பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை

1. விசுவாசப் பிரமாணத்தின் 9-ம் பிரிவைச் சொல்லு.

“பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையையும், அர்ச்சிய சிஷ்டவர்களுடைய சமுதிதப் பிரயோசனத்தையும் விசுவசிக் கிறேன்.” 

2. இந்தப் பிரிவிலே எத்தனை பாகங்கள் உண்டு?

சேசுநாதர் சுவாமியால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு பொதுச்சபை உண்டென்றும், அதில் சேர்ந்தவர்களெல்லோரும் ஐக்கியமாயிருந்து, அதின் ஞானப் பொக்கிஷத்தில் பங்கு அடைகிறார்களென்றும் இப்படி இரண்டு விஷயங்கள் இந்தப் பிரிவில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

3. இஸ்பிரீத்துசாந்துவைப் பற்றி எட்டாம் சத்தியத்தில் சொன்ன வுடன் ஏன் திருச்சபையைப் பற்றி ஒன்பதாம் சத்தியத்தில் தொடர்ந்து சொல்ல வேண்டும்?

ஏனெனில், திருச்சபையின் ஸ்தாபகராகிய சேசுநாதர் எப்போதும் திருச்சபையோடு இருந்தாலும், சகல பரிசுத்ததனத் துக்கும் மூலமும், பரிசுத்ததனத்தை அளிப்பவருமான இஸ்பிரீத்து சாந்துவிடமிருந்துதான் திருச்சபை தன் பரிசுத்ததனத்தைப் பெற்றுக் கொள்ளுகிறது. சேசுநாதர் ஆரோகணமான பிறகு இஸ்பிரீத்து விடமிருந்துதான் திருச்சபை தன் பரிசுத்தத்தனத்தைப் பெற்றுக் கொள்ளுகிறது. சேசுநாதர் ஆரோகணமான பிறகு இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரன் அவருடைய இரட்சண்ணிய வேலையைப் பூர்த்தி செய்வாரென்று இதனால் விளங்குகிறது.

4. “பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்” என்பதில் என்ன விசுவசிக்கிறோம்?

(1) சேசுகிறீஸ்துநாதர் இவ்வுலகத்தில் சீவித்தபோது ஓர் சபையை ஸ்தாபித்து, அதைத் தமது திருச்சபை என்று அழைத்தார் என்றும்,

(2) இந்தச் சபையை எப்போதும் நிலைத்திருக்கும்படி யாக ஸ்தாபித்தாரென்றும்,

(3) இந்தச் சபை இன்னும் நீடித்திருக்கிறதென்றும்,

(4) இந்தச் சபை சுபாவத்துக்கு மேற்பட்ட சபை, காணக் கூடிய சபை, பரிசுத்த சபை, பொதுவான சபையென்றும்,

(5) மனிதர் நித்திய ஈடேற்றத்தை அடைவதற்கு இந்தச் சபையில் சேர வேண்டுமென்று விசுவசிக்கிறோம்.