புனித சந்தியாகப்பர் பாகம் -5

இது பல வல்லரசு நாடுகளான சார்சனியர்களுக்கும், துருக்கி பிற மதத்தினர்க்கும்   ஆப்ரிக்க  நாட்டினர்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே ஸ்பெயின் மக்களுக்கும் பிற மத மக்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது.   அப்போது ஸ்பெயின் நாட்டில் அரசராக இருந்தவர் ரோமிரோ 1 . இவர் அப்போது அஸ்துரியாஸ் என்னுமிடத்தில் தன் குறைந்த படையினரோடு இந்த மிகப்பெரும் சார்செனிய 

படைகளுடன் மோதுவதர்க்கு தயாராக இருந்தார். என்னதான் அவருக்கு கடவுள் நம்பிக்கையும் தன் படைமீது நம்பிக்கையும் இருந்தாலும் ஏனோ மனம் கலக்கமுற்றார்..

தன் சைன்னியத்தினரை க்ளாவிஜோ என்னுடமித்தில் நிருத்தினார். அந்த இடத்தில் அன்றைய இரவில் புனித சந்தியாகப்பர் அரசன் ரோமிரோவின் கனவில் தோன்றி, " ரோமிரோ..நீ மனம் கலங்க வேண்டாம்..நாளைய போரில் இந்த சார்சனியர்களை எதிர்த்து உன் சார்பாக நான் போராடுவேன். வெற்றி உனதே...நான் ஒரு வெள்ளைக்குதிரையில் வெள்ளை ஆடையில் சிலுவை அடையாளமிட்ட வெள்ளைக்கொடியோடு இந்த பெரிய சார்செனிய சைனியத்தோடு போராடுவேன்... இதை நீயும் உன் வீரர்களும் மற்றும் சார்செனிய வீரர்களும் காண்பீர்கள்" என்று கூறி மறைந்து போனார். அரசன் ரோமிரோ அடைந்த சந்தோஷமும் தைரியமும் சொல்ல வார்த்தை இல்லை. அப்போதே இந்த கனவைப்பற்றி தன் படைத்தளபதிக்கும்  வீரர்களுக்கும்  அரிவித்து அந்த இரவிலேயே அந்த ஊர் வந்திக்கத்தக்க மேற்றிறாணியாரிடம் சென்று தன் கனவைத்தெரிவித்து வெற்றிகான ஆசீரும் அவரிடம் பெற்றான். 

நம் புனித சந்தியாகப்பர் கொடுத்த தைரியத்தினாலும் அவருடைய வாக்குறுதியினாலும் உத்வேகம் பெற்ற அரசனும் படையினரும் போர்க்களத்தில் பயங்கரமாகப்போரிட்டனர்.

    "என்ன ஆயிற்று இந்த கிறிஸ்த்தவர்களுக்கு " என்று ஆத்திரப்பட்டான் அந்த பிற மத படைத்தளபதி. "இந்த சின்ன சைனியத்தை வைத்துக்கொண்டு நம்மை எதிர்க்க இந்த கிறிஸ்தவர்களுக்கு  எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்..நம் படைக்குமுன் இந்த கிறிஸ்தவர்களின் படை ஐந்து நிமிடங்களூக்கு கூட தாங்காது.. மார்ரே " என்று

ஆணையிட்டான்...பயங்கர போர் ஆரம்பமாயிற்று. பிற மத படையான சார்சேனியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அவர்களுள் பலர் தலை இழந்தனர். பல கிரிஸ்த்துவ படையினரும்

பல வீரர்களும் புனித சந்தியாகப்பரை வெள்ளைக்குதிரையில் வெள்ளை உடையில் உருவிய கத்தியோடும் வெள்ளைகொடியுடனும் போர்கலத்தில் சுற்றி சுற்றி வருவதைக் கண்டார்கள்...புனித சந்தியாகப்பர் வாழ்க... புனித சந்தியாகப்பர் வாழ்க.என்று சந்தியாகப்பருக்கு ஜெயகோஷம் போட்டனர். அவ்வளவு தான்..பெரும் படைகொண்ட சார்செனிய 

சைனியம் பெரும் தோல்வி கண்டது... சந்தியாகப்பரை எதிர்க்க முடியாது.. வாருங்கள் ஓடிப்போவோம் என்று குரல் கேட்டது.. அவ்வளவுதான்.. சார்சேனியப்பெரும்படை புறமுதுகு  காட்டி ஓடியது. அன்றையப்போரில் தலை இழந்தும் வெட்டப்பட்டு இறந்தவர்களும் குறைந்தது எழுபது ஆயிரம்பேர். இப்படியாக புனித சந்தியாகப்பர் போராளி அப்போஸ்த்தலர் என்றும்  படைமிரட்டி அப்போஸ்த்தலர் என்றும் பேர்பெற்றார்.

