ஆத்துமத்தின் விலை - தேவ-மனிதனின் திரு இரத்தம்!

ஆத்துமத்தின் இரண்டாவது வகை உயிராகிய தேவ உயிர், அதாவது தேவ இஷ்டப்பிரசாதம், சிருஷ்டிக்கப்பட்ட ஆன்மா மனிதக் கருவோடு இணைக்கப்பட்ட கணத்தில் ஆன்மாவால் முழுமையாக இழக்கப்படும் கிறது! அந்தக் கரு உருவாகக் காரணமாயிருந்த அசுத்த உறவின் காரண மாக, ஆன்மா ஜென்மப் பாவத்தால் தீண்டப்பட்டு, கடவுளின் குழந்தை என்ற பாக்கியத்தை இழந்து, சாத்தானுக்கு அடிமையாகிப் போகிறது.

கத்தோலிக்கஞான உபதேசத்தின்படி, தேவகட்டளைகளை மீறுவதே பாவம். அளவற்றவராகிய கடவுளுக்கு எதிராகச் செய்யப்படும் பாவம், இந்தக் காரணத்தாலேயே தன்னில் அளவற்றதாக இருக்கிறது. எனவே அளவுக்குட்பட்ட மனிதன் தன்னுடைய பாவத்திற்கு முதலாய்ப் பரிகாரம் செய்ய இயலாதவனாக இருக்கிறான். இதைக் குறித்தே பரிசுத்த வேதாகமம், "மனிதன் தன் குற்றத்திற்கே தேவனுக்கு பரிகாரம் செய்ய சக்தியற்றவன். அவன் தன் ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ளத்தக்க விலை கொடுக்க மாட்டான்'' (சங். 48:6, 7) என்கிறது.

"வேதப் பிரமாணத்தின்படி சகலமும் இரத்தத்தினால் சுத்திகரிக்கப்படுகிறதே தவிர, இரத்தம் சிந்தப்படாமல் யாதொரு மன்னிப்பும் உண்டாகாது" என்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் கூறுகிறார் (எபி. 9:22). ஆயினும் அவரே தொடர்ந்து, "காளை, வெள்ளாட்டுக் கிடாய் இவைகளின் இரத்தத்தால் பாவங்கள் மன்னிக்கப்படுவது முற்றும் கூடாத காரியம்" என்கிறார் (எபி. 10:4). ஏனெனில் மனிதர்களின் பாவப் பரிகாரத்திற்காக பூரண பரிசுத்தராகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கப்படும் இரத்தம் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட அது மாசு மறுவற்றதாக, அதாவது பாவத்தால் தொடப் படாததாக இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய இரத்தத்தைச் சிந்தக்கூடிய மனிதன் ஒருவனும் இல்லை என்று பரிசுத்த வேதாகமமே சாட்சியம் கூறுகிறது (காண்க: சங்.11:1; 13:3; உரோ. 3:12, 23; 1 அரு.1:8). இதன் காரணத்தைப் புரிந்து கொள்வது எளிது. கர்மப்பாவமே இல்லாத ஒரு மனிதன் உலகில் இருக்கக் கூடும் என்றே வைத்துக் கொண்டாலும், சேசுவையும் அவரது திருத்தாயாரையும் தவிர ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்துப் பிறந்தவன் ஒருவனுமில்லை என்பதே அந்தக் காரணம்.

இந்நிலையில் கடவுள் கெட்டுப்போன சம்மனசுக்களைப் போலவே, மனிதர்களையும் கைவிட்டிருந்தார் என்றால், நமக்கு இரட்சணியம் என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போயிருக்கும். ஒவ்வொரு மனிதனும் நித்தியத்திற்கும் நரகத்தில் சாத்தானுக்கு அடிமையாயிருந்திருப்பான்.

ஆனால் இந்தப் பரிதாப நிலையில் கடவுள் மனிதனின் ஆன்மாவைக் கைவிட்டு விடவில்லை. ''சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்தார்...'' (அரு.3:16) என்று நம் ஆண்டவரே கூறுகிறார். அவர் ஒருவரே தமது திரு இரத்தத்தை சகல மனிதரின் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தமது பிதாவுக்கு ஒப்புக்கொடுக்க முடியும். ஏனெனில் அந்த இரத்தம் சர்வேசுரனும் மனிதனுமானவரின் இரத்தம் என்பதால், நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட பூரண தகுதியுள்ளதாக இருக்கிறது. இவ்வாறு கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் மனிதனுக்கு அடைபட்டிருந்த பரலோகத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இவ்வாறு, "கிறிஸ்துவின் இரத்தத்தைக் கொண்டு பரிசுத்த ஸ்தலங்களில் (அதாவது மோட்சத்தில்) பிரவேசிப்பதற்கான நம்பிக்கை நமக்கு உண்டாகியிருக்கிறது (எபி. 10:19).

