தேவமாதா யார்? பகுதி-50 : சேசுவின் இருதயத்தையும், மாதாவின் இருதயத்தையும் ஒரு காலமும் யாராலும் பிரிக்க முடியாது!

“படை வீரன் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் நீரும் வெளிவந்தன”.

அருளப்பர் 19 : 34

“உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “

லூக்காஸ் 2 : 35

முன்பொரு பகுதியில் பார்த்தோம்.. மாதாவின் இருதயமும், இயேசு சுவாமியின் இருதயமும் ஒன்றே என்றும் அது ஏன் என்றும் பார்த்தோம்..

சிமியோன் ஏன் இப்படி ஒரு தீர்க்க தரிசனத்தைச் சொல்ல வேண்டும்..?

அதையும் ஏன் ஒன்றுக்குள் ஒன்றை மறைத்து அதை ஒன்றாக சொல்ல வேண்டும்..?

ஏனென்றால் அங்கு இருப்பவை இரண்டல்ல.. இரண்டும் ஒன்றே..

மேலும் இதில் ஒரு ஒப்புமையையும் நம்மால் கண்டுபிடிக்க முடியும்..

சிமியோன் “ “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்று சொன்னபோது இயேசு சுவாமி 8 நாள் குழந்தையாக பாலன் இயேசுவாக இருந்தார்..

சிமியோன் அதைச் சொல்லிக்கொண்டிருந்த போது பாலன் இயேசு கைகளையும், கால்களையும் ஆட்டி கண்ணங்களில் குழி விழும் அளவுக்கு நன்றாக சிரித்துக் கொண்டிருந்திருப்பார்..

இல்லையென்றால் மாதாவின் தோலில் இந்த உலகத்தையே மறந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்திருப்பார்..

அந்த தீர்க்க தரிசனமே மாதாவின் உள்ளத்தை ஊடுறுவியிருக்கும்..

அப்போதே மாதாவின் இருதயம் கிழிக்கப்பட்டிருக்கும், அது பிழியப்பட்டிருக்கும்..

அப்போது அந்த வலியையும், வேதனையையும் அனுபவித்தது மாதா மட்டும்தான்..

அதுவும் கடவுளுக்கு தாயான எட்டே நாட்களில்.

இப்போது கல்வாரியில் அந்த தீர்க்க தரிசனம் நிறைவேறுகின்ற நேரத்தில் .. 

அதாவது அந்த தீர்க்க தரிசனத்தின் உச்சப்பகுதியான நிறைவுப்பகுதியில் சேசு உயிரோடு இல்லை..

அப்போதும் அந்த வலியையும், வேதனையையும் அனுபவித்தது தேவமாதாதான்..

மாதாவுக்கு சொல்லப்பட்டபோது அது சேசுவுக்கும் சேர்த்துதான் சொல்லப்பட்டது.. சேசு அதை நிறைவேற்றும்போது மாதாவும் சேர்ந்துதான் அதை நிறைவேற்றுகிறார்கள்..

ஒன்றுக்குள் ஒன்று.. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை..

பார்வைக்கு இரண்டுபோல் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றுதான்..

அதனால்தான் ஆன்றோர், சான்றோர், வேதாகம அறிஞர்கள், மறை நூல் அறிஞர்கள் எல்லோரும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்..

சேசுவின் இருதயமும், மாதாவின் இருதயமும் அன்பினால் ஒரே பந்தனமாக இணைக்கப்பட்டுள்ளன என்று..

இரண்டு இருதயத்தையும், ஒரு காலமும் யாராலும் பிரிக்க முடியாது..

சேசு சுவாமி மார்கரேட் மரியம்மாளுக்கு முள்முடிகளால் சூழப்பட்ட தன்னுடைய இருதயத்தை காட்டி ஆறுதல் கேட்பார்..

மாதா தன்னுடைய முள்முடியால் சூழப்பட்ட இருதயத்தை பாத்திமா சிறுமியான லூசியாவிடம் காட்டி ஆறுதல் கேட்பார்கள்..

அப்படியானால் ஒரு இருதயத்திற்கு ஆறுதல் கொடுக்கும்போது இன்னொரு இருதயத்திற்கும் அது போய் சேருகிறது..

ஆண்டவருக்கு கொடுக்கும் ஆறுதல் மாதாவுக்கு போய் சேருகிறது..

மாதாவுக்கு கொடுக்கப்படும் ஆறுதல் அது சேசுவுக்கும் போய் சேருகிறது..

அப்படியானால் இன்னொன்றையும் நான் நினைத்துப்பார்க்க வேண்டும்..

ஒரு இருதயம் குத்தப்படும்போது.. இன்னொரு இருதயமும் குத்தப்படுகிறது..

ஒரு இருதயம் கிழிக்கப்படும்போது இன்னொரு இருதயமும் கிழிக்கப்படுகிறது..

ஆறுதல் கொடுக்கப்படும்போது அது பலுகிப்பெருகி இரட்டிப்பாகிறது..

வேதனைக் கொடுக்கப்படும்போது அதுவும் பலுகிப்பெருகி இரட்டிப்பாகிறது..

இங்கு நாம் ஒரு உண்மையை உணர்ந்து வேதனைப்பட வேண்டும்..

நாம் நமது பாவத்தால் ஆண்டவர் இயேசுவின் இருதயத்தைக் குத்தும்போது மாதாவின் இருதயமும் குத்திக்கிழிக்கப்படுகிறது..

ஆகையால் நாம் பாவம் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவேண்டும்..

நாம் மாதாவை நேசிப்பது உண்மையென்றால், நம்முடைய அன்பு உண்மையென்றால் நம் பாவத்தால் ஒருபோதும் அவர் மகனின் இருதயத்தைக் குத்தக் கூடாது..

இப்போது சொல்லுங்கள் மாதாவின் பணி ஏன் தொடர்கிறது என்று.. அதற்கு மாதாவா காரணம் ? இல்லை.. அது மாதாவுக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பணி..

ஒருவேளை அது கொடுக்கப்படவில்லையென்றாலும் மாதாவின் வேதனை பண்மடங்காக அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கும்..

மாதாவின் அளவுக்கு அதிகமான வேதனையைக் குறைக்க அது கடவுளால் மாதாவுக்கு கொடுக்கப்பட்ட பணி.

மாதாவின் பணி ஓயப்போவது இல்லை.. அது ஓயாது..

இந்த சிந்தனையோடு மாதாவோடு 15 நிமிடங்கள் தங்கியிருந்து ஆண்டவருடைய பாடுகளில் பங்கேற்போம் மாதாவோடு..

இதை இன்னொரு கோணத்திலும் சிந்திக்கலாம்.. கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !