழ அவர் உங்களுக்கு துணை செய்வாராக..” என்றார்.
1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-தேதி மரிய கொரற்றி புனிதையின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அன்று புனித ராயப்பர் ஆலயத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கை ஐந்து லட்சம் பேர். புனிதையைக்கொன்ற கொலைகாரனும் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்று அவன் பேசியபோது “ ஒரு புனிதையை கத்தியால் கொன்றேன் “ என்று சொன்னான். மனந்திரும்பியிருந்த அவன் கடைசிகாலத்தில் (ஆயுள்தண்டனை முடிந்து) கப்புச்சியன் சபையின் துறவியாக மரித்தது குறிப்பிடத்தக்கது..
இவ்வளவு அதிகமாக கூட்டம் கூடியதும், புனிதையின் தாய் புனிதை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதும் மரிய கொரற்றி மட்டுமே நடந்த நிகழ்வு..
1950 லேயே போப் ஆண்டவர் கண்ணியமான ஆடைகள் உடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.. இன்றைய கால கட்டங்களில் மிக கேவலமான ஆடைகள் சர்வ சாதாரனமாக அநேகரால் எவ்வித உறுத்துதலும் இன்றி அணியப்படுகிறது, கன்னியமான ஆடைகளுக்கு வாலின்டெரி ரிடையர்மெண்ட் கொடுக்கப்பட்டு வெளியேறிவிட்டன. பெற்றோர்களே தங்கள் பிள்ளைக்களுக்கு எதை வேண்டுமாலும் வாங்கிக் கொடுக்கிறார்கள். கன்னிமற்ற ஆடைகளுடன் ஆலயத்திற்கு வந்து ஆண்டவரை வாங்கும் துணிச்சல் வந்துவிட்டது..
ஆடைகள் விசயத்தில் அதிக கவனமும், எச்சரிக்கையும் தேவை.. அதே போல் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அது ஆண்களுக்கும் உண்டு. ஆண்கள் ஆடைகள் விசயத்தில் அதிக பாதிப்பு இல்லையென்றாலும் அவர்களும் கண்ணியமான ஆடைகள் அணிய வேண்டும். காலரில்லாத T சர்ட்டுடன் ஆலயம் வருவது, முக்கால் பேண்டுடன் ஆலயம் வருவது, நடிகர்கள், பேய்கள் உருவம் போட்ட பணியனுடன் வருவது போன்றவைகள் மாற்றப்பட வேண்டும்…
கடவுள் வாழும் ஆலயமான நம்முடையை உடலை மறைப்பத்தற்கு நாம் எத்தகைய ஆடைகளை அணிய வேண்டும் என்பதை நாம் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்..
14- கத்தி குத்துகள் வாங்கியபோதும் தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஆடைகளை சரி செய்து கொண்டிருந்தாள் என்று அவரைக் குத்தியவனே சான்று பகர்ந்துள்ளான்..
புனித மரிய கொரற்றியே.. உங்கள் வாழ்வின் படிப்பினையை நாங்களும் எங்கள் வாழ்வில் கடைபிடிக்க, கற்புக்காக.. கடவுளுக்காக எதையும் தியாகம் செய்ய எங்களுக்கு வரத்தை எங்களுக்குப் பெற்றுத்தாரும்… ஆமென்.
குறிப்பு : புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு ரோல்மாடல்கள்.. ஆகவே எந்த ஆலயம் சென்றாலும் அங்கு புனிதர்கள் வாழ்க்கை வரலாறுகள் இருக்கிறதா? என்று கேட்டு வாங்கிப்படிப்பது நம் கத்தோலிக்க வாழ்க்கைக்கு ரொம்பவே நல்லது…
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க !