வேறொரு  பாரம்பரிய புராணம் சந்தியாகப்பரின் போரை இவ்வாறு வர்ணிக்கிறது. மம்மலுக்கர்கள் என்றும் மூர்கள் என்றும் பேர்பெற்ற முரட்டு  கடற்கொள்ளை  வீரர்கள் அடிக்கடி  வந்து இம்மக்களை கொள்ளையிட்டு அம்மக்களை அடிமைப்படுத்தி சொல்லொண்ண்ணாக்கொடுமைகளுக்கு உட்படுத்தினர். இதனால் மனம் 

வெறுப்புற்ற கிரிஸ்த்துவ மக்கள் புனித சந்தியாகப்பருக்கு வேண்டுதல் வைத்து இனிமேல் இப்படியொரு படை எடுப்பை தேவரீர் நிறுத்த வேண்டும் என்று அழுது மன்றாடினர்.

அந்த கால கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாவாய்களில் அந்த தேசம் வந்த மூர்கள் மீண்டும் படைஎடுப்பை நிகழ்த்தினர். அப்போது வெள்ளைக்குதிரையில் வந்த சந்தியாகப்பர் அந்த முரட்டு மூர் கொள்ளையரை சங்காரம்பண்ணினார். எதிரி யார் என்று தெரியாமல் போரிட்ட அவர்கள்  தலை இழந்தனர். அப்போது சந்தியாகப்பரின் வாள்  

படைத்தளபதியின் தலை மேல் நின்றது. உடனே தளபதி சந்தியாகப்பரிடம் சரண் அடைந்தான். தான் இனிமேல் மீண்டும் இந்த இந்த  மக்களுடன் போரில் ஈடுபடப்போவதில்லை  என்று உறுதி அளித்ததாகவும் அவரது திருவிழாவை சமாதானம் முன்னிட்டும் அவரது வெற்றியை முன்னிட்டும் தன் இன மக்களுடன் ஆண்டுதோரும் கொண்டடுவதாகவும் 

வாக்குறுதியளித்தான். அன்றிலிருந்து எங்கெல்லாம் சந்தியாகப்பர் கோவில் இருக்கின்றதோ அங்குள்ள பிற மதத்தினர் சமாதானம் முன்னிட்டு சந்தியாகப்பருக்கு விழா எடுப்பதை வழக்கமாக்கிகொண்டுள்ளனர்.

" வீழ்ந்தது   " பராக்கோட்டை "

   யேசுவின் அருளாலும் தூண்மாதாவின் அருளாளும் புனித சந்தியாகப்பர் ஆசீராலும் இந்த ஸ்பெயின் மக்கள் மிகுந்த ஆசீர்பெற்றனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்த மூர் வம்சத்தவரின் ஆட்சி கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் அதாவது1492ல் முடிவுக்கு வந்தது. கி.பி.1526 ஆம் ஆண்டு சார்லஸ் 5 ஆம் அரசர் முழு ஸ்பெயின் தேசத்தையும்

தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கிறிஸ்த்துவ சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். தன் ராஜ்ஜியத்திற்கு பாது காவலராய் புனித சந்தியாகப்பரை அறிவித்தார். இப்போதும் ஸ்பெயின் தேசத்திற்கு புனித சந்தியாகப்பரை தரிசிக்கவரும் பக்தர்கள் சாரகோசாவில் உள்ள தூண் மாதாவின் பேராலயத்தையும் கிரானடா பகுதியில் அமைந்திருக்கும் இந்த அல்ஹாம்பரா

கோட்டையையும் சந்திக்காமல் செல்வதில்லை.

வாழ்க சந்தியாகப்பரின் திரு நாமம்.

முற்றும்