சேசுநாதர் சுவாமி திருச்சிரசில் முண்முடி சூட்டப்பட்டதை தியானிப்போமாக.

ஒரு போர்ச் சேவகன் : " யூதர்களுக்கு ஓர் அரசனை நாம் கொடுப்போம். இவனைத்தான்....'' என்று சொல்கிறான்.

அவன் கட்டிடத்தின் பின்னால் உள்ள வளவுக்குள் ஓடிச் செல்கிறான். அங்கிருந்து ஒரு கத்தை ஹாதார்ன் என்ற முட்செடியின் கிளைகளோடு திரும்புகிறான். அந்தக் கிளைகள் இன்னும் வளையக் கூடியவையாக உள்ளன. ஆயினும் அவற்றின் கூரிய முட்கள் கடின மடைந்துள்ளன. ஒரு பெரிய கத்தியால் அக்கிளைகளிலிருந்து இலைகளையும், மொட்டுகளையும் அவர்கள் அகற்றுகிறார்கள். பின், வட்டமாக கிளைகளை வளைத்து, சேசுவின் சிரசில் வைக்கிறார்கள். ஆனால் அக்குரூரமுடி தலையின் வழியாக அவருடைய கழுத்தில் விழுகிறது. “இது சரியாயில்லை. சின்னதாக்குங்கள். இதை எடுங்கள்.''

கழுத்தில் விழுந்த முள் வளையத்தை எடுக்கிறார்கள். அவருடைய கன்னங்களை முட்கள் கீறுகின்றன. கண்களைக் குத்திக் குருடாக்கி விடுமோ என்றிருக்கிறது. அப்படிக் கழற்றும் போது அவரது தலைமுடி யையும் பிடுங்குகிறார்கள். முள்முடியைச் சிறிதாக்குகிறார்கள். இந்தத் தடவை அது அதிக சிறிதாகி விட்டது. அதை அவர் தலையில் வைத்து அழுத்துகிறார்கள். முட்களை தலைக்குள் இறக்குகிறார்கள். ஆயினும் அது கீழே விழுந்துவிடும் போலிருக்கிறது. மறுபடியும் முடியைக் கழற்றுகிறார்கள். இந்தத் தடவை கூடுதலான முடிகள் பிடுங்கப்படு கின்றன. மறுபடியும் முள்முடியைத் தலையில் வைத்து சரிசெய் கிறார்கள். இப்போது அது பொருந்திக் கொள்கிறது. முன்பாகத்தில் மூன்று முட்கிளைகள் நிற்கின்றன. தலையின் பின்புறத்தில் அந்த மூன்று கிளைகளும் ஒன்றோடொன்று பின்னி ஒரு முட்கொத்தாக உள்ளது. அது சேசுவின் பிடரிக்குள் குத்தி இறங்குகிறது.

''நீ எவ்வளவு நன்றாகக் காட்சியளிக்கிறாய் தெரிகிறதா? இயற்கையான வெண்கல நிறம், உண்மையான சிவப்பு மாணிக்கங்கள். என் உடற்கவசத்தில் உன்னையே பார் இராஜாவே" என்று அந்தக் குரூரத்தைக் கண்டுபிடித்தவன் கேலியாய்ப் பேசுகிறான்.

''அரசனாவதற்கு கிரீடம் மட்டும் போதாது. இரத்தாம்பரமும், செங்கோலும் தேவை. கொர்னேலியுஸ், குதிரை லாயத்தில் ஒரு மூங்கில் கழியும், கழிவுநீர்க் குழாயருகில் ஒரு சிவப்பு மேல் வஸ்திரமும் இருக்கின்றன. போய் அவற்றை எடுத்து வா.''

அவை கொண்டுவரப்பட்டதும் அந்த சுத்தமில்லாத கந்தல் துணியை சேசுவின் தோள் மேல் போடுகிறார்கள். மூங்கில் கழியை அவர் கையில் கொடுக்குமுன் அதைக் கொண்டு அவர் தலையில் அடிக்கிறார்கள். " யூதர்களின் இராஜாவே வாழ்க" என்று சொல்லிப் பணிகிறார்கள். இடி முழங்குவது போல் சிரிக்கிறார்கள்.

