நெஞ்சார்ந்த நன்றிகள்!

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் இன்று நல்ல கத்தோலிக்கர்களாக இருப்பதற்கு நமது பெற்றோர்களும் அவர்களது பெற்றோர்களுமே காரணம். அவர்கள் நமக்கு தந்துவிட்டு சென்ற கத்தோலிக்க பாரம்பரியங்கள் நம்மை இன்றளவும் நமது கத்தோலிக்க விசுவாசத்தில் காப்பாற்றி வருகிறது. 

நம்முடைய இணையதளம் catholictamil.com ஆண்டவருடைய கிருபையால் ஆறாவது ஆண்டில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. ஐந்து வருடத்தில் மிகப் பெரிய வளர்ச்சி! களஞ்சியம் போன்ற இணையதளம், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள், 450க்கும் மேற்பட்ட புத்தகங்கள், 7,500க்கும் மேற்பட்ட புத்தக தலைப்புகள், 1,00க்கும் மேற்பட்ட ஆலய வரலாறுகள், 20,000க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்கள், 30,000க்கும் மேற்பட்ட தெலுங்கு பாடல்கள், 11 பைபிள்கள், 1,000க்கும் மேற்பட்ட வீடியோக்கள், 5 அப்ளிகேஷன்கள், 14 தளங்கள், 1,40,00,000க்கும் மேற்பட்ட உபயோகிப்பாளர்கள்! ஐந்து வருடத்தில் ஒரு இணையதளம் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் கடவுளின் அருட்கரமும், தேவ பராமரிப்புமே முக்கிய காரணம். 

30.மார்ச்.2018-ல் பெரிய வெள்ளிக்கிழமையன்று நமது இணையதளத்திற்கு அடிக்கோலிடப்பட்டது. 18.ஆகஸ்ட் 2018-ல் catholictamil.com என்னும் பெயரில் டொமைன் மற்றும் லைசென்ஸ் வாங்கப்பட்டு USA இணைய சட்டத்திற்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டது. இன்று 12 சர்வர்கள் மூலமாக 149 நாடுகளில் உலகமெங்கும் தடையின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது!

பிரான்ஸ் நாட்டின் சேவை மற்றும் சட்ட முறைப்படி வானொலி ஒலிபரப்பு லைசென்ஸ் பெறப்பட்டு 15.ஜுன்.2019-ல் முதல் வானொலி ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. அருட்தந்தை M.W.பிரவீன் அவர்கள் நேரலை திருப்பலிக்கு அனுமதியளித்து உலகெங்கும் திருப்பலிகளையும் நமது பங்கின் மறை நிகழ்வுகளையும் ஒலிபரப்ப பெருந்துணை புரிந்தார்கள். உலகிலேயே 320 KBPS HD+ தரத்தில் ஒலிபரப்பாகும் ஒரே தமிழ் இணைய வானொலி என்ற பெருமையைக் கொண்டுள்ளது! இன்று 110 நாடுகளில் வாழும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நமது தேவமாதா சர்வதேச வானொலியைக் கேட்டுப் பயனடைகின்றனர்.

திரு.ஜோஸ் அவர்கள் நம்முடன் இணைந்து சுமார் 1,000-க்கும் அதிகமான ஆலயங்களின் விவரங்களைக் கொடுத்து நம்முடைய இணையதளத்தை மேலும் விரிவுபடுத்த பெருந்துணை புரிந்தார். ஆலய வரலாறுகளுக்காக தனியே ஒரு இணையதளம் 06.அக்டோபர்.2019-ல் உருவாக்கப்பட்டது.

20-பிப்ரவரி.2022-ல் அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களும் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களும் இணைந்து புத்தக மற்றும் வானொலி அப்ளிகேஷன்களை வெளியிட்டார்கள். இன்று புத்தக அப்ளிகேஷனில் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களும், வானொலியில் 50,000-க்கும் மேற்பட்ட பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

அருட்தந்தை M.W.பிரவீன் அவர்கள் மயிலை மாதா ஆன்மீகவியல் குருமடத்திற்கு அதிபர் தந்தையாக பணிமாற்றம் பெற்று சென்றுவிட்ட பிறகு அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்கள் கீழச்சேரி பங்கிலிருந்து நமக்கு பெருந்துணை புரிந்து வருகின்றார்கள். பணிமாற்றத்திற்குப் பிறகும் இன்றுவரை அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களும் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களும் இணைந்து நமது தளங்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக இருந்து எங்கள் அனைவரையும் வழிநடத்தி வருகின்றனர்.

14.ஆகஸ்ட்.2022-ல் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களால் நமது பைபிள் இணையதளமும், பைபிள் அப்ளிகேஷனும் வெளியிடப்பட்டன. பைபிள் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும் வண்ணம் 11 பைபிள்களை வசனத்துக்கு வசனம் ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியுடன் உலகிலேயே இரண்டாவது அப்ளிகேஷனாக வெளிவந்தது. அன்றைய தினத்திலேயே kilachery parish இணையதளமும் வெளியிடப்பட்டது.

தற்போது பதிப்பகத் துறையில் கால் பதிக்கும் எண்ணத்துடன் நமது முதல் புத்தகமாக நரக சத்தியம் புத்தகத்தை நமது ஆன்மீக வழிகாட்டிகளாக இருக்கும் இரண்டு அருட்தந்தையர்களும் இணைந்து வெளியிட்டதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

முதற்கண் நமது ஆன்மீக வழிகாட்டிகளான அருட்தந்தை M.W.பிரவீன் அவர்களையும் அருட்தந்தை R.S.கிறிஸ்டோபர் ஜெயராஜ் அவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள். மேலும் தென் மாவட்டங்களின் வசிக்கும் நமது அட்மின்களை வழிநடத்தும் வேளாங்கண்ணி திருத்தலப் பேராலயத்தின் அருட்தந்தை செபஸ்டியன் அவர்களுக்கும், திருநெல்வேலி அருட்தந்தை அல்போன்ஸ் அவர்களுக்கும், பழைய புத்தகங்களை சேகரிப்பதில் பெருந்துணை புரிந்து வரும் மீனவன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அருள்மணி அவர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றோம்.

சட்ட ரீதியான பிரச்சினைகளை நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நமக்கு ஆலோசனைகள் தந்து துணைநிற்கும் வழக்கறிஞர்களான 

திரு. G.அலெக்ஸ் பென்சிகர். Madras High Court.
திரு. J.அமல்ராஜ். Madras High Court.
திரு. P.D.சுஜித். Madras High Court.
திரு. M. சுனில்ராஜ். Supreme Court of India, New Delhi. அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது முதல் வெளியீட்டான நரக சத்தியம் புத்தகத்தை மொழிபெயர்த்த திரு.ரோஜர் மொந்தினி அவர்கள் நமது இணையதளத்தின் மொழிபெயர்ப்பாளராக இருந்து ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழிகளிலிருந்து எண்ணற்ற பக்கங்களை நமது இணையதளத்தில் சேர்க்க பெருந்துணை புரிந்துள்ளார். சகோதரருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நமது புத்தக அப்ளிகேஷனுக்கு ரூ 1,00,000, பைபிள் தளங்களுக்கு ரூ 2,00,000, புத்தக வெளியீட்டிற்கு ரூ 1,00,000, போன்ற அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு, மேலும் நமது இணையதளங்களின் மாதாந்திர செலவினங்களையும் தங்களின் பங்களிப்புகளாக கொடுத்து பொருளுதவியாலும், ஜெபத்தினாலும் இந்தத் தளங்களைத் தாங்கிக்கொண்டு இருக்கும் அட்மின்கள் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்

நமது தளங்களை வடிவமைத்துக்கொடுத்து இணையத்தில் பராமரித்துவரும் 

திரு. M.Sunilraj. MSJ Technologies India Pvt Ltd.
திரு. Chellia, திரு. Guruprasad. Dreamguys Technologies Pvt Ltd. Malaysia.
திரு. Rajan. ELROI Software Solutions. 
இவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

திரு இருதய ஆண்டவர் பாதம் நமது நன்றிகளை சமர்ப்பித்துவிட்டு, நமது இணையதளத்தின் முதல் வெளியீடான நரக சத்தியம் புத்தகத்தை தங்களின் ஆசீர்வதிக்கப்பட்ட திருக்கரங்களால் வெளியிட்ட அருட்தந்தையர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்...