அர்ச். சந்தியாகப்பர் வாழ்க்கைப்பாதையில் பகுதி-4

அர்ச். சந்தியாகப்பர் சேசு சுவாமியின் வலப்புறம் அமர ஆசைப்பட்டவர்:

சுவாமியின் மற்ற சீடர்களை கோபமுற செய்த இந்த சம்பவத்திற்கு செல்லும் முன், அர்ச்.சந்தியாகப்பர், அர்ச்.அருளப்பரின் தாய் புனித சலோமியும் சேசுவின் பெண் சீடர்களில் ஒருவர். மற்றும் சேசுவின் