மாதா இனை மீட்பர்: ஏன் ? பகுதி-5

“ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும் “ – லூக்காஸ் 2 : 35

சிமியோன் யாருக்காக… ஏன் இந்த தீர்க்க தரிசனத்தைச் சொன்னார்?

அவரின் இந்த தீர்க்கதரிசனம் சற்று வித்தியாசமாக இருப்பதை காணலாம்....

பாடுகள் படப்போவது யார் ? இரத்தம் சிந்தப்போவது யார்? சிலுவையில் அறையப்படப்போவது யார்? மக்களை மீட்கப்போவது யார்? எல்லாமே செய்யப்போவது இயேசு சுவாமிதானே! அப்படியானால் அவருக்குத்தானே இந்த தீர்க்க தரிசனம் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.. மாறாக.. ஏன் அது ஏன் மாதாவுக்கு சொல்லப்பட்டது..

“ சந்தோசமான தீர்க்க தரிசனங்கள் எல்லாம் இயேசுவுக்கு கொடுக்கப்படுகிறது…

ஆனால் பாடுகள் கொண்ட பயங்கரமான வேதனைமிக்க தீர்க்க தரிசனம் மாதாவுக்கு கொடுக்கப்படுகிறது..  இங்குதான் சிந்திக்க வேண்டும்..

இதில் ஒரு இரகசியம் ரகசியம் மறைந்திருக்கிறது.. 

அந்த இரகசியம் இயேசுவின் இருதயமும் மாதாவின் இருதயமும் ஒன்றே என்பதை நமக்குச் சுட்டிக்கோட்டுகிறது..

இங்கு அடித்தால் அது அங்கு வலிக்கும்  அங்கு அடித்தால் அது இங்கு வலிக்கும் என்கிறது அந்த இரகசியம்..

நாம் பாவத்தால் இயேசு சுவாமியின் திரு இருதயத்தை அடித்தால் அப்போது மாதாவின் மாசற்ற இருதயம் வலிக்கும்..

அதே போள் மாதாவின் அமல உற்பவத்திற்கு எதிராகவோ.. கன்னிமைக்கு எதிராகவோ.. தாய்மைக்கு எதிராகவோ தப்பரைகள் புகுத்தப்படும்போதும்.. அவதூறுகள் பரப்பப்படும்போதும்.. அவசங்கைகள் செய்யப்படும்போதும் அதாவது மாதாவுக்கு அடி விழும்போது முதலில் குத்திக் கிழிக்கப்படுவது இயேசு சுவாமியின் திரு இருதயமே..

பிரிவினை சபையினரும்..  வேறு சிலரும்  நேரிடையாகவோ.. மறை முகமாகவோ.. மாதாவின் மாசற்ற இருதயத்தைக் குத்தும்போதெல்லாம்.. வலிப்பது இயேசுவின் திருஇருதயம்தான் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டால் கண்டிப்பாக மாதாவின் மாசற்ற இருதயத்தை அடிப்பதை நிறுத்திவிடுவார்கள் ( அவர்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்).

இப்போது கல்வாரிக்கு வருவோம்.. வெளியே தெரியக்கூடிய ஆண்டவர் இயேசுவின் முள்முடி ஆண்டவரின் சிரசைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.. வெளியே தெரியாத முள்முடி ஒன்று மாதாவின் மாசற்ற இருதயத்தை குத்திக் கிழித்துக்கொண்டிருக்கிறது.. 

ஒருவர் உடலால் முற்றும் வருந்தி இரத்தம் சிந்தி வேதனையால் குத்திக் கிழிக்கப்பட்டிருக்கிறார்.. இன்னொருவர் உள்ளம் முழுவதும் வேதனைப் பிழம்பால் தாக்கப்பட்டு நொருங்குண்டு கிழிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டு… ஆனாலும் அதை வெளிப்படையாக் காட்டிக்கொள்ளாமல் இரகசியமாக பிதாவுக்கு மட்டும் தெரியும் விதத்தில் அதை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.. 

மாதா உடலாலும் வேதனைப்பட்டார் என்பதும் 100 சதவீதம் உண்மை.. குறைந்த பட்சம் பசி தாகம் மற்றும் அலைச்சல் மகனோடு நடைப்பயணம் களைப்பு, ஆகியவற்றால் துடித்திருப்பார்கள். அவர் மகன் ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமலும்.. உண்ணாமலும் இரத்தப் பிழம்பாக இருக்கும் போது அந்த அன்புத்தாயால் எப்படி நீர் அருந்தவோ.. உண்ணவோ முடியும்… இதைத்தவிர்த்து தள்ளு முள்ளு வசை மொழிகள் மேலும் பல இன்னல்களும் சேர்ந்திருக்கும்..

இப்படி பல வழிகளில்.. ஆண்டவர் இயேசுவோடு சேர்ந்து மாதாவும் துன்பப்பட்டு ஆண்டவர் இயேசுவின் முள்முடியை.. சிலுவைப்பாடுகளை இருதயத்தில்  தாங்கியதால்தான் மாதா இணை மீட்பராகிறார்கள்..

இயேசுவின் திருஇருதய முள்முடி தாங்கிய படமும்… மாதாவின் மாசற்ற இருதயத்தை முள்முடி தாங்கிய படமும் உணர்த்துவது இதையே.. கத்தோலிக்க திருச்சபை எல்லாவற்றையும் சரியாகவே போதிக்கிறது..

எல்லாவற்றிக்கும் மேலான ஒரு பெரிய உண்மை… இந்த தீர்க்கதரிசன நிறைவேற்றம். மறை பொருளாகவும்.. வெளிப்பாடு பைபிள் ஆதாரம்…

கல்வாரியில் ஆண்டவர் இயேசுவின் திருஇருதயம் ஈட்டியால் குத்தப்பட்டபோது.. ஆண்டவர் ஏற்கனவே இறந்திருந்தார்.. ஆகையினால் அவர் குத்தப்பட்டபோது அவருக்கு வலி ஏற்படவில்லை.. யாருக்கு ஏற்பட்டது அதன் வலி நம் பரிசுத்த தேவமாதாவிற்கே.. ஏற்கனவே வேதனையில் ஏற்கனவே வியாகுல வாளால் அவர் மாசற்ற இருதயம் குத்திக் கிழிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒரு வாள் ஊடுறுவிக் குத்த வேதனைக்கு மேல் வேதனை.. ஏற்கனவே வெந்திருந்த புண்ணில் மேலும் ஒரு வேலாக ஒரு வாள்..

இந்த பைபிளின் தீர்க்க தரிசன வார்த்தையான  “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும் “ என்பதிலிருந்து இரண்டு உண்மை புலனாகிறது..

1. ஆண்டவர் இயேசுவின் திருஇருதயமும், மாதாவின் மாசற்ற இருதயமும் ஒன்றே..

2. ஆண்டவர் இயேசுவோடு இனைந்து பாடுபட்டதால் “மாதா இனை மீட்பர்”.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !