பொதுத் தன்மை (கத்தோலிக்கம்)

1. மெய்யான திருச்சபையின் மூன்றாம் அடையாளத்தைச் சொல்லு. 

மெய்யான திருச்சபை பொதுவாயிருக்க வேண்டும்.

2. “ பொது” என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன?

சாதாரணம் என்று அர்த்தமாகும்.

3. சேசுநாதர் தமது திருச்சபை பொதுவாயிருக்க வேணுமென்று விரும்பினாரா? 

(1) சேசுநாதர் சகல மனிதர்களும் இரட்சணியம் அடைவதற்குத் தமது திருச்சபையை ஸ்தாபித்திருக்கிறார்.

(2) உலக முடியுமட்டும் எங்கும் போய் சகல மனித ருக்கும் சுவிசேஷத்தைப் போதிக்கும்படி தமது அப்போஸ்தலர் களுக்குக் கற்பித்திருக்கிறார்.

ஆகையால் திருச்சபை யூத வேதம்போல ஒரு தேசத் துக்கு மாத்திரம் சொந்தமாயிராமல், சகல சாதி சனங்களுக்கும் பொதுவாயிருக்க வேண்டும்.

92. மெய்யான திருச்சபை பொதுவாயிருக்கிறதெப்படி?

மெய்யான திருச்சபை எக்காலத்திலும் நிலைகொண்டு, எத்திசையிலும் எல்லா சாதி சனங்களுக்கும் தனது பரிசுத்த போதனையைப் படிப்பித்து வருகிறதினாலேதான்.

1. அப்படியானால் திருச்சபை பொதுவாயிருக்கிறதென்று சொல் வதற்கு அவசியமாக வேண்டியதென்ன?

(1) திருச்சபை எக்காலத்திலும், அதாவது அப்போஸ் தலர்கள் காலமுதற்கொண்டு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.

(2) எவ்விடத்திலும், அதாவது உலகத்தின் பிரதான தேசங்களில் காணக்கூடிய விதமாயிருந்து, சேசுநாதர் படிப்பித்த போதனையை ஒரே சீராய்ச் சகல மனிதருக்கும் படிப்பித்திருக்க வேண்டும்.

(3) மேலும் அதில் சேர்ந்திருக்கப்பட்டவர்கள் மற்ற எந்தக் கிறீஸ்துவ சபையிலும் உள்ளவர்களை விடக் கணக்கில் அதிகமாயிருக்க வேண்டும்.

கீழ்த்திசையிலிருக்கும் கிரேக்க சபையும் மற்ற பிரிவினைச் சபைகளும் பொதுவாயிருக்கின்றனவா? 

நிச்சயமாக இல்லை. ஏனெனில்:

(1) 863-ம் வருஷத்துக்குமுன் அந்தச் சபைகள் இருந் ததில்லை.

(2) அந்த சபைகள் உலகத்தின் எந்தெந்தத் திசை யிலும் பரம்பியிருக்கிதில்லை. ரஷ்யாவிலும், கீழ்த்திசையிலும் இருக்கின்றனவே தவிர மற்ற தேசத்திலிருக்கிறதில்லை. மேலும் அப்படிப் பரம்புவதற்கு முயற்சி ஒன்றும் செய்வதில்லை.

3. புரோட்டஸ்டாண்டு சபைகள் பொதுவாயிருக்கின்றனவா? 

(1) புரோட்டஸ்டாண்டு சபைகள் அப்போஸ்தலர் காலத்துக்குப் பிறகு 1520-ம் வருஷத்துக்குப் பின் ஏற்பட்டன. லூத்தர் தன் கள்ளப் படிப்பினைகளைப் போதிக்கிறதற்குமுன் அந்த மதங்கள் இருந்ததில்லை.

(2) அந்த மதங்கள் எங்கும் பரம்பியிருக்கிறதில்லை. ஒவ்வொரு புரோட்டஸ்டாண்டு சபை சில தேசங்களில் காணப்படுமேயன்றி, வேறு தேசங்களிலே கிடையாது. அப்படியே புரோட்டஸ்டாண்டாரைச் சேர்ந்த ஒரு வித சபை ஒரு ஊரில் இருந்தால் அவர்களுடைய மற்ற 299 பிரிவும் அவ்வூரில் இருப்பதில்லை.

(3) புரோட்டஸ்டாண்டாருடைய தொகை மற்ற கிறீஸ்தவர்களுடைய தொகையை விட அதிகமாயிருக்கிறதில்லை.

4. கத்தோலிக்க திருச்சபை பொதுவாயிருக்கிறதா? 

(1) அப்போஸ்தலர்கள் கால முதற்கொண்டு இந்நாள் மட்டும் இருக்கின்றது.

(2) உலகத்தின் எந்தெந்தத் தேசங்களிலும் பரவியிருக்கின்றது.

(3) கத்தோலிக்கருடைய தொகை, மற்ற எந்தக் கிறீஸ்தவ சபையிலிருப்பவர்களின் தொகையைவிட அதிகமாயிருக்கின்றது. 

5. அப்படியானால் நாம் என்ன தீர்மானிக்க வேண்டும்?

கத்தோலிக்க திருச்சபை ஒன்றுக்கே தவிர, மற்ற எந்தக் கிறீஸ்துவ சபைகளுக்கும் பொது என்னும் பெயர் செல்லாது.