தேவமாதா யார்? பகுதி-34 : மாதாவை யார் யாரெல்லாம் புகழ்கிறார்கள்?

“ அவளுடைய புதல்வர் எழுந்து அவளைப் பேறுடையாள் என்று முழங்கினார்கள் “

பழமொழி ஆகமம் ( நீதி மொழிகள்) 31 : 28

“ இதோ ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே “

லூக்காஸ் 1 : 48

மாதாவின் பிள்ளைகளான நாம் மாதாவை வாழ்த்துகிறோமா? இல்லையா?

“ அருள் நிறைந்த மரியாயே வாழ்க ! “ என்று

பழமொழி ஆகமத்தில் ஒலித்த அதே இறைவார்த்தை லூக்காஸிலும் ஒலிக்கிறது.. அதுதான் பைபிள்..

வேறு யார் மாதாவைப் புகழ்ந்தது?

“ அவள் கணவனும் அவளைப் புகழ்ந்தான்” – பழமொழி ஆகமம் 31 : 28

“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! உம்முடைய திருவயிற்றின்  கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே”

லூக்காஸ் 1 : 42

எலிசபெத்தம்மாள் பரிசுத்த ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு கூறிய இறைவார்த்தையில் உண்மையிலேயே புகழ்ந்தது மாதாவின் உண்மையான கணவனான ‘பரிசுத்த ஆவியானவர்’தான்..

இப்போதும் பழமொழியாகமமும், லூக்காஸும் ஒத்துப்போகிறதல்லவா?

ஆதனால்தான் பைபிளை எப்படிப் படிக்க வேண்டும் என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறுகிறார்..

“ ஆண்டவரின் நூலில் கவனமாய்த் தேடிப் படியுங்கள். இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய்விடாது”

இசையாஸ் 34 : 16

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் படித்தால்.. ஆளுக்கொரு விளக்கம் சொன்னால்… அதற்கும் சிலர் காது கொடுத்தால்..அவர்களுக்குத் தான் கேடு வரும்.. பைபிளும், அதன் உண்மையான விளக்கமும் அப்படியேதான் இருக்கும்.. மாற்றிச் சொன்னவர்கள் மாறிப்போய் எங்கேயோ கிடப்பார்கள்..

மாதாவின் பிள்ளைகள் மாதாவைப் புகழ்கிறார்கள்… அவர்கள் ஜெபமாலை ஜெபிக்கிறார்கள்.. ஜெபமாலையின் மூலமாக மாதாவை மாதாவின் பிள்ளைகளான நாம் வாழ்த்துகிறோம்..

நாம் யார் என்று இறைவார்த்தை தெளிவாகச் சொல்லுகிறது..

“எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே “

தலைமுறைகள் இருப்பது யாருக்கு.?. மனிதர்களுக்கு.. அப்படியானால்..

மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருமே மாதாவை வாழ்த்த வேண்டும்.. இது நாம் சொல்லவில்லை பைபிள் சொல்லுகிறது…

அதனால்தான் கத்தோலிக்கர்களாகிய நாம் ஜெபமாலை ஜெபித்து நம் தாயை வாழ்த்துகிறோம்..

நாம் மனிதர்கள்.. நமக்கு தலைமுறைகள் இருக்கிறது.. 

“ அய்யையோ… ஜெபமாலைலாம் சொல்லக் கூடாது.. அதை தூரப்போட்டு விடுங்கள்.. அந்த மரியாளைப் புகழக்கூடாது.” ன்னு யாராவது சொன்னால் அவர்கள் யார்.? மாதாவை புகழாத அவர்கள் தலைமுறை இல்லாதவர்கள் என்று அர்த்தம் ஆகிறது..

தூரத்திலிருந்து வந்து.. தூரத்திலிருந்து அப்பத்தை… அதுவும் வாழ்வளிக்கும் அப்பத்தை கொண்டு வந்தவர்கள் அவரகளுக்கு ரொம்ப சாதாரனவர்..

மீண்டும் சீராக்,

“ என்னைப் படைத்தவர் என் கூடாரத்தில் இளைப்பாறினார் “ – சீராக் 24 : 12

“ மரியே , அஞ்சாதீர்; இதோ உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர் “

லூக்காஸ் 1 : 30

அப்பம் கொண்டு வந்த கப்பல், கடவுள் இளைப்பாறிய ஆலயம், கடவுளின் மறைந்த நகரமான தேவ மாதாவை எப்படிப் புகழ வேண்டும்.. போற்ற வேண்டும்.. குறைந்த பட்சம் சிலருக்கு நன்றியாவது சொல்லவேண்டாமா? அதுவும் சிலருக்கு இல்லையென்றால் வேதனை..

அவர்கள் இருக்கட்டும்.. நாம் நம் தாயைப் போற்றுவோம்.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு போற்றுவோம்.. உயிருள்ளவரை போற்றுவோம்..  உயிருள்ளவரை ஜெபமாலை ஜெபித்து நம் தாயைப் போற்றுவோம்..

நன்றி : வேதாகம மேற்கோள்கள் சென்ற பகுதியும் சேர்த்து, வாழும் ஜெபமாலை இயக்கம்.

‘ஞானம் நிறை கன்னிகையே’ என்ற பாடல் பைபிளில் இருக்கிறதா? கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த பகுதியில்…

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !   மரியாயே வாழ்க !