அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-12

இயேசுவின் மரணத்திலும் சந்தியாகப்பர் மரணத்திலும் உள்ள ஒற்றுமைகள் :

புனித சந்தியாகப்பரின் வேத சாட்சி மரணம் இறைவன் இயேசுவின் மிகக்கொடிய சிலுவை மரணம் நடந்து முடிந்துகிட்டதட்ட 11 ஆண்டுகள் கழித்து நிகழ்ந்தது. 

சந்தியாகப்பர் கைது செய்யப்பட்டதும் இயேசுவைப்போல பாஸ்காவிற்கு ஆயத்தமான நாளில்தான்

தூய யாகப்பருக்கு மரணதண்டனையிட்டு கொலை செய்தது பழைய ஏரோதின் பேரன் எரோது அகரிப்பா

 சந்தியாகப்பர் கொலைசெய்யப்பட்டது பாஸ்கா நாளின்போது.

சந்தியாகப்பருக்கு எதிராக சாட்சி சொன்னவனே மனம் மாறி அவரோடு இணைந்து மரிக்க மனம் துணிந்தான் என்றால் சந்தியாகப்பர் முகம் எப்பேர்பட்ட தெய்வீக துணிச்ச்லோடு மகிழ்ச்சி நிறைந்தாக காட்சி அளித்திருக்க வேண்டும்...இது நம் இயேசு சிலுவையையில் மரிப்பதற்கு முன் மரண வேதனையில் தொங்கிக்கொண்டிருக்கும் போது கூட ஒரு கைதியை மனமாற்றியதைப்போல உள்ளது..

“ நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் உங்களாலும் குடிக்க முடியுமா ?” என்று கேட்டபோது துணிச்சலோடு “ முடியும் “ என்று பதில் சொன்னதால் இயேசு கொடுத்த மகிமை இது..

யூதர்களை மகிழ்ச்சிபடுத்த தூய சந்தியாகப்பரை அகரிப்பா தேர்ந்தெடுத்த்திலிருந்து புனித சந்தியாகப்பர் ஆற்றிய நற்செய்திப்பணியின் வேகமும், வீரமும், ஆழமும்  நன்றாக விளங்கும்...

இன்னொரு மெய் சிலிர்க்கும் செய்தியும் உண்டு.. புனித ராயப்பரை தப்புவிப்பதற்காகவும் சந்தியாகப்பரே மனமுவந்து முன் சென்றதாகவும் வரலாறு சொல்கிறது.

தலைமை தூய ராயப்பரிடம் இருந்தாலும் தூய சந்தியாகப்பர் அப்போஸ்தலர்களில் மூப்பரானதால் முக்கியமான முடிவுகள் எடுக்கும் பொறுப்பு சந்தியாகப்பரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்திருக்கிறது.. முடிவுகளை வேகமாகவும் தெளிவாகவும் எடுத்திருக்கிறார்..

யூதக்கிறிஸ்தவர்களிடையே  நற்செய்தியை அறிவித்தது மட்டுல்ல ஜெருசலேமின் முதல் ஆயராக தலைமை ஏற்று அவர்களை வழி நடத்தியும் உள்ளார். ஜெருசலேம் கைதிகளிடம் நற்செய்தி அறிவித்துள்ளார்.

இங்கே ஒரு உண்மையை பதிவு செய்யவேண்டும் இறைவன் இயேசுவின் மறைவுக்குபின் நிலவிய ஒருவித நிசப்தம் மற்றும் மக்களிடையே இருந்த பயம் சந்தியாகப்பர் மரணத்திற்கு பின் கலைந்தது மற்றும் உடைந்த்து. ( முதல் வேதசாட்சி புனித முடியப்பர். அவரின் வேதசாட்சி மரணத்தின்போது இருந்த இருந்த பயம் மற்றும் கோபம், தூய யாகப்பரின் மரணத்தில் வெடித்துவிட்டது) ஒரு புரட்சி வெடித்த்து..மக்கள் உயிருக்கு பயப்படமாமல் “தான் கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்தார்கள். லட்சகணக்கில் மக்கள் மனம் திரும்பினார்கள்.. அநேக புதுமைகள் நடந்தன.. ( அப்போஸ்தலர்களில் முதல் வேதசாட்சி புனித யாகப்பர். கிறிஸ்துவுக்காக இரண்டாவதாக மரித்தவர் என்ற பெருமையும் நம் யாகப்பருக்கே)

ஜெபம் : புனித சந்தியாகப்பரே இறைவன் இயேசுவுக்காக மரிப்பதற்கு உமக்கு இருந்த ஆவலையும், அக மகிழ்ச்சியை பற்றி சிந்திக்கும்போது...உம்மால் எப்படி முடிந்தது என்பதும் எங்களால் சிறு துன்பங்களை கூட இயேசுவுக்காக தாங்க முடியவில்லையே என்பது எங்களுள் எழும் அழுத்தமான கேள்வி..

உம்மைப்போல இயேசுவுக்காக எந்தவிதமான சிலுவையையும் மனமுவந்து மகிழ்ச்சியாக சுமக்கும் வரத்தை இயேசுவிடம் இருந்து பெற்றுத்தாரும்- ஆமென்

உமது வீர விசுவாசத்தை கொஞ்சமாவது எங்களுக்கு தாருமய்யா.. 

மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு