சேசுநாதர் சுவாமி திருநாமம்

50. (25) சுவாமி பிறந்த எட்டாம் நாள் அவருக்கு என்ன பெயரிட்டார்கள்?

சேசு என்கிற பெயரிட்டார்கள்.

1. பிறந்த கர்த்தருக்கு எந்தச் சமயத்தில் சேசு என்கிற பெயர் இடப்பட்டது?

சர்வேசுரன் அபிரகாமுக்கு இட்ட கட்டளைப்படி (ஆதி. 17:12) யூதர்கள் தங்கள் குழந்தை பிறந்த 8-ம் நாளில்தான் விருத்தசேதன சடங்கு செய்து பிள்ளைக்கு இட வேண்டிய பெயரை இடுவார்கள். ஆகையினாலே “பின்பு பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்வதற்கு எட்டு நாளானபோது, அவர் தாயின் உதரத்தில் உற்பவிக்குமுன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே சேசு என்ற நாமம் அவருக்கு இடப்பட்டது” (லூக். 2:21).

2. எந்த நாளிலே விருத்தசேதனத் திருநாள் கொண்டாடப் படுகிறது?

ஜனவரி மாதம் முதல் தேதியில்தான்.

3. பிறந்த கர்த்தருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்படும்படி சொன்னது யார்?

சம்மனசு கன்னிமரியம்மாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன போதும், (லூக். 1:31) அர்ச். சூசையப்பருக்குத் தரிசனை யான போதும் (மத். 1:21) திவ்விய குழந்தைக்கு அந்தப் பெயர் கொடுக்க வேண்டுமென்று அறிவித்தார்.

4. அப்படியானால் இந்தப் பெயர் யாரால் கொடுக்கப்பட்டது?

இது சர்வேசுரனால் கொடுக்கப்பட்டது. ஏனெனில் சம்மனசு பிதாவாகிய சர்வேசுரனுடைய கட்டளைப்படி இந்தப் பெயரைக் கொடுக்கும்படி அவர்களுக்குத் தெரிவித்தார்.

51. (26) சேசு என்கிற பெயருக்கு அர்த்தமென்ன?

நம்மை இரட்சிக்கிறவர்.

1. சேசு என்கிற பெயருக்கு இரட்சிக்கிறவர் என்று அர்த்தம் என்று நமக்கு எப்படித் தெரியும்?

தேவதூதன் அர்ச். சூசையப்பருக்குத் தரிசனையான போது சொன்னதாவது: “நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்; ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று மீட்டு இரட்சிப்பார்” என்றார் (மத். 1:21).

2. மனிதனாய்ப் பிறந்த தேவ ஆளாகிய சுதனை மாத்திரம் சேசு எனலாமா? அல்லது பிதாவையும், இஸ்பிரீத்துசாந்துவையும் சேசு எனலாமா?

மனிதனாகப் பிறந்த சுதனை மாத்திரம்தான் சேசு என்று அழைக்க வேண்டும்.

3. இரட்சகர் என்னும் பெயர் சுதனாகிய சர்வேசுரனுக்குப் பொருந்துமா?

தேவ குமாரன் நம்மை இரட்சிக்க மனுஷாவதாரம் எடுத்ததினாலும், அவராலன்றி யாதொருவரும் இரட்சணியம் அடையக் கூடாததாலும், இரட்சகர் என்னும் பெயர் அவருக்குப் பொருந்தும்.

4. சேசு என்கிற பெயர் மிகவும் உன்னதமானதோ?

ஆம்; ஏனெனில்:

(1) சர்வேசுரன் இந்தப் பெயரைக் கொடுத்தார்.

(2) “சேசு என்கிற நாமத்தைக் கேட்ட மாத்திரத்தில் மோட்சவாசிகளும், பூவாசிகளும், நரகவாசிகளும், சகலரும் முழங்காற்படியிடுவார்களாக” என்றும் (பிலிப். 2:10) வேதாகமத் தில் எழுதப்பட்டிருக்கிறது.

5. சேசு என்கிற பெயர் வல்லமையுள்ளதோ?

(1) “நாம் இரட்சணியம் அடைவதற்கு அவருடைய நாமமல்லாது வேறே நாமம் மனிதர்களுக்குக் கொடுக்கப்பட்டதே இல்லை” என்றார் அர்ச். இராயப்பர் (அப். நட. 4:12).

(2) அர்ச். இராயப்பர் பிறவிச் சப்பாணியாகிய ஒருவ னைக் குணமாக்கினபோது சேசுநாதருடைய நாமத்தினாலேதான் அவ்வற்புதத்தைச் செய்தாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம். (அப். நட. 3:2-6).

6. அப்படியென்றால், நாம் சேசு என்கிற பெயரைப் பக்தி வணக்கத்துடன் உச்சரிக்க வேண்டுமா?

நமக்குச் சோதனைகள், கஸ்தி, கஷ்டம் உண்டாகும் போதும், விசேஷமாக மரண நேரத்திலும் அந்தப் பரம பெயரைப் பக்தி விசுவாசத்தோடு உச்சரிக்க வேண்டும்.

52. கிறீஸ்து என்கிறதற்கு அர்த்தம் என்ன?

அபிஷேகம் பெற்றவர்.

1. அபிஷேகம் என்றால் என்ன?