சேசு யாதொன்றும் செய்யாமல் இருக்கிறார். குதிரைகளின் தண்ணீர்த் தொட்டி ஒன்றைக் கவிழ்த்துப் போட்டு, அந்த "அரியாச னத்தில் " அவர்கள் தம்மை இருத்த விடுகிறார். தம்மை அடிக்கவும் பரிகாசம் செய்யவும் விட்டுக் கொடுக்கிறார். ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை. அவர்களைப் பார்க்க மட்டும் செய்கிறார். அவருடைய பார்வையில் மிகுந்த கருணையும் கொடிய துயரமும் காணப்படுகின்றன.

ஒரு மேலதிகாரி "குற்றவாளியை பிலாத்துவிடம் கொண்டு போங்கள்" என்று கட்டளையிடுகிற வரை போர்ச் சேவகர் அவரைப் பரிகாசம் செய்வதை நிறுத்தவில்லை. குற்றவாளி! என்ன குற்றம்?

சேசு அங்கு நிற்கும் பெண்களின் பக்கமாக வந்த போது அவர்கள் சத்தமாக அழுதபடியே வந்து சேசுவின் பாதத்தருகே முழந்தாளிடு கிறார்கள். மூச்சு வாங்கியபடி சேசுவும் நிற்கிறார். அந்நேரத்திலும் அந்தப் பரிதாபப்படும் ஸ்திரீகளுக்குச் சிறு புன்னகை செய்கிறார்.

ஒரு பெண் ஒரு சதுர லினன் துகிலை ஆண்டவரிடம் நீட்டுகிறாள். சேசு அதை ஏற்றுக்கொள்கிறார். அவரால் ஒற்றைக் கையைக் கொண்டு அதை உபயோகிக்க முடியவில்லை. அந்த இரக்கமுள்ள ஸ்திரீ அதை அவருடைய முகத்திற்குக் கொண்டு செல்ல உதவுகிறாள். அவருடைய முள்முடியைத் தாக்கிவிடாதபடி எச்சரிக்கையாகச் செய் கிறாள். சேசு குளிர்ச்சியான அந்த லினன் துகிலை பரிதாபத்துக்குரிய தம் முகத்தில் வைத்து, அதிலே ஒரு பெரிய ஆறுதல் உள்ளது போல் பிடித்துக்கொள்கிறார். பின் அந்தத் துகிலைத் திருப்பிக் கொடுத்துச் சொல்கிறார்:

''நன்றி ஜோஹான்னா, நன்றி நிக்ஹே ..... சாரா..... மார்செல்லா ..... எலிசா..... லீடியா... அன்னா ..... வலேரியா... நீங்கள்.... ஜெருசலேமின் ... குமாரத்திகளே... எனக்காக அழ வேண்டாம்..... உங்கள் பாவங்களுக் காக... உங்கள் பட்டண மக்களின் பாவங்களுக்காக அழுங்கள் .... ஜோஹான்னா.. கூடுதல் மகன்கள்.... இல்லாததற்கு ... கடவுளை வாழ்த்து .. அது... அவரின் இரக்கம்... மகன்கள் இல்லாதது.... காரணம்... அதற்காக ... அவர்கள் கஷ்டப்படுகிறார்கள்... எலிசபெத்... நீயும்... கடவுளை கொலை செய்வோர் நடுவில்... இருப்பதைவிட அதுதாவிளை... தாய்மாரே.... உங்கள் மகன்களுக்காக.... அழுங்கள்..... ஏனெனில் ..... இந்நேரம்..... தண்டனை யில்லாமல்... போகாது... எப்படித் தண்டனை... மாசற்றவனுக்கு... இப்படி யென்றால்..... அப்போது நீங்கள்..... கருத்தாங்கியதற்கும்..... பாலூட்டி யதற்கும்.... அநேக மகன்களைப் பெற்றதற்கும்.... அழுவீர்கள்... அந்நாட் களின் ..... தாய்மார்.... அழுவார்கள்..... ஏனென்றால்..... அப்போது ... அழிவிற்குள்... முதலில் விழுபவன் ... கொடுத்து வைத்தவன்... உங்களை நான் ...... ஆசீர்வதிக்கிறேன் ..... வீடு திரும்புங்கள்..... எனக்காக.... மன்றாடுங்கள்...'' ஸ்திரீகள் சத்தமாக அழுகிறார்கள்.

மறுபடியும் சேசு வியர்வையால் நனைகிறார். போர்ச் சேவகரும் தீர்ப்பிடப்பட்ட மற்ற இருவரும் வியர்த்து வடிகிறார்கள். காற்று பலமாக வீசும் இந்நாளில் சூரியன் உஷ்ணமாயிருக்கும் மலையின் பக்கம் வெயிலின் அனலை அதிகரிக்கச் செய்கிறது. சேசுவின் கம்பளி ஆடை கசையடியால் ஏற்பட்ட காயங்களில் பதிந்திருக்கும் போது வெயிலின் உஷ்ணம் எப்படியிருக்கும், பயங்கரமாயிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்... ஆனால் அவர் முனகவில்லை. இந்தப் பாதை அதைப் போல் செங்குத்தாக இல்லை. இப்பொழுது அவர் இழுத்து இழுத்து நடக்கிற கால்களுக்கு ஆபத்தாயிருந்த கரடுமுரடான கற்களும் இல்லை. அப்படியிருந்தும் சேசு மேலும் மேலும் தள்ளாடுகிறார்.

இந்நிலையை சமாளிக்க அவர்கள் அவருடைய இடையைச் சுற்றி ஒரு கயிற்றைக் கட்டி இரு முனைகளையும் கடிவாளக் கயிறு போல் பிடித்துக் கொள்கிறார்கள். இது அவரைத் தாங்கினாலும் அவருடைய சுமையைக் குறைக்கவில்லை. மாறாக, கயிறு சிலுவையுடன் மோதி அதை ஓயாமல் அசைக்கிறது. சிலுவையின் அசைவால் முள்முடி தாக்கப்படுகிறது. முள்முடியால் ஆண்டவரின் நெற்றி முழுவதும் வடுக்காயமாக மாறியுள்ளது. மேலும் அக்கயிறு பல காயங்களுள்ள அவருடைய இடையில் உராய்ந்து அவை மேலும் இரத்தம் சொரியக் காரணமாகிறது. அவருடைய வெள்ளை அங்கி இளஞ்சிவப்பாக நிறம் மாறித் தெரிகிறது. இப்படியாக அவருக்கு உதவி செய்யப் போய் அவரை அதிக வேதனைக்குத்தான் உட்படுத்துகிறார்கள்.

மலையைச் சுற்றிச் செல்லும் சாலை செங்குத்தான பாதையின் பக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது. அங்கே மாதா அருளப்பருடன் நிற்கிறார்கள். மலைச்சரிவிலுள்ள நிழலடியில் அருளப்பர் மாதாவைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார் - அவர்களுக்கு சற்று விடுதலையா யிருக்கும் பொருட்டு. அந்த இடம்தான் மிக செங்குத்தானது. அதைச் சுற்றி வேறு பாதை இல்லை. அவ்விடத்திற்கு மேலும் கீழும் மலைச் சரிவு செங்குத்தாய்த் தெரிகிறது. அதனாலேயே அக்கொடியவர்கள் அதை விட்டுவிட்டார்கள். அது வடக்குப் பக்கமாயிருப்பதால் நிழல் ஏற்படுகிறது. மாதா மலையில் சாய்ந்து நிற்கிறார்கள். அவர்கள் மிகவும் களைப்படைந்து மூச்சு வாங்கி மரண வெளிறுதலுடன் காணப்படு கிறார்கள். கருநீல ஆடையணிந்திருக்கிறார்கள். கைவிடப்பட்ட பரிதாபத்துடன் அருளப்பர் மாதாவைப் பார்க்கிறார். அவருடைய முகமும் வெளிறி தேய்ந்து களைப்புற்று அகன்ற கண்களுடன் குழி விழுந்த கன்னங்களுடன் நோய் பிடித்தது போல் தோன்றுகிறது.

மற்ற ஸ்திரீகள் - லாசரின் மரியா மார்த்தா, அல்பேயுஸின் மேரி, செபதேயுவின் மேரி, கானாவூர் சூசான்னா, இராப் போஜன வீட்டின் எஜமானி, இன்னும் எனக்குத் தெரியாத சிலரும் சாலையின் நடுவில் நின்று சேசு வருகிறாரா என்று பார்க்கிறார்கள். லோஞ்ஜினுஸ் வருவ தைக் காண்கிறார்கள். கண்டதும் அவர்கள் மாதாவிடம் துரிதமாய் வந்து அறிவிக்கிறார்கள். மாதாவை அருளப்பர் முழங்கையால் பிடித் துத் தாங்கிக்கொள்ள, மாதா மலைப் பக்கத்தை விட்டு சாலையின் மத்தியில் வந்து தயங்காமல் நிற்கிறார்கள். லோஞ்ஜினுஸ் வந்தபோது தான் ஒதுங்குகிறார்கள். அவன் தன் கருப்புக் குதிரையின் மேலிருந்து மாதாவையும், வாடி வெளிறிய அருளப்பரையும் பார்க்கிறான். லோஞ்ஜினுஸ் தலையசைத்து விட்டு பதினொரு குதிரை வீரர்களும் பின்தொடர கடந்து செல்கிறான்.

குதிரைகளை விட்டு இறங்கி நிற்கிற போர்ச் சேவகரினூடே மாதா போக முடியுமா என்று பார்க்கிறார்கள். அவர்களோ சீக்கிரம் போய்ச் சேர வேண்டுமென்ற அவசரத்தில், தங்கள் ஈட்டிகளைக் கொண்டு மாதாவைத் திரும்பிச்செல்ல வைக்க முயல்கிறார்கள். மேலும் கற்களும் வீசப்படுகின்றன. சேவகரின் இந்தக் கருணைக்கு எதிர்ப்புக் காட்டும் படி பக்தியுள்ள ஸ்திரீகளால் ஏற்பட்ட இந்தத் தாமதத்தை முன்னிட்டு யூதர்கள் மறுபடியும் சபித்துப் பேசுகிறார்கள்.

லோஞ்ஜினுஸ் அங்கே ஒரு வண்டி நிற்கக் காண்கிறான். குன்றின் அடிவாரத்திலுள்ள காய்கறித் தோட்டங்களிலிருந்து அது வந்திருக்க வேண்டும். காய்கறிகளுடன் கீழேயிருக்கிற பட்டணத்திற்குப் போவ தற்காக, கூட்டம் கடக்கட்டும் என்று அது காத்து நிற்கிறது. சீரேனே யூரானும், அவன் மகன்களும் வினோதப் பிரியத்தால் அங்கு ஏறி வந்திருக்க வேண்டும். மற்றப்படி அவர்கள் மேலே ஏறி வரக் காரண மில்லை. அந்த மனிதனுக்கு நாற்பது, ஐம்பது வயதிருக்கும். நல்ல திடகாத்திரனாக இருக்கிறான். வண்டியில் பூட்டப்பட்ட கழுதை பயந்து பின்னால் இழுக்கப் பார்க்கிறது. அதனருகில் நிற்கிற அம்மனிதன் ஊர்வலத்தை உற்றுப் பார்க்கிறான்.

லோஞ்ஜினுஸ் அந்த சீரேனேயூரானை மேலும் கீழும் பார்க்கிறான். அவன் பயன்படக் கூடும் என்று எண்ணிய அவன் உத்தரவிடும் தோரணையில் : "மனிதா, வா இங்கே" என்கிறான். அவனோ கேளாத வனைப் போல் இருக்கிறான். ஆனால் லோஞ்ஜினுஸோடு யாரும் விளையாட முடியாது. தன் கட்டளையை அவன் மறுபடியும் எப்படி கூறினானென்றால், சீரேனேயூரான் கழுதையின் கடிவாளக் கயிறுகளை தன் மகன்கள் மேல் எறிந்து விட்டு, செந்தூரியனிடம் வந்து நிற்கிறான்.