மனிதனின் ஆத்தும இரட்சணியத்திற்காக, பிதாவின் சித்தப்படி தம்மை பலியாக்கி, அதன் மூலம் அவருக்கு அளவற்ற மகிமையளிக்கவும், உத்தம் கீழ்ப்படிதலின் மகிமை யைப் பெற்றுக் கொள்வதற்கும், மனுக்குலத்தின் மீது தமக்குள்ள அளவில்லாத சிநேகத்தின் தூண்டுதலாலுமே கிறீஸ்துநாதர் மனிதன் ஆனார். இதற்கு எதிரான போதனை எல்லாம் பசாசிடமிருந்தே வருகிறது. அவன் மனிதர்களுக்கு ஓர் ஆத்துமம் உள்ளது என்பதையே அவர்கள் மறந்து போகச் செய்கிறான். ஆத்தும் மேய்ப்பர்களும் கூட சுபாவத்திற்கு மேலான எதையும் விசுவசிக்க விரும்பாத அவல நிலைக்கு இறங்கியுள் ளதைக் காண முடிகிறது. சமீபத்தில், ஒரு குருவிடம் ஆத்தும் இரட் சணியத்தைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர், ''ஆத்துமம், நரகம் இவைகளைப் பற்றியெல்லாம் நான் நினைப்பதே யில்லை" என்று சொல்லி நம்மை அதிர வைத்தார். மேய்ப்பர்களிடம் விசுவாசமில்லாததால், ஆடுகள் ஓநாய்களால் சிதறடிக்கப்படுவதை எங்கும் நாம் பார்க்கிறோம். மனிதர்கள் தங்களுக்கு ஓர் ஆன்மா இருப் பதையே மறந்து முற்றிலுமாக உலகத்திற்குள் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

ஆனால் சகோதரரே, நீங்களாவது இந்த சத்தியத்தில் உறுதிப்பட்டிருங்கள்; அர்ச். அவிலா தெரேசம் மாள் கூறுவது போல், 'உங்களிடம் ஒரே ஒரு ஆன்மா இருக்கிறது என்றும், நீங்கள் ஒரே ஒரு முறை இறக்க வேண்டியிருக்கும் என்றும், உங்களுக்கு ஒரே ஒரு வாழ்வுதான் தரப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். இதைச் செய்வீர்கள் என்றால், கடவுளிடமிருந்து உங்களைப் பிரிக்கும் ஏராளமான உலகக் காரியங்களின் மீதுள்ள பிரியம் தானாகவே உங்களை விட்டு விலகி விடும்.

இதே புனிதை மீண்டும், 'நாம் ஒவ்வொருவரும் ஓர் ஆன்மாவைக் கொண்டிருக்கிறோம். அதை தினமும் சிந்திக்கவும், இந்த மாபெரும் கொடையை மதித்துப் போற்றவும் நாம் மறக்கக் கூடாது. நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ள சிருஷ்டிகள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. நமக்குள் மறைந்திருக்கிற மாபெரும் இரகசிய மாகிய ஆத்துமத்தை நாம் புரிந்து கொள்வதேயில்லை" என்றும், ''நம்மிடம் ஆத்துமம் என்ற ஒன்று உள்ளது என்று நம் விசுவாசம் சொல்கிறது, அதை நாம் கேட்டிருக்கிறோம் என்பதால் பற்றிய ஒரு தெளிவற்ற அறிவே நம்மிடம் உள்ளது. இதனாலேயே ஆன்மாவின் பேரழகைக் காத்துக் கொள்வது பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை" என்றும் கூறுகிறாள். அர்ச். பிரான்சிஸ் சலேசியாரோ, "உலகம் முழுவதும் கூட ஒரே ஒரு ஆன்மாவின் மதிப்புக்கு இணையாகாது'' என்கிறார்.

இவர்கள் இவ்வாறு சொல்வதற்கான காரணம் மிக எளியது. கடவுளே ஓர் ஆன்மாவின் விலை யாக இருக்கிறார், அவர் அதைப் பாவத்திலிருந்து மீட்கும்படியாகத் தம் பிதாவுக்குத் தம்மையே கையளித்தார் என்பதுதான் அது. இதனாலேயே நம் ஆண்டவரும், 'மெய்யாகவே மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் ஆத்துமத்தை இழந்தால் அவனுக்குப் பிரயோசன மென்ன? அல்லது தன் ஆத்துமத்துக்கு ஈடாக எதைக் கொடுப்பான்?' (மத்.17:26) என்று கேட்கிறார்.

"நம் ஆத்துமத்தின் மையமாக இருப்பவர் கடவுளே. அவரை அது தன் மையமாகக் கொண் டிருக்கும்போதுதான் தன் எல்லா சத்துவங்களையும் (புத்தி, மனது, நினைவு) கொண்டு கடவுளை நேசித்து, புரிந்து கொண்டு, அவரை அனுபவித்து மகிழ்கிறது" (அர்ச். குழந்தை சேசுவின் தெரேசம்மாள்).

நம் வாழ்வில் கடவுள் தரும் பொது அழைப்பு இதுவே. ஆத்துமத்தின் மதிப்பை அறிந்திருக்கவும், அதன் மாசற்ற அழகை நித்தியப் பேரின்பத்திற்கென பாதுகாத்துக் கொள்ளவும் அவர் நம்மை அழைக் கிறார். இதற்காகவே நித்திய பிதாவானவர் தம் ஒரே பேறான திருச்சுதனை உலகிற்கு அனுப்பினார். நம் ஆன்மாக்களை இரட்சிக்கவே நம் நேச ஆண்டவர் உலகிற்கு இறங்கி வந்தார். கிறீஸ்துநாதர் பட்ட திருப்பாடுகளின் ஆழத்தை தியானித்து உணர்பவன் கடவுள் ஆன்மாவை மதிக்கும் விதத்தையும், அதன் மீது கொண்டுள்ள அளவற்ற நேசத்தையும் அற்ப மனிதன் உணர்ந்து கொள்வான்.