மாதாவின் ஏழு வியாகுலங்களின் ஜெபமாலை

இந்த ஜெபமாலையில் ஏழு மணிகள் கொண்ட ஏழு தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கு முன்பாகவும் ஒரு பதக்கம் உள்ளது. பதக்கத்தில் பரலோக மந்திரம் சொல்லப்பட வேண்டும். அதன்பின் ஒவ்வொரு மணியிலும் அருள்நிறை மந்திரங்கள் சொல்லியபடி, மரியாயின் ஏழு வியாகுலங்களில் ஒன்றை தியானிக்க வேண்டும். இவ்வாறு ஏழு வியாகுலங்களும் தியானிக்கப்பட வேண்டும். முடிவில், மரியாயின் வியாகுலமுள்ள கண்ணீருக்குத் தோத்திரமாக மூன்று அருள்நிறை மந்திரங்கள் சொல்லப்பட வேண்டும்.