சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 26

எண்ணாத எளியோரை மட்டுமல்ல, சிந்திக்கும் சிந்தனையாளர்களையும் நமது திருச்சபை ஆதரிக்கிறது. சிந்திப்போர், உண்மையைத் தேடிச் செல்லும் ஆழ்ந்த அறிவாளிகள் ஆவர். அறிவு சான்ற அர்ச்.சின்னப்பரின் காலந்தொட்டு நம் காலம் மட்டும் ஆன்றோரையும் சான்றோரையும் பேரறிஞரையும் பேணும் பொறுப்பு நம் திருச்சபையைச் சார்ந்தது. 

திருச்சபையின் அதிகாரத்தை மட்டுமல்ல, அவ்வதிகாரம் அமைந்ததற்குக் காரணத்தை அறிய விரும்புவோர் இருந்தனர்; இருக்கின்றனர் 

திருச்சபை வழுவாவரம் பெற்றுள்ளது என்பதை அறியினும் ஏன் அது, அவ்வரம் பெற்றிருக்கிறது என்பதையும் அறிய விரும்புகிறவரும் உள்ளனர். தமதிரித்துவத்தில் மூன்று ஆட்கள் உள்ளனர் என்பதை அவர்கள் அறிந்ததே. ஆனால் ஏன் நான்கு பேர் இருக்கக்கூடாது என்பதை அறிய விழைந்தோரும் இருக்கின்றனர். எவ்வாறு மாட்டுத் தொழுவம் முப்பேரறிஞரை ஆதரித்ததோ, அவ்வாறே இவர்களையும் திருச்சபை அரவணைக்க வேண்டும் 

கல்வியிலே மூழ்கித் திளைப்போருக் கும், முக்காலமும் கடந்த எக்கால கடவுளின் ஒலியைக் கேட்டு இருக்கும் அறிவுக் கண்ணால் அறிய இயலாத, இதுவரை புலனாகாத நினைவு உலகங்களை விசுவாச நெடுந்தொலை நோக்கியினால் (telescope) துருவிக்காண்போருக்கும் நம் உண்மைத் திருச்சபை கடவுள் கொள்கை நூல் (theology), மெய்யறிவு நூல் (philosophy) ஆகிய கல்வி மடையைத் திறந்து வைக்கிறது 

உயர் கணித நூலையும் வான ஆராய்ச்சி நூலையும் கடவுள் கொள்கை நூல், மெய்விளக்க நூல் என்பவையோடு ஒப்பிட்டு நோக்கினால், முன்னவை பசும்புல் வெளிகளில் பாயும் ஆழமற்ற அருவிகளாகவும் மனித உள்ளத்தின் விளையாட்டுக் கருவிகளாகவும் தோன்றும்  திருச்சபையின் நூல்கள் வீணானவை என்று உலகம் பழித்துப் பேசலாம். அதன் சமய சித்தாந்த நூல் ஆழ்ந்த கருத்துடையது இல்லை என்று இகழ்ந்துரைக்கலாம் 

அதுமட்டுமல்ல அது அறிவுக்கு ஒவ்வாதது என்றும் கூட கூறலாம் இதனால் அறிவுக்கு ஒவ்வாதது என்று கூறி அதை ஒதுக்கிவிட நியாயமே இல்லை பெத்லகேம்

குகையைப் போலவே கடவுள் வரை செலுத்திச் சென்ற நட்சத்திரத்தைப் பின்பற்றிய வீணராம் பேரறிஞரால் நிறைந்து உள்ளது நம் திருச்சபையும். இந்தப் பொருளைத் தவிர இதற்கு வேறு பொருள் கிடையாது

தொடரும்...