அருட்சகோதரி ஜோகன்னாவை பரிசுத்த செபமாலையின் உதவியால் வழிநடத்திய மாமரித்தாய்!

இளவரசர் ஒருவரின் மகள்  அனைத்தும் துறந்து கன்னியர் மடத்தில் சேர்ந்தார். அந்த மடமானது, ஆன்மீகப் பற்றற்று, கடவுளின் வழிகளை கடைபிடிக்காமல் இருந்ததால், இயல்பாகவே நல்ல குணம் கொண்ட அந்த அருட்சகோதரியின்  ஆன்மீக வாழ்வின் முன்னேற்றம் மிக மெதுவாகவே நடந்தது. 

ஒருநாள், பாவமன்னிப்பு வழங்கும் ஒரு நல்ல குருவானவரின் வழியாக தேவரகசியங்களை தியானித்து செபமாலை செபிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். செபமாலை பக்தியானது அச்சகோதரியை அம்மடத்தில்  உள்ள அனைத்து கனியர்களுக்கும் முன் மாதிரியாக மாற்றியது.   

அருட்சகோதரி ஜோகன்னா  தனக்காக தேர்ந்தெடுத்து பின்பற்றிய இந்த பக்தி முயற்சி மடத்திலிருந்த மற்ற கன்னியர்களுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. தங்களால் முடிந்த வரை அவர்கள் அருட்சகோதரியின் இந்த பக்தி முயற்சிக்கு தடைகள் வருவித்து அவர் இதனைக் கைவிட வேண்டும் என்று விரும்பினர். 

ஒருநாள் அவர் செபமாலை செபித்துக் கொண்டு இருந்த போது, அவருக்கு நடந்து கொண்டிருந்த இந்த கொடுமைகளில் இருந்து விடுதலை அளிக்க அன்னை மாமரிதாயின் உதவியை வேண்டினார்.  

அப்பொழுது ஒரு கடிதம் அவர் முன்னால் விழுந்தது. கடிதத்தின் வெளியே பின்வருமாறு எழுதி இருந்தது, " இறைவனின் தாய் மாமரிதாயிடமிருந்து அவரது மகள் ஜோகன்னாவுக்கு வாழ்த்து மடல்" 

கடிதத்தின் உள்ளே எழுதியிருந்தாவது, " எனது அன்பிற்குரிய மகளே, என்னுடைய செபமாலையை  தொடர்ந்து கைவிடாமல் செபித்து வா. உனக்கு எதிராக, உன்னுடைய செப வாழ்விற்கு உதவாத யாருடனும் கூட்டு சேராதே. சோம்பல் மற்றும் வீண் தற்பெருமைக்கு இடங்கொடாதே. உனது அறையிலிருக்கும் தேவையற்ற இரண்டு பொருட்களை விலக்கி விடு. கடவுளுடன் இணைந்து நானே உனக்கு உனக்கு பாதுகாவலியாய் இருப்பேன்".       

அதன் பிறகு தலைவரான மடாதிபதி இந்த கன்னியர் மடத்தை பார்வையிட்டார். அதன் நிலை கண்டு வருந்தி அதனை சீர்படுத்த முயற்சிகள்  மேற்கொண்டு வெற்றி பெற முடியாமல் இருந்தார்.  

ஒருநாள் அவர் பல்வேறு பிசாசுகள் கன்னியர்கள் அறைகளுக்குள்  நுழைவதைக் கண்டார் ஆனால் ஜோகன்னாவின் அறையில் மட்டும் அவைகளால் நுழைய முடியவில்லை. 

அவர் அருகில் சென்று சோதிக்கும் போது  அவர்  கண்ட கட்சி என்னவெனில், ஜோகன்னா பரிசுத்த நமதன்னையிடம் செபமாலை செபித்துக் கொண்டிருந்ததை கண்டார். நமது பரிசுத்த அன்னையே பிசாசுகளை அந்த அறையை விட்டு விரட்டிக்கொண்டு இருந்தார்!!!!!!!!! 

அதன்பின்னர் ஜோகன்னாவிடம் இருந்து, அவரின் செபமாலை பக்தியையும், அவருக்கு கிடைத்த கடிதத்தை பற்றியும் மடாதிபதி கேட்டறிந்து, அனைத்து கன்னியர்களும் செபமாலை செபித்து நமதன்னையிடம் தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று மடாதிபதி ஆணையிட்டார். 

செபமாலை செபித்து மாதாவுக்கு அர்ப்பணித்த அந்த கன்னியர் மடம் பூங்காவனமாய் மாறியது. 

நாமும் நம்மிடமுள்ள சோம்பல், தற்பெருமை, பொறாமை, கோபம், மோகம், பேராசை, கஞ்சத்தனம் ஆகிய தலையான பாவங்களை நம்மிடமிருந்து விரட்டியடிக்க பரிசுத்த தேவமாதாவின்  செபமாலையின் வழியாக மன்றாடுவோமாக!!!!!!!!