ஏழு தலையாய பாவங்கள் முன்னுரை

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வு முழுவதும் எதிர்த்துப் போராட வேண்டிய ஏழு தலையுள்ள ஒரு இராட்சத விலங்கு உள்ளது தன் சொந்த நலனில் மட்டும் ஆவல் கொள்கிறது அதுவே ஏழு தலையான பாவங்கள் பின்வருமாறு!

1.ஆங்காரம்,

2. கோபம்,

3.மோகம்,

4. உலோபித்தனம் ( கஞ்சத்தனம்)

5. போசனபிரியம்,( சாப்பாட்டு பிரியம்)

6. காய்மகாரம் ( பொறாமை, பழிவாங்குதல், )

7. சோம்பல்

ஆகியவை இந்த விலங்கின் ஏழு தலையாகும் அதுவே நரகத்தின் தலைவன் எனப்படும் லூசிபர் .

ஆயர் ஃபுல்ட்டன் ஷீன் அவைகளை ஆத்துமத்தின் ஏழு பெறும் எதிரிகள் என்று அழைப்பதோடு அவற்றிற்கு ஏழு பெயர்களையும் தருகிறார் அவை : சுயநலம், பணத்தின் மீது ஒழுங்கற்ற நாட்டம் , முறையற்ற காமம் , வெறுப்பு, பொறாமை, முகஸ்துதி, மற்றும் சோம்பல் ஆகியவை ஆகும்

ஜென்ம பாவத்தின் விளைவாக தன் சித்தத்தை வலியுறுத்துவதும் சகலத்திற்கும் மையமாகத் தன்னை ஆக்கிக் கொள்வதும் மற்றவர்களின் சித்தங்களைத் தனது சித்தத்தைக் கொண்டு அடக்கியாள்வதுமாகிய ஒரு துர்குணம் நாம் ஒவ்வொருவரிடமும் ஒட்டி பிறந்ததாக இருக்கிறது அனைத்திலும் உன்னதமான நன்மையையே நாம் மிகவும் நாடுகிறோம் ஆனாலும் பெரும்பாலும் இந்த நன்மை எதுவென்று நமக்கு விளங்குவதில்லை மேலும் ஒரு தவறான வழியில் நாம் அதை தேடி அழைகிறோம் ஆனால் சர்வேசுரனே அனைத்திலும் உயர்ந்த நன்மைத்தனம் என்பதை நாம் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் அவர் தம்மையே நமது இறுதிக்கதியாகவும் உன்னத சன்மானமாகவும் ஆக்கி வைத்திருக்கிறார் .

நானே வழி என்று தம்மைப் பற்றி அறிவித்த கிறிஸ்துநாதரின் வழியாக எல்லாம் வல்ல சர்வேசுரனை அடையும் வழியை அவர் நமக்கு காட்டியுள்ளார் சர்வேசுரனுடைய படைப்புகள் என்ற முறையில் அவரோடு நமக்குள்ள உறவை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் மோட்சத்தில் அவரைச் சொந்தமாகக் கொண்டிருப்பதற்கு அல்லது நாம் வழக்கமாகக் கூறுவது போல நம் ஆத்துமங்களைக் காத்துக்கொள்வதற்கு அவர் சித்தங் கொள்ளுகிறபடியும் ஆசிக்கிற படியும் அவரை நேசித்து அவருக்கு ஊழியம் செய்ய நாம் கடமைப் பட்டிருக்கிறோம்

இனி நாம் நமது சொந்த கர்வ சிந்தனையால் சூழப்பட்டிருக்கும் போது நாம் சிந்திக்கிற சொல்கிற செய்கிற எல்லாமுமே நம் சுயத்தை சுற்றியே இயங்குகிறது ஆயினும் இதை நாம் உணர்வதில்லை கிறிஸ்துநாதரைக் கண்டுபாவிக்கிறவர்கள் சர்வேசுரனைத் தேடுகிறவர்கள் என்று நம்மைப் பற்றி நாமே சொல்லிக் கொண்டாலும் அதையே நாம் நம்ப முயற்சித்தாலும் கூட நாம் நிஜத்தில் சுயநலவாதிகளாகவே இருக்கிறோம்.