சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 49

சேசுவின் திரு இருதயத்திற்கு அக்களிப்பும், நமது ஆத்துமத்துக்கு மிகுந்த பலனும் தருவதற்கு சேசுவின் திருச் சரீரமும், திரு இரத்தமுமாகிய தேவ நற்கருணையை அடிக்கடி உட்கொள்வதைப்போல் உத்தமமானது வேறொன்றுமில்லை சாதாரண உணவு சரீரத்தைப் போஷிப்பது போல இப்பரம ஞான உணவானது நமது ஆத்துமத்திற்கு தேவாமிர்த போசனமாயிருக்கும்

எனவே சற்பிரசாத வணக்கமும், சேசுவின் திரு இருதய பக்தியும் நம்மை சேசுவின் அந்நியோந்நிய நேசத்திற்கு அழைத்துச் செல்லும். அவரது திருச்சரீரத்துக்கும், நம்மேல் வைத்த சிநேகத்தால் பற்றியெரியும் அவரது திரு இருதயத்திற்கும் ஆராதனை வணக்கம் செய்யும், அர்ச். மர்க்கரீத் மரியம்மாள் திரு இருதய நண்பர்கள் யாவரும், திவ்விய நற்கருணையில் சேசுவின் நேசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். 

அவர்கள் அடிக்கடி அவரது நேசத்தின் தேவதிரவிய அநுமானத்தில் அவரைச் சந்தித்து, மனிதர்களுடைய அவசங்கையையும், நன்றி கெட்டதனத்தையும் பரிகரிக்க ஆவல் கொண்டிருக்கிறார்கள் தங்கள் இருதயத்தின் தேவனும் தேவனின் திரு இருதயத்தையும் தங்கள் இருதயத்தில் தேவநற்கருணை வழியாய் உட்கொள்ள ஆவலோடு ஆசித்திருக்கிறார்கள். ஆகையால் நாமும் எல்லா இடங்களிலும் சேசுவின் திரு இருதயத்தைத் தேடுவோமாக. ஆனால் அதை எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தெய்வீக நேசத்தின் தேவதிரவிய அநுமானமாகிய நற்கருணையில் தேடக்கடவோம்

ஜூன் மாதம் சேசுவின் திரு இருதய மாதம். சேசுவின் திரு இருதய மாதம் எந்தெந்தக் கோவில்களில் கொண்டாடப் படுகின்றதோ, அந்தந்தக் கோவில்களை வணக்க மாதத்தின் கடைசி நாளாகிய ஜூன் மாதம் 30-ம் தேதி சந்திக்கிறவர் களுக்கு ஒவ்வொரு தடவையும் பரிபூரணப் பலன் உண்டு

திரு இருதய மாதம் ஆடம்பரத்தோடு கொண்டாடப் படுகிற கோவில்களில் பிரசங்கம் பண்ணுகிற குருக்களுக்கும் கோவில் விசாரணைக்காரருக்கும் மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையில் பரிபூரணப் பலன் உண்டு

இப்பக்தி முயற்சியைப் பரவச் செய்கிறவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற பலன்களாவன : அவர்கள் செய்கிற ஒவ்வொரு நல்ல செயலுக்கும் 500 நாள் பலன்

ஜூன் மாதத்தில் திவ்விய நன்மை வாங்கும்போதெல்லாம் பரிபூரணப் பலன். (அர்ச். பத்தாம் பத்திநாதர்)

தொடரும்...