லோஞ்ஜினுஸ் : "அந்த மனிதன் தெரிகிறதா?" என்று கேட்டு, சேசுவைச் சுட்டிக் காட்டும்படி திரும்புகிறான். அப்போது தன்னை சேசுவிடம் போக அனுமதிக்குமாறு போர்ச் சேவகரிடம் கேட்கிற மாதாவைக் காண்கிறான். அவனுக்கு மாதா மேல் இரக்கம் உண்டா கிறது. "அந்த ஸ்திரீயைப் போக விடுங்கள்'' என்று உத்தரவிடுகிறான். பின் சீரேனேயூரானிடம் : "அந்த மனிதனால் இந்தச் சுமையோடு இதற்கு மேல் போக முடியாது. உனக்குப் பலமிருக்கிறது. அவனுக்குப் பதிலாக நீ சிலுவையை மலை உச்சி வரையிலும் கொண்டு போ.''

"என்னால் முடியாது... என்கழுதை. அது அடங்காது. என்பையன்கள் அதை அடக்க முடியாது...'' "உன் கழுதையையும் இழந்து, தண்டனை யாக இருபது அடிகளும்பட வேண்டாம் என்றால் சொன்னபடி செய்.''

அதற்கு மேல் அம்மனிதன் மறுப்புச் சொல்லவில்லை. அவன் தன் மகன்களிடம் : "சீக்கிரமாக வீட்டிற்குப் போங்கள். நான் உடனே வந்து விடுவேன் என்று சொல்லுங்கள்'' என்று கத்திச் சொல்லிவிட்டு சேசுவை நோக்கிப் போகிறான்.

அப்போதுதான் சேசு தம் தாய் வருவதைக் காண்கிறார். ஏனெனில் அவர் அவ்வளவு கூனிப் போயிருக்கிறார். அவரது கண்கள் ஏறக்குறைய மூடியிருக்கின்றன. அவர்: "அம்மா!" என்று கதறுகிறார்.

அவர் சித்திரவதை செய்யப்படத் தொடங்கியபின் இந்த வார்த்தைதான் அவருடைய வேதனைகளை வெளிப்படுத்துவதாயிருக்கிறது. அந்தக் கதறுதலில் எல்லாமே வெளிப்படுகின்றன - அவருடைய உள்ளத்தின் பயங்கர துயரம். அவருடைய மனதின் வேதனை, உடலின் வாதனை எல்லாம். வதைக்கிறவர்களின் நடுவில் மிகக் கொடூரமான சித்திரவதைப்பட்டுத் தன்னந்தனியே சாகிற ஒரு சிறுவனுடைய, இருதயம் உடைந்த, இருதயங்களை உடைக்கிற கதறல் அது... தன் சுவாசத்தைக் கண்டே பயப்படுகிற சிறுவனின் நிலை அது. இரவில் கோரபயங்கரக் காட்சிகளால் அவதிப்பட்டு பயந்து அழும் சிறுவனின் ஓலம் போல் அது இருக்கிறது. அவன் தன் தாயைத் தேடுகிறான் - தன்னை நேசிப்பவளை. அவளது அன்பின் முத்தங்கள்தான் அச்சிறுவனின் காய்ச்சலின் அனலைத் தணிக்கும். அவளுடைய குரல்தான் பயமூட்டும் காட்சிகளை அகற்றும். அவளுடைய அரவணைப்புத்தான் மரணத்தின் அச்சத்தைக் குறைக்கும்......

மாதா கத்தியால் குத்தப்பட்டது போல் தன் இருதயத்தைக் கையால் அழுத்திப் பிடிக்கிறார்கள். சற்றுத் தள்ளாடுகிறார்கள். ஆனால் சுதாரித்துக் கொண்டு துரிதமாய்த் தன் கரங்களை வதைக்கப்படும் தன் மகனை நோக்கி நீட்டியபடி முன்சென்று : "மகனே!'' என்று கதறிச் சொல் கிறார்கள். அவர்கள் அதை எப்படிச் சொல்கிறார்கள்!! எவ்வளவு துயரம் அதில் தெறிக்கிறதென்றால் ஓநாயின் இதயம் படைத்தோர் தவிர மற்ற இதயங்கள் உடைந்து போவதாக உணராமல் இருக்க முடியாது.

இரக்க உணர்வின் அடையாளங்களை உரோமையரிடமும் நான் காண்கிறேன்.... இவ்வளவிற்கும் அவர்கள் போர்ச்சேவகர்கள், கொலை களுக்குப் பழக்கப்பட்டவர்கள், தழும்புகளைப் பெற்றவர்கள்... ஆயினும் நான் மறுபடியும் சொல்கிறேன். ஓநாய்களிலும் மோசமானவர்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் "அம்மா!" "மகனே!" என்ற வார்த்தைகள் ஒரே மாதிரிதான் இரக்கத்தின் அலைகளை எழுப்புகின்றன.

