ஆண்டவரின் தாயாகிய அன்னை மரியாள் ✞ பாகம் 11

அன்பின் கிறிஸ்தவ விசுவாசிகளே... நம் ஆண்டவரின் தாயை பழிப்பவர்களிடம் நாம் போராடி கொண்டிருக்கிறோம் என்றால் இதுவும் இறைத்திட்டமே என்பதை புரிந்து கொள்ளுதல்வேண்டும்.

இயேசு தமது சீடர் யூதாசால் காட்டிகொடுக்கபட வேண்டும் என்பது இறைத்திட்டம் என்றால், இயேசுவின் பக்தர்கள் என கூறுகின்ற பிரிவினை சபையினரால் ஆண்டவரின் தாய் பழிக்கப்பட வேண்டும் என்பதும் இறைதிட்டமே.

''.......... நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும் போராடுகிறோம். எபேசியர் 6 : 12''

போராட்டமே வாழ்க்கை. தீயோர்களின் வஞ்சக செயல்களுக்கு எதிராக போராடி உண்மைக்கு சாட்சியம் கூறவேண்டும் என்பதே இறைத்திட்டம்.

'' 15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார். ஆதி. 3 :15''

இதில் கூறப்பட்டப் பெண் தான், ஏசாயா இறைவாக்கினர் நூலில் கூறப்பட்டப் பெண்.

‘’14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்; இசையாஸ் (ஏசயா) 7 : 14''

. 26 ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்.

27 அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள் லூக்காஸ் 1 : 26,27''

இதிலும் கூறப்படுள்ள பெண்ணும் ஒன்றே

''. 6 யாக்கோபுக்கு மரியாளின் கணவரான சூசை பிறந்தார். இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார். மத் 1 : 16 ''

இதில் கூறப்பட்டுள்ள பெண்ணும் ஒன்றே

'' 20 இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இதோ! ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

21 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார் மத் 1 : 20,21 ''

இதில் கூறப்படுள்ள பெண்ணும் ஒன்றே..

''. 34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து, "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.

35 உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்-- இதனால் பலருடைய உள்ளங்களினின்று எண்ணங்கள் வெளிப்படும்" என்றார்.லூக்கா 2: 34,35 ''

இதில் கூறப்படும் பெண்ணும் ஒன்றே.

"3 திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்.

4 அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.

5 அவருடைய தாய் பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.அருளப்பர் 2:3-5’’

இதில் கூறப்படும் பெண்ணும் ஒன்றே.

'' "27 அவர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது, கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி, "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று குரலெடுத்துக் கூறினாள். லூக் 11:27 "

இதில் வாழ்த்தப்படும் பெண்ணும் ஒருவரே

'' "26 இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.

27 பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார். அருளப்பர் 19: 26, 27 "

இதில் இயேசுக் கிறிஸ்துவால் குறிப்பிடப்படும் பெண்ணும் ஒருவரே .

'' 14 இவர்கள் எல்லாரும் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்.பணி: 1:14 "

இதில் குறிப்பிடப்படும் பெண்ணும் ஒருவரே

‘’1 விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள் திருவளிப்பாடு12:1’’

இதில் விவிலியத்தின் கடைசிப் புத்தகமான திருவெளிப்பாட்டில் குறிப்பிடப்படும் பெண்ணும் ஒருவரே.

இவர், நம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் தாயும், நம் அனைவரின் நேசத் தாயுமான அன்னை மரியாளை தவிர வேறு யாராய் இருக்க முடியும்???

கடவுளை நேராகப் பார்த்தும் நம்பிக்கை இல்லாததால் அனைத்து மனுக் குலத்திற்கும் சாபத்தை பெற்றுத்தந்தாள் ஏவாள் ,

கடவுளையே காணாது, வானதூதர் மூலம் சொல்லப்பட்ட அனைத்தும் நடக்கும் என்று நம்பிய அன்னை மரியாள் கடவுளால் மாட்சிப் படுத்தப்பட்டு உயர்த்தப் பட்டார்.

ஆகவேத்தான் அன்னைமரியாளை நம்பிக்கையின் இராக்கினி என்று தாய் திருச்சபை புகழ் மாலை சூட்டி மகிழ்கின்றது.

தொடக்கத்தில் இருந்து முடிவு வரைக்கும் அன்னை மரியாளை வர்ணிககின்றது நமது திருவிவிலியம். புரிந்து கொண்டோர் பேறுபெற்றோர்!

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

நன்றி : இயேசு உருவாக்கிய திருச்சபை