மாதா இனை மீட்பர்: ஏன் ? பகுதி-3

“ ஆயினும் மனுமகன் வரும்போது விசுவாசத்தைக் காண்பாரோ “ லூக்காஸ் 18 : 18

மாதா விசுவாசத்தின் தாய்.. ஆண்டவர் தேர்ந்தெடுத்த 12-ல் 11 பேரும் ஆண்டவரைக் கைது செய்யும்போது ஓடி விட்டார்கள்.. ஆண்டவருக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னவர் மறுதலித்தார்.. ஆண்டவருக்கு நெருக்கமான சீடர்களின் தாயும், ஆண்டவரை அதிகமாக நேசித்த முதலில் பாவியாக இருந்தாலும் பின்பு புனித வீர மங்கையாக திகழ்ந்தவரும், இன்னும் சில பெண் சீடர்களும் ஆண்டவரை அடக்கம் செய்த பின்பு என்ன செய்தார்கள்.. ஆண்டவரின் திருவுடலுக்கு வாசனை திரவியம் பூசுவதற்காக கல்லறைக்கு சென்றார்கள்.. எதற்காக வாசனை திரவியம் பூசுவார்கள். சரீரம் கெட்டுவிடக்கூடாதென்று.. அப்படியானால் அவர்கள் ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை..

ஆண்டவர் எத்தனை முறை சொன்னார் “மனுமகன் பாடுகள் பல படவேண்டும்… சிலுவையில் அறையப்பட்டு மரிக்க வேண்டும் பின்பு அவர் மூன்றாம் நாள் உயிர்தெழுவார் “ என்று. அவருக்கு நெருக்கமானவர்களே அவரை விசுவசிக்கவில்லையே.. வேறு சில ஆண் சீடர்களும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டாலும் கடைசிவரை ஆண்டவருக்கு துணை நிற்க வில்லையே.. 

விசுவசித்தது ஒரே ஆள்தான்.. அது நம் தேவதாய் மட்டும்தான்.. அவர் அந்த பெண்கள் கூட்டத்தில் இல்லை.. கடைசி வரை கடவுளோடு தன் மகனோடு கல்வாரியில் உடனிருந்தார்.. அதன் பின்பும் தன் மகன் உயிர்த்தெழுவார் என்று காத்திருந்தார்.. கல்வாரிப்பலி முடிந்துவிட்டது.. ஆண்டவரை அடக்கம் செய்தாகிவிட்டது.. மற்ற எல்லோரும் ஆண்டவரை ஒரு தூதராகவோ, இறைவாக்கினராகவோ.. நல்ல மனிதராகவோ மட்டும்தான் பார்த்தார்களே தவிர அவரை மெசியாவாகவோ, கடவுளாகவோ யாரும் பார்க்கவில்லை.. கடைசிவரை தன் மகன் கடவுள் என்று விசுவசித்த ஒரே ஆள் தேவமாதா மட்டும்தான்.

பெரிய வெள்ளியின் இரவு எப்படி இருந்திருக்கும்? மிகக்கொடிய பெரிய சித்திரவதைக் கொலை.. அதாவது கடவுள் கொலை  நடந்து அவரை அடக்கம் செய்துவிட்ட இரவு.. அந்த இரவு அவருடைய மற்ற 11 சீடர்களுக்கு எப்படி இருந்திருக்கும்.. தங்கள் உயிரக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் ஓடி ஒளிந்திருந்தாலும் இப்படி ஒரு நல்லவரை.. நல்ல போதகரை விட்டுவிட்டு ஓடிவந்து விட்டோமே என்ற குற்ற உணர்வோடு… கூனி குருகி வருத்ததுடனும், கவலையுடனும், பயத்துடனும் அவர்கள் பதுங்கி இருந்த இரவு..

அந்த இரவில் அனைவருக்கும் அடைக்கலமாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும், நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் இருந்தது மாதா.. மாதா.. மாதா மட்டும்தான்.. அந்த ஒரு கொடுமையான இரவில், வியாகுலத்தில் உச்சத்தில், மகனை பிரிந்த ஆழ்ந்த துயரத்தில் இருந்தாலும் சீடர்களை குறித்த கவலையோடு அவர்களை அழைத்து வர.. ஒன்று சேர்க்க அந்த துயரமிக்க இரவிலும் ஆளை அனுப்பி வரச்செய்து ஜெபித்து அவர்களை ஆறுதல் செய்தார்கள்.. 

மிகச் சரியாக சொல்ல வேண்டும் என்றால்.. ஆண்டவர் விட்டு சென்றிருந்த மீதமுள்ள பாடுகளை அனுபவித்து அவருடய ஆண்டவரின் உயிப்பிற்காக விசுவாசகாத்திருந்த ஒரே ஆள் ! விசுவாசத்தின் தாய் மாதா ! மாதா மட்டும்தான்.. மாதாவுக்கு, கடவுள் சோதனை கொடுக்கவில்லையா.. எத்தனையோ அடுக்கடுக்காகாக .. கொடுத்திருப்பார்.. 

அத்தனையையும் தாண்டி.. இறுதிவரை  நிலைத்து நின்ற தாயை கடவுளின் இணை மீட்பர் என்று சொல்லாமல் வேறு எப்படி எந்த சொல்லால் அழைக்க முடியும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !