ஏழு தாலையாய பாவங்கள் பகுதி-2 ஆங்காரம்

நம்முடையது தன்னார்வ மனப்பாங்காக இருக்குமானால் நம் ஆங்காரம் தன்னைத் தானே சகலத்திலும் மையமாக்கிக் கொள்கிறது. சக்கரத்தின் அச்சுக் குடமாக இருக்க நாம் விரும்புகிறோம். மற்றவர்கள் நம்மைக் கவனிக்கவேண்டுமென விரும்புகிறோம். முன்கோபிகளாகவும் சிறு அவமானத்தைக் கூட தாங்க முடியாதவர்களாக இருக்கிறோம் ஆங்காரமானது புகழ், ஸ்துதி, பாராட்டுக்கள் ஆகியவற்றைத் தேடுபவர்களாக நம்மை ஆக்குகிறது. வீண் பெருமைக்குள் நாம் விழுந்து விடுகிறோம்

நம்முடையது தன்னாதிக்க மனப்பாங்காக இருக்குமானால், நம் ஆங்காரம் ஒரு பலமான மனப்போக்கில் வெளிப்படுத்தப்படுகிறது. மற்றவர்களுக்குப் பணிந்து போகவோ, அவர்களது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவோ நமக்குக் கடினமாக இருக்கிறது. பெரும்பாலும் நாம் பிறரை அடக்கியாள விரும்புகிறவர்களாகவும் விமரிசன நோக்குள்ளவர்களாகவும் வீண்வாதத்தை விரும்புகிறவர்களாகவும் இருப்போம். ஆதிக்க உணர்வால் ஆட்கொள்ளப்பட்டிருப்போம். பிறரின் உரிமைகளைப் பற்றி சிந்திக்க மாட்டோம்

நாம் நம்முடைய தவறுகளுக்கு நாமே நியாயம் கற்பித்துக் கொள்கிற மனப்பாங்கு உள்ளவர்களாக இருந்தால் நம் ஆங்காரம் இரக்கம் வசப்படுதல் ஆகியவற்றின் திரைக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறது. சீற்றம், மனக்கசப்பு, காழ்ப்புணர்வு, பகைமையுணர்வு ஆகியவை இந்த சுய இரக்கத்தோடு சேர்ந்த குணங்களாக இருக்கின்றன இந்த ஆங்காரத்தை அடையாளம் காண்பது கடினம் ஏனென்றால் அது தன்னைத் தானே மறைத்துக் கொள்கிறது எனவே அதை ஆங்காரமென நாம் ஒத்துக் கொள்வதில்லை

செயலூக்கமில்லாத மனப்பாங்கை கொண்டிருந்தால், சுய திருப்தியையும், ஆடம்பரத்தையும் தேடுமாறு நம் ஆங்காரம் நம்மை உந்தித் தள்ளுகின்றது மற்றவர்களுடைய குறைகள் நமக்கு அதிர்ச்சியளிக்கின்றன ஆனால் நம்மைப் பற்றியோ நாம் முழுத் திருப்தியுள்ளவர்களாக இருக்கிறோம்.

ஆதிக்கவுணர்வின் ஆங்காரம் மற்றவர்களின் வாழ்வை நம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும் என்ற வெறியை நம்மில் தூண்டுகிறது; நம் விருப்பங்களை அவர்கள் மேல் சுமத்துவது அவர்களை ஆதிக்கம் செலுத்தவும் விரும்புகிறோம். பிறர் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தும் போது நம் சித்தம் உறுதியானதாகவும், வளைந்து கொடுக்காததாகவும் ஆகி விடுகிறது.