சீரேனே ஊர் மனிதன் இரக்கத்தால் இளகுகிறான் .... சிலுவையால் தான் மாதா தன் மகனை அரவணைக்கக் கூடாதிருப்பதைக் காண்கிறான். நீட்டிய தன் கரங்களை மாதா கீழே விழவிடுகிறார்கள். அவர்கள் சேசுவை உற்றுப் பார்க்க மட்டுமே செய்கிறார்கள். அவரை ஊக்கப் படுத்த வேதசாட்சியைப் போல் புன்னகை புரிய முயல்கிறார்கள். அவர்களின் நடுங்கும் உதடுகள், கண்ணிலிருந்து வழியும் கண்ணீரைப் பருகுகின்றன. அவரோ சிலுவையின் நுகத்தடியிலிருந்தே தம் தலை யைத் திருப்பி மாதாவைப் பார்த்து புன்னகை புரிய முயல்கிறார். அவருடைய உதடுகள் பாவம்! காயப்பட்டு காய்ச்சலாலும், அடி களாலும் பிளந்திருக்கிற அந்த உதடுகளின் முத்தத்தைத் தம் அன்னைக்கு அனுப்ப முயற்சிக்கிறார். அப்போது சீரேனேயன் துரிதமாய், ஒரு தந்தையின் பரிவோடு, முள் முடிக்கு அசைவு கொடுக்காமல், காயங் களில் உராயாதபடி சிலுவையை எடுத்துக் கொள்கிறான்.

ஆயினும் மாதா தன் மகனை முத்தமிட முடியாது... மிக மெது வான தொடுதலும்கூட அவருடைய கிழிக்கப்பட்ட சரீரத்திற்கு சித்திரவதையாகவே இருக்கும். ஆகவே அவர்கள் நிறுத்திக்கொள் கிறார்கள். அவஸ்தைப்படும் இரு ஆன்மாக்களும்தான் முத்தமளித்துக் கொள்கின்றன.

ஊர்வலம் மீண்டும் தொடருகிறது. கோபம் பொங்கிய கூட்டத் தின் நெரிப்பு அவ்விருவரையும் பிரிக்கிறது. மாதா மலைப்பக்கமாகத் தள்ளப்படுகிறார்கள். அங்கே எல்லாரும் அவர்களைப் பரிகாசம் செய் கிறார்கள்.

இப்போது சீரேனேயன் சிலுவையுடன் சேசுவின் பின்னால் வருகிறான். அந்தப் பாரத்திலிருந்து விடுபெற்ற சேசு முன்னைவிட எளிதாக முன்செல் கிறார். அவருக்குக் கடுமையாக மூச்சு வாங்குகிறது. இருதயத்திலே ஒரு பெரும் வேதனை அல்லது காயம் உள்ளது போல கையால் அடிக்கடி நெஞ்சை மார்பின் நடு எலும்புப் பகுதியில் அமுக்குகிறார். இப்பொழுது அவருடைய கரங்கள் கட்டவிழ்க்கப்பட்டிருப்பதால், இரத்தத்தாலும் வியர்வையாலும் சிக்குப் பிடித்து முன்னால் விழுந்து கிடக்கிற முடியை காதுகளின் பின்னால் ஒதுக்குகிறார். அதனால் நீலம் பூத்த முகத்தில் சற்று காற்றுப்பட ஏதுவாகிறது. மூச்சுவிட கஷ்ட மாக்குகிற கழுத்தைச் சுற்றிய கயிறு முடிச்சை அவிழ்க்கிறார்... முன்னை விட நன்றாக நடக்கிறார்.

மாதா மற்றப் பெண்களுடன் பின்னால் வந்துவிட்டார்கள். ஊர்வலத்தின் பின்னே வருகிறார்கள். அது கடந்து போனபின் ஒரு குறுக்குப் பாதையில் மலை உச்சியை நோக்கிப் போகிறார்கள். மனித மாமிசம் தின்னும் கூட்டத்தின் நிந்தைகளைப் பொருட்படுத்தாமல் போகிறார்கள்.

சேசு தடையின்றி நடக்க முடிவதால் மலையைச் சுற்றிய சாலையின் கடைசிப் பாகம் சீக்கிரமே கடக்கப்படுகிறது. மலை உச்சிக்குப் பக்கத் தில் வந்துவிட்டார்கள். உச்சியோ கூச்சலிடும் கும்பலால் நிறைந் திருக்கிறது.

லோஞ்ஜினுஸ் நிற்கிறான். கொலைக்களமாகிய மலையின் உச்சியில் இடம் ஏற்படும்படியாக அங்கு கூடி நிற்கிற அத்தனை பேரையும் தயவு தாட்சண்யமின்றி கீழே இறங்கச் செய்யும்படி தன் வீரர்களுக்கு உத்தரவிடுகிறான். நூறு படைவீரர்களில் பாதிப்பேர் மேலே ஓடி வந்து தங்கள் உடைவாள்களையும் ஈட்டிகளையும் கொண்டு அங்கே நின்ற எல்லாரையும் இரக்கமின்றி விரட்டுகிறார்கள். வாள்களின் பக்கங்களாலும் தடிகளாலும் அவர்கள் தரும் அடிகளால் யூதர்கள் மலையுச்சியிலிருந்து ஓடுகிறார்கள். சற்றுக் கீழேயிருக்கிற திறப்பு வெளி யில் நிற்க அவர்கள் விரும்பினாலும் அங்கே ஏற்கெனவே இடம் பிடித்து நிற்கிறவர்கள் அதற்கு சம்மதியாமல் கடுமையாய்ச் சச்சரவு பண்ணுகிறார்கள்.

கல்வாரியின் மேல் தளம், சென்ற ஆண்டு நான் கூறியது போல, ஒழுங்கில்லாத நீண்ட சதுர வடிவாக உள்ளது. அதன் வலது பக்கம் சற்று உயர்ந்து காணப்படுகிறது. அதற்கப்பால் மலையின் பாதி அளவு வரையிலும் திடீரென செங்குத்தாய் இறங்குகிறது. சொற்ப இடமான மேல் தளத்தில் ஏற்கெனவே மூன்று ஆழமான குழிகள் செங்கல் அல்லது தட்டைக் கற்களால் அருகு கட்டப்பட்டுள்ளன ..... அவை களின் பக்கத்தில் கற்களும் மண்ணும் சிலுவைகளைக் குழிகளில் நட்டு இறுக்குவதற்காக குவிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே காணப்படுகிற இன்னும் பல குழிகள் கற்களால் நிரப்பப்பட்டுள்ளன. தேவையான குழிகளைக் காலி செய்து கொள்வார்கள் என்பது தெளிவாயிருக்கிறது.

மலையுச்சி செங்குத்தாக இறங்காத எதிர்புறத்தில், மெதுவாக சரிந்து செல்லும் பகுதியில் ஒருவகை மேட்டு நிலம் இருக்கிறது. மேல் தளத்திற்கு அடுத்து இதுவும் ஒரு சமதளம் போல் உள்ளது. அங்கிருந்து இரண்டு பாதைகள் மலை உச்சியைச் சுற்றியபடி புறப்படுவதால் மேல்தளமானது, பக்கங்களில் குறைந்தது இரண்டு மீட்டர் உயரத் துடன் தணிந்து காணப்படுகிறது.

போர்ச் சேவகர்கள் ஜனக் கூட்டத்தின் குழப்பங்களை அடக்கிய பின் ஊர்வலம் எந்தத் தடையுமின்றி முன்னேறி மலையுச்சிக்குப் பக்கத் தில் வந்து விட்டது. அங்கே இரண்டு பேர் கொண்ட அணி வரிசை யாக அவர்கள் வேலி போல் நிற்க, குதிரைப் படையின் நடுவே தீர்ப் பிடப்பட்ட மூன்று பேரும் வருகிறார்கள். நூறு சேவகரில் எஞ்சிய பாதிப்பேர் இவர்கள் எல்லாருக்கும் பாதுகாப்பாக வர, மலையுச்சியின் கீழுள்ள சமதள ஸ்தலத்திற்கு ஊர்வலம் வந்து சேருகிறது.