இணைந்த இருதயங்கள்!

சேசுவின் திருஇருதய பக்திக்கு இணையாக

மரியாயின் மாசற்ற இருதய பக்தி ஸ்தாபிக்கப்பட வேண்டும்"

(சேசு சுவாமி சகோதரி லுசியாவுக்கு பாத்திமா காட்சிகளில் அறிவித்தது)

1875 -ஜுன் 16-ம் நாள். பிரான்ஸ் நாட்டு பாரலே மோனியா நகர் மினவுதல் சபைக் கன்னிகையான அர்ச். மார்கரித் மரியம்மாளுக்கு சேசுவின் திரு இருதயத்தின் காட்சி அருளப்பட்டது, நற்கருணை ஆராதனையின்போது கதிர்ப் பாத்திரத்திலிருந்து இறங்கி வந்தவராக நமதாண்டவர் அக்கினிச் சுவாலையினால் எரிந்து கொண்டிருந்த, முட்களால் சூழப்பட்ட தமது திரு இருதயத்தைக் காட்டி, மகளே! மனுமக்களை அளவற்ற விதமாய் சிநேகிக்கும் எனது இருதயத்தைப் பார், அதன் அன்பிற்கு நன்றி கெட்டதனமும், அவசங்கையும், வெறுப்பும். அசட்டைத்தனமும், நிந்தையுமே கைமாறாகப் பெறும் எனது இருதயத்திற்கு நீயாவது ஆறுதல் தருவாயாக என்று முறையிட்டு தமது திரு இருதய பக்தியை அறிவித்தார் அது தலை வெள்ளி பரிகார பக்தியாகத் திருச்சபையெங்கும் பரவி, விசுவாசமும் நல்லொழுக்கமும் தளர்ந்து. குளிர்ந்து போன மக்களிடையே தேவவரப்பிரசாதங்களைப் பொழிந்து அவர்களை மனம் திருப்பியது.

அதே போன்ற நிகழ்வு போர்த்துக்கல், பாத்திமாபதியில் 1917 ஜூன் 13-ம் நாளன்று நடைபெற்றது அன்று வழங்கப்பட்ட 2-ம் காட்சியின் போது தேவதாய் தனது மாசற்ற திரு இருதயத்துடன் காணப்பட்டார்கள். அவர்களது வலது உள்ளங்கையில் கூரிய முட்களால் ஊடுருவக் குத்தப்

பட்ட இருதயத்தைக் கண்ட காட்சி பெற்ற சிறுமி லூசியா. மனுக்குலத்தின் பாவங்களால் நிந்திக்கப்படும் மரியாயின் மாசற்ற இருதயம் அது என்றும், இவற்றிற்குப் பரிகாரம் செய்யப்பட அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்" என்று குறிப்பிடுகிறாள்.

அதன் பின்னர் வழங்கப்பட்ட (1925 டிசம்பர் 10 மற்றும் 1929 ஜூன் 13) காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டு, உலோகாதாய, நாஸ்திகக் கம்யூனிசத்தாலும், விசுவாச மறுதலிப்பாலும் ஏற்படும் ஆன்ம இழப்புகளைத் தடுக்க சர்வேசுரன் மரியாயின் மாசற்ற இருதய பக்தியை முதல் சனி பரிகார பக்தியை அறிவித்தார்.

மரியாயின் மாசற்ற இருதய பக்தி ஏன்?

சேசுவின் திரு இருதய பக்தி நடைமுறையில் இருக்கும்போதே கடவுள் ஏன் மரியாயின் மாசற்ற இருதய பக்தியை அறிவித்தார்? சேசுவின் திரு இருதய பக்தி செயல் இழந்து போனதா? வலிமை குன்றிப் போனதா? இல்லை! அப்படியானால் ஏன் மரியாயின் மாசற்ற இருதய பக்தி

கொடுக்கப்படுகிறது? முதலில் நாம் தாழ்ச்சியோடு அது அவருடைய சித்தம், விருப்பம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனைத்தான் தேவதாய் உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த சேசு ஆசிக்கிறார். (1917, ஜூன் 13, இரண்டாம் காட்சியில்) என்றும், பரிதாபத்திற்குரிய பாவிகளின் ஆன்மாக்கள் செல்லும் நரகத்தை நீங்கள் கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதயத்தின் மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார்.”(1917, ஜூலை 13 மூன்றாம் காட்சியில்) என்றும் அறிவித்தார்கள்.

