லூர்து காட்சி

"மாதாவின் அமலோற்பவம் - இரட்சண்ய மருந்து”

19-ம் நூற்றாண்டில் உலகத்தில் நடைமுறை நாஸ்தீகம் புகுந்தது. இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மனித அறிவாற்றலால் வாழ்க்கை முறை மாறியது. கடவுளை விட்டு உலகம் விலகத் தொடங்கியது. மனிதன் தன் சிருஷ்டிகரையும் இரட்சகரையும் புறக்கணிக்கத் தொடங்கினான். மனுக்குலத்தின் இந்த நோய் திருச்சபையிலும் பரவியது. உலகத்தின் உப்பாகவும் ஒளியாகவும் ஏற்படுத்தப்பட்ட சத்திய திருச்சபையின் பலத்த சோதனை காலம் தொடங்கி இந்நாள் வரையிலும் அது வேத கலாபனைகளாக விசுவாசிகளை இம்சித்து வருகிறது. இதற்கு சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட இரட்சண்ய மருந்து: மாதாவின் அமலோற்பவமே! நான்

மாம்சமெடுத்த அமலோற்பவமாகிய தேவ அன்னை

1858-ம் ஆண்டு லூர்துபதியில் தன்னை வெளிப்படுத்தினார்கள். அவ்வருடம் மார்ச் 25-ம் தேதி அவர்களைக் காட்சி கண்ட சிறுமி அர்ச். பெர்னதெத்: “உங்கள் பெயரென்ன?” என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில்,

- “நாமே அமலோற்பவம்” என்று கூறினார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் 9-ம் பத்திநாதர், மாதா அமலோற்பவியாக உற்பவித்தார்கள் என்பதை விசுவாச சத்தியமாக அறிவித்திருந்தார். இது மிக ஆழமுடைய சத்தியமாதலால், மாதாவின் பெயர் “அமலோற்பவம்” என்று சொல்லக் கேட்டதும் லூர்துபதியின் பங்குக்குரு அதிர்ச்சியடைந்தார். மீண்டும் மீண்டும் சிறுமி பெர்ன தெத்தை அதட்டினார். அவளோ தனக்கு அது என்ன வென்றே தெரியாதென்றும், அவ்வார்த்தையை தான் மறந்து விடாதிருக்க மசபியேல் கெபியிலிருந்து பங்குக் குருவிடம் வந்து அதைச் சொல்லும் வரையிலும் அமலோற்பவம், அமலோற்பவம் என்றே சொல்லிக் கொண்டு வந்ததாகவும் கூறினாள். 

அமலோற்பவம்

மாதா அமலோற்பவமாகவே இருக்கிறார்கள். நித்தியத்தில் சர்வேசுரனிடத்தில், அவரிடமிருந்து புறப்பட்ட சிருஷ்டிக்கப்பட்ட அமலோற்பவமாகவும், பின்னர் அர்ச். அன்னம்மாளின் குமாரத்தியாக உற்பவித்த போது மாம்சமெடுத்த அமலோற்பவமாகவும் இருக்கிறார்கள். நம் இரட்சண்ய மருந்தாக வந்த அமலோற்பவமே கடவுளின் தாயாகி, மனுக்குலத்தின் சகல தீமைகளி லிருந்தும் நம்மைக் காப்பாற்றும் மருந்தாகிறது. இவ்விறுதிக் கால விசுவாச மறுதலிப்புகளிலும், திருச்சபையின் அக வேத கலாபனைகளிலும், உலகத்தின் ஆபத்துக்களிலும் நம் கேடயமும் இரட்சிப்பின் துறையாகவும் இருப்பது நம் அமலோற்பவத் தாயே ஆவார்கள். மாதாவின் அமலோற்பவத்தால், நாங்கள் “பாவக்கறையில்லாமல் உம்மிடத்திற்கு வர,” “எங்கள் பாவங்களுக்கெல்லாம் பொறுத்தலைத் தந்தருளும்படி உம்முடைய மாசற்ற உற்பவத்தை மிகுந்த பக்தியுடன்” கொண்டாடி வருகிறோம். மாதாவின் மந்திர மாலையில் இவை காணப்படுகின்றன. “மந்திரமாலை” என்பதே மாதாவுடைய அமலோற்பவத்தை நாம் நம் தகுதிப்படி பெற்றுக் கொள்ளச் செய்கிற ஜெபம்தான்.

லூர்து காட்சிக்குப் பின்...