தவக்கால சிந்தனைகள் 20 : சேசுவின் மறையுரை தொடர்ச்சி.. கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

என் தாயை நினைத்துப் பாருங்கள். அவர்களும் நான் போகிற இடத்திற்கு வர முடியாது. ஆயினும் நான் அவர்களிடம் வருவதற்கும் அவர்களின் மாசற்ற உதரத்தில் சேசு ஆவதற்கும் பிதாவை விட்டு வந்தேன். நான் பிறந்த நாளின் பிரகாசமான பரவசத்தில் பழுதற்ற பெண்மணியிடமிருந்து வந்தேன். அவர்களுடைய அன்பு அமுதாகி, அதனால் நான் போஷிக்கப் பட்டேன். நான் பரிசுத்தத்தினாலும், அன்பினாலும் ஆக்கப் பட்டிருக்கிறேன். ஏனென்றால் மோட்சத்தில் வாசம் செய்கிறவருடைய உத்தம அன்பினால் வளம் பெற்ற மரியாயின் கன்னிமையால் அவர்கள் என்னைப் போஷித்தார்கள்.

ஆயினும் நான் அவர்களால் வளர்ந்தேன்; அதிலே அவர்களுக்குக் களைப்பையும், கண்ணீர்களையும் கொடுத்தேன்...

ஆயினும் யாருமே அடைந்திராத வீர வைராக்கியத்தை நான் அவர்களிடம் கேட்கிறேன்... அவர்களின் வீர வைராக்கியத்துடன் யூதித்துடையவும், ஜாயேலுடையவும் வீர வைராக்கியங்களை ஒப்பிட்டால், அவை ஊர்ச்சுனையில் ஸ்திரீகள் தங்களுடன் போட்டியிடுகிற பெண்களுடன் தர்க்கிக்கிற வீரம் போலவே இருக்கும். ஆயினும் அத்தாய் என்னை நேசிப்பது போல யாருமே என்னை நேசிப்பதில்லை. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர்களை விட்டு விட்டு நான் போகிறேன். அங்கே அவர்கள் நெடுங்காலத்திற்குப் பிறகே வருவார்கள். நான் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளையாகிய:

“நீங்கள், என்னிடம் வருவதற்கு உங்கள் நேரம் வரும்போது என்னிடம் வருவதற்குக் கூடுமாயிருக்கும் பொருட்டு, வருடம் வருடமாய், மாதம் மாதமாய், நாள் நாளாய், மணி மணி தோறும் உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்” என்ற கட்டளை அவர்களுக்குப் பொருந்தாது.

அவர்கள் வரப் பிரசாதத்தாலும், புனிதத்தாலும் நிரம்பியிருக்கிறார்கள். யாவற்றையும் பெற்றுக் கொண்டு யாவற்றையும் கொடுத்து விட்ட சிருஷ்டி அவர்களே.

அவர்களிடம் கூட்டவோ, அவர்களிடமிருந்து எடுத்து விடவோ எதுவுமில்லை. சர்வேசுரனால் என்ன சாதிக்கக்கூடும் என்பதற்கு மிகப் புனிதமான சாட்சியாக அவர்கள் இருக்கிறார்கள் ".

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479