தேவமாதா யார்? பகுதி-21 : யார் என் தாய்?

“யார் என் தாய் ?” – மத்தேயு 12 : 48

யார் இயேசு சுவாமியின் தாய் ? என்று பார்ப்போமா?

“அது முடிவில்லா ஒளியின் எதிரொளி, கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி; அவருடைய நன்மைத் தனத்தின் சாயல்.”

ஞான ஆகமம் 7 : 26

இப்போது பிதாவாகிய சர்வேசுவரனால் அபிஷேகம் அல்லது அர்ச்சிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் பைபிளில் இருக்கிறார்கள்.. ஒரு சிலரைப் பார்ப்போம்.. 

1. ஆதாம்- ஏவாள்

2. மோயிசன்

3. ஆபிரகாம்

4. தாவீது

5. இறைவாக்கினர்கள்.

6. புனித ஸ்நாபக அருளப்பர்.

இவர்களில் யாரை எடுத்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் கடவுளோடு கொண்டுள்ள பிரமாணிக்கம் தவறி இருப்பார்கள், பொறுமையிழந்திருப்பார்கள், நம்பிக்கை இழந்திருப்பார்கள், பாவம் செய்திருப்பார்கள், மீண்டும் பொறுமையிழப்பு, உயிருக்கு பயம், ஆண்டவர் சொன்னதை அறிவிக்காமல் ஓட்டம், நம்பிக்கையில் சந்தேகம்..

உதாரணங்கள்.. 

மோயிசன் : பாறையில் ஒரு அடிக்குப் பதில் இரண்டு அடிகள்..

ஆபிரகாம் :  கடவுள் வாக்குறுதி கொடுத்திருந்தும் இஸ்மாயேல் பிறக்க காரணமாக இருந்தது..

தாவீது :  உரியாவிற்கு எதிரான தாவீதின் பாவம்..

இன்னும் இறைவாக்கினர்களை எடுத்துக்கொண்டால்.. ஆண்டவர் அறிவிக்க சொல்லிய வாக்கை அறிவிக்காமல் ஓடிப்போனவர்கள்.. பொறுமையிழந்து சாவைக் கேட்டவர்கள்.. உயிருக்கு பயந்து ஆண்டவரிடம் முறையிட்டவர்கள் என்று ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிரமாணிக்கம் இழந்தவர்களைப் பார்க்க முடியும்..

புனித ஸ்நாபக அருளப்பர் : “பெண்ணிடம் பிறந்தவர்களுள் இவரை விட மேலானவர்கள் யாருமில்லை” என்று இயேசு சுவாமியால் சான்றிதழ் கொடுக்கப்பட்டவர்.. ஆனால் ஒருமுறை “ வர இருந்தவர் நீர்தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்ப்பாக்க வேண்டுமா? “ என்று கேட்டார்..

ஆக பிதா எதிலும் யாருக்கும் குறை வைக்கவில்லை.. தன்னுடைய அர்ச்சிப்பை, அபிஷேகத்தை தாராளமாக ஏராளமாக கொடுத்திருக்கிறார்.. ஆனால் அப்படி ஏராளமாக பெற்றவர்கள் கூட பிரமாணிக்கத்தை ஒரு சில சந்தப்பர்த்தில் இழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

கடவுளிடம் பிரணாமிக்கத்தை கடைசி வரையிலும் எந்த சூழ்நிலையிலும், இழக்காத ஒரே ஆள் யார்?

பைபிளின் முன் அட்டையிலிருந்து, பின் அட்டை வரை 100 முறை புரட்டிப்பார்த்தால் கடவுளிடம் பிரமாணிக்கத்தை ஒரு  சிறு புள்ளி அளவு கூட அல்லது அதை விட சிரிய அளவு கூட இழக்காத ஒரே ஆள் நம் பரிசுத்த “ தேவ மாதா “ மட்டும்தான்.. ( இயேசு சுவாமியும் உண்டு. ஆனால் அவர் கடவுள்.. கடவுளும் மனிதருமானவர்..)

மங்கள வார்த்தை சொல்லப்பட்ட நாளில் இப்படித் தொடங்கி..

“ இதோ ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “

லூக்காஸ் 1 : 38

கல்வாரியில்.. சிலுவையின் அருகில்.. இயேசு சுவாமியின் பாடுகளின் உச்சத்தில் சுவாமியின் கடைசி வார்த்தைகளில் ஒன்றான.. அதாவது மாதா யார் என்பதை இயேசு சுவாமியே சாட்சியாக அறிவிக்கும் வார்த்தை..

“ இதோ உன் தாய் “

இது மாதா யார் என்பதை அறிவிக்கும் சாட்சிய வார்த்தை.. அதாவது சுதனின் வார்த்தை.. இது அப்படியே பரிசுத்த ஆவியின் வார்த்தைகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது..

எலிசபெத்தம்மாள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு சொல்லிய மாதாவுக்கு சாட்சிய வார்த்தை..

“ ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தள் பேறு பெற்றவளே ! “ 

லூக்காஸ் 1: 45

மாதாவுக்கு நேசப் பிதாவின் சான்றிதல் வேண்டுமா?

“ உனக்கும் பென்ணுக்கும், உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் பகையை உண்டாக்குவோம் “

ஆதியாகமம் 3 : 15

மூவொரு கடவுளின் சான்றிதழ்களை பெற்றவர் மாதா.. சான்றிதழ்களை பெற்றவர் மட்டுமல்ல அதை அப்படியே வாழ்ந்து நிரூபித்தவர்.. இப்போது ஆண்டவர் இயேசு சொல்லிய வார்த்தைகளைப் பொருத்திப்பாருங்கள்..

“ யார் என் தாய் ?” அந்த தாயார் யார் என்று உங்களுக்கு புரிகிறதா? (இது சிலருக்கு)..

மேலே சொல்லப்பட்டவர்கள் கண்டிப்பாக சிறந்தவர்கள், பேறு பெற்றவர்கள், கடவுளின் ஆசீரை, அர்ச்சிப்பை அதிகமாக அடைந்தவர்கள்தான்.. ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் கடவுளை நோகச்செய்திருக்கிறார்கள்..

ஆனால் அவர்களையெல்லாம், இன்னும் பழைய ஏற்பாட்டு பாத்திரங்களையெல்லாம் ( ஆதாம்- ஏவாள் தவிர்த்து) மதிக்கிறீர்கள், கொண்டாடுகிறீர்கள் தூக்கிப் பிடிக்கிறீர்கள்..

ஆனால் ஒரு குண்டூசி முனை அளவு கூட பிரமாணிக்கம் தவறாத கடைசிவரை கடவுளுக்கு ஆறுதலாக, துணையாக, மீட்பின் திட்டத்தை முன் நின்று நடத்திய தேவமாதாவை.. உதாசீனப்படுத்துகிறீர்கள் தூக்கி எரிகிறீர்கள்.. புறக்கனிக்கிறீர்கள்.. உங்கள் அசுத்த நாவால் அவதூறு பேசுகிறீர்கள் ( மன்னிக்கவும்.. மாதாவைப் பற்றி அவதூறு பேசுவதற்கு முன்னால்வரை உங்கள் நாவும் நல்ல நாவுதான்.. ஆனால் அவதூறு பேசிய பின் அது கண்டிப்பாக அது அசுத்த நாவுதான்).

சரி அவர்களை விடுவோம்.. கொடுத்து வைக்காதவர்கள்..

மாதாவின் இத்தகைய பிரமாணிக்கத்திற்கு காரணம் என்ன?

கடவுளுக்கு சித்தமானால் “ யார் என் தாய் ? “ தொடரும்..

நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !