பாவியை மனம்திரும்பி பரிசுத்த வாழ்விற்கு வரச் செய்த செபமாலை பக்தி!

ரோம் நகரில், கேத்தரின்( Catherine  the  fair ) என்ற பெயருடைய ஒரு பெண்மணி முறைகேடான  வாழ்வு வாழ்ந்து வந்தார். ஒரு முறை புனித டோமினிக் செபமாலை பக்தியை குறித்து போதித்ததைக் கண்டு தனது பெயரையும் செபமாலைக் குழுவில் பதிவு செய்து, செபமாலை செபிக்கத் துவங்கினார். ஆனால் தனது வாழ்க்கை முறையை மாற்றவில்லை. 

ஒரு மாலைப்பொழுதில் ஒரு புனிதமான தோற்றமுடைய வாலிபன் அவரைக் காண வந்தார். அவள் அந்த வாலிபனை பணிவன்புடன் வரவேற்று உபசரித்தார். அவர்கள் இரவு உணவருந்தும் பொது, அந்த வாலிபன் ரொட்டியை வெட்டும் பொது அவரது கையில் இருந்து இரத்தம் சொட்டுவதைக் கேத்தரின் கவனித்தார். அது மட்டுமின்றி, வாலிபன் தொட்ட அனைத்து உணவிலும் இரத்தம் கலந்திருப்பதைக் கண்டார்.   

அவள் அந்த வாலிபனிடம் அதன் பொருள் என்ன என்று வினவினாள். அதற்கு அந்த வாலிபன் பதிலுரைத்தாவது," கிறிஸ்துவர்கள் உண்ணும் உணவு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் தோய்ந்து, அவரது பாடுகளால் பக்குவப்பட்டு இருக்க வேண்டும்" 

இந்த பதிலால் மிகவும் வியந்து கேத்தரின் அவரிடம்," நீங்கள் யார் என்று கேட்டார்". அதற்கு அவர், " நான் உனக்கு பின்னர் சொல்கிறேன்" என்றார்.  

அதன் பின்னர் அவ்வாலிபன்  அருகிலிருந்த அறைக்குச் சென்ற பொது அவரது தோற்றம் மாறியது. அவரது தலையில் முள்முடி சூட்டப் பட்டிருந்தது, அவரது தசைகள் சின்னாபின்னப்படுத்தப்பட்டு, கிழிந்து தொங்கியது.மேலும் அவர் கூறியதாவது, " நான் யாரென்று நீ அறிய விரும்பினாயல்லவா? என்னை உனக்கு தெரியவில்லையா? நானே உனது மீட்பர். ஓ! கேத்தரின் எனக்கெதிராய் பாவம் செய்வதை நீ எப்போது நிறுத்தப் போகிறாய்?  நான் உனக்காக அனுபவித்த வேதனைகளைப் பார். நீ என்னை வேதனைப் படுத்தியது போதும், உனது வாழ்வை மாற்றி என்னிடம் திரும்பி வா". 

கேத்தரின் மனம் உடைந்து அழுகையும் கண்ணீருமாக இருந்தபோது, இயேசு அவரை உற்சாகப் படுத்தி கூறியதாவது, "இப்பொழுது, நீ என்னை எந்த அளவு  வேதனைப் படுத்தினாயோ அதே அளவு என்னை அன்பு செய். நான் இந்த கொடையை, எனது அன்னையை மகிமைப் படுத்தும் விதமாக நீ செபித்த செபமாலைக்காக அருளியுள்ளேன்". அதன் பின்னர் அவர் மறைந்தார். 

அடுத்த நாள் காலையில் கேத்தரின் புனித டோமினிக்கிடம்  சென்று பாவ மன்னிப்பு பெற்று தன்னிடம் இருந்ததை எல்லாம் ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார். அதன் பின்னர் ஒரு புனிதமான வாழ்க்கை வாழ்ந்து அனைவருக்கும் மிகப் பெரிய எடுத்துக்காட்டாக  தவ வாழ்வு மேற்கொண்டார்.  நமது பரிசுத்த அன்னை அவருக்கு பலமுறை தோன்றினார் மேலும் நமது இறைவன் கேத்தரினின் இந்த பாவப் பரிகார வாழ்வு அவருக்கு மிகவும் விரும்பத்தக்கதாக இருந்தது என்று புனித டோமினிக்குக்கு வெளிப்படுத்தினார். 

நாமும் நமது பாவ வாழ்வை,  நமது மாமரித்தாயின் செபமாலை வழியாக கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, இந்த தவக்காலத்தில் மன மாற்றம் பெற்று, நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, நமது அன்னைக்கும், கடவுளுக்கும் உகந்த வாழ்வு வாழ உறுதி கொள்வோம்.