தேவ ஊழியத்துக்காக திரு எண்ணெயைக் கொண்டு பட்டம் கொடுக்கிறது என்று அர்த்தமாகும். இப்படியே சர்வேசுரன் இட்ட கட்டளைப்படி பூர்வகாலத்தில் தீர்க்கதரிசிகள் (3 அரச. 19:16), குருக்கள் (யாத். 30:30), அரசர்கள் (1 அரச. 9:16, 16:3). திரு எண்ணெயினால் அபிஷேகம் பெற்று தேவ ஊழியத்துக்காக நியமிக்கப்பட்டார்கள்.

2. பூர்வகாலத்தில் தீர்க்கதரிசிகள், குருக்கள், அரசர்கள் திரு எண்ணெயினால் அபிஷேகம் பண்ணப்பட்டதுபோலவே சேசுநாதரும் அபிஷேகம் பெற்றாரென்று நினைக்கலாமோ?

சேசுநாதர் அவர்களைப் போல் அபிஷேகம் பெற வில்லை. ஆனால் அவர் மனுஷனாகிய மட்டும் மகா உன்னத தீர்க்க தரிசியும், பரம குருவும், இராஜாதி இராஜாவுமாயிருப்பதினால் அவரை அபிஷேகம் செய்யப்பட்டவர் அல்லது கிறீஸ்துநாதர் என்று அழைக்கிறது நியாயமே.

3. தீர்க்கதரிசி என்றால் யார்?

சர்வேசுரனுடைய பேரால் பிரசங்கித்து, தேவ சித்தத் தையும், இயற்கை நியாயங்களைக் கொண்டு முன்னறிய முடியாத சம்பவங்களையும், இனிமேல் வர இருப்பதாக முன்னதாகவே சர்வேசுரனிடமிருந்து அறிந்து அவைகளைத் திட்டமாய் அறிவிக் கிறவர்களே தீர்க்கதரிசிகளாம்.

4. சேசுநாதர் மெய்Vன தீர்க்கதரிசியா?

(1) “சேசுநாதர் சுவாமி கிரியையினாலும், வாக்கினா லும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்” என்றும் (லூக். 24:19), “இவர் கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி” என்றும் (மத். 21:11) சேசுநாதரைப் பற்றி சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறது.

(2) அவர் சர்வேசுரனுடைய பரம இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தி, நடக்க இருக்கும் அநேக வர்த்தமானங்களை முன்னதாகவே அறிவித்தபடியால் மெய்யாகவே அவர் மகா பெரிய தீர்க்கதரிசியாமே. உதாரணமாக: அர்ச். திரித்துவத்தின் பரம இரகசியம்.

5. எவ்விதம் சேசுநாதர் குருவாயிருக்கிறார்?

சேசுநாதர் சிலுவையில் பலியாகத் தம்மை ஒப்புக் கொடுத்ததுமன்றி, அந்தப் பலியைத் திவ்விய பூசையிலே புதுப்பித்து வருகிறதினாலேயும் தமது பிதாவிடம் நமக்காக மன்றாடி நமது மத்தியஸ்தராயிருக்கிறபடியினாலேயும், அவர் மெய்யான குருவா யிருக்கிறார் (எபி. 4:14).

6. அவர் இராசாவாயிருக்கிறார் என்று சொல்லுவானேன்?

(1) “பரலோகத்திலும் பூலோகத்திலும் எனக்குச் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று சேசுநாதர் சொல்லி யிருக்கிறார் (மத். 28:18).

(2) பிலாத்தென்பவன் அவரை நோக்கி: “நீ இராசாவோ?” என, சேசுநாதர் மறுமொழியாக: “நான் இராஜா என்று நீரே சொல்லுகிறீர்” என்று திருவுளம்பற்றினார் (அரு.18:37).

(3) அவர் சுதனாகிய சர்வேசுரனாக பரலோகத் தையும் பூலோகத்தையும் உண்டாக்கி, அவைகளுக்குச் சர்வ கர்த்தரா யிருப்பதினாலே, அவர் பரம இராஜாவாயிருக்கிறார்.

7. அப்படியானால் கிறீஸ்து என்னும் பெயர் சேசுநாதருக்குப் பொருந்துமா?

சேசுநாதர் சுவாமி மனுஷனாகியமட்டும் தீர்க்கதரிசி யாயும், குருவாயும், இராசாவாயும் சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட படியால் கிறீஸ்து என்னும் பெயர் இவருக்குச் செல்லும்.

8. இன்னும் வேறு எவ்விதம் சேசுநாதர் அழைக்கப்படுகிறார்?

தேவ வார்த்தையானவர் என்று அழைக்கப்படுகிறார் (அரு. 1:1, அரு. காட்சி. 19:13).

9. ஏன் அவர் அப்படி அழைக்கப்பட்டிருக்கிறார்?

நாம் நமது புத்தியின் முயற்சியினால் நினைக்கும் நினைவை மனதின் வார்த்தையென்று தத்துவ சாஸ்திரம் அழைக் கிறது. பிதாவாகிய சர்வேசுரன் தம்மை நித்தியமாய் அறிகிறதி னாலே தமக்குச் சரியயாத்த சாயலாகிய சுதனை அநாதியாய்ப் பிறப் பிக்கிறார். அதாவது தேவசுதன் பிதாவினிடமிருந்து அவரது ஞானத்தின் முயற்சியால் புறப்படுகிறார். ஆதலால் தேவசுதன் பிதா வினுடைய மனதின் வார்த்தை, அல்லது பிதாவின் புத்தியிலிருந்து புறப்படும் தேவ வார்த்தை எனப்படுகிறார்.