ஆம்! மரியாயின் மாசற்ற இருதய பக்தி சர்வேசுரனின் விருப்பத்தால் சித்தத்தால் அருளப்பட்டது. கடவுள் இந்த பிந்திய, கடைசிக் காலங்களில் தமது மாசற்ற தாய் அதிகமாக அறியப்படவும், அனைவராலும் சங்கை செய்யப்படவும் வணங்கப்பட வேண்டும் என்றும் ஆவல் கொண்டுள்ளார். இது எந்த அளவிற்கென்றால் அந்தத் தாய்க்கு

எதிராகச் செப்பப்படும் பாவங்கள், நிந்தைகளுக்குப் பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்றும் உலகின் தீமைகளின் அச்சுறுத்தலாகத் திகழும் கம்யூனிச நாட்டை ஐக்கிய அர்ப்பணமாக மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இதன் மூலம் ரஷ்ய மனந்திரும்புதலையும், உலக சமாதானத்தையும் அடைந்து கொள்ள முடியும் என்றும் அறிவித்தார். மேலும், "இந்த அர்ப்பணத்தின் மூலம் எனது திருச்சபை முழுவதும் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றியை அங்கீகரிக்க வேண்டும் என்றும், இதனால் திருச்சபை இப்பக்தியைப் பரப்பவும், எனது திரு இருதய பக்தியோடு மரியாயின் மாசற்ற இருதய பக்தியை இனையாக வைக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.., என்கிறார் சேசு சுவாமி "(காண்க: சகோதரிலுாசியாவின்1936 மே 18 தேதியிட்ட கடிதம்).

நமதாண்டவரின் இந்த வார்த்தைகள் மிகவும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை. இவை அர்ப்பணத்தின் சரியான கருத்தை நமக்கு உணர்த்துகின்றன;

1. திருச்சபை மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றியாக இந்த அர்ப்பணத்தை அங்கீகரிக்க வேண்டும்.

2. இந்த அர்ப்பணம் மரியாயின் மாசற்ற இருதயத்தின் மீதான பக்தியின் மிகப் பெரிய துவக்கமாக இருக்கும்.

3. இந்த இரு இருதயங்களின் மீதான பக்தி என்பது, மாதாவின் இருதயத்தை சேசுவின் இருதயத்திற்கு இணையாக வைத்து வழிபடுவதைக் குறிக்கும்.

இதில் தமது தாய் மகிமைப்படுத்தப்பட வேண்டும், மாதாவின் மாசற்ற இருதயம் அவரது சொந்த இருதயத்தருகே வைக்கப்பட உண்மையாகவே தகுதியுடையது என்பது அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற தேவகுமாரனின் மிகப் பெரிய ஆவல் வெளிப்படுகிறது!

மற்றொரு காரணம்: ஆதிப் பகையைத் தீர்க்கும் தருணம் வந்துள்ளது! ஆம்! இந்தப் பிந்திய கடைசிக் காலம், மரியாயின் யுகம் என்று அழைக்கப்படுகிறது. ஆதியிலே சர்வேசுரனால் மூட்டப்பட்ட பகை அவரால் முன்னறிவிக்கப்பட்ட வெற்றி, நிறைவேறப் போகும் கேந்திரமான காலம் இதுவே என்பது திருச்சபை அறிஞர்களின் கருத்து! ஆம்! ஆதியாகமத்தில் கடவுளால் அறிவிக்கப்பட்ட போர் முடிவுக்கு வர வேண்டும். ஆதியாகமம் ஸ்திரீ (மாமரி)

அவர்களது வித்து சேசுவுடன் ஆதி சர்ப்பத்தின் தலையை நசுக்கி (காண்க: ஆதி.3:15), சாத்தானை நரக நெருப்பில் நித்தியத்திற்கும் தள்ளி வெற்றி கொள்ளும் காலம் இதுவே! ஆம்!

இதுவே மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றி! இந்த வெற்றிதான் ஆதி பிதா அறிவித்த வெற்றியின் நிறைவேற்றமாக, அதாவது மரியாயின் மாசற்ற இருதய வெற்றியாகவே இருக்கும்,

அதனைத்தான், இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்!..." (1917, ஜூலை 13 காட்சி) என்று கன்னிமாமரி பாத்திமாவில் முன்னறிவித்தார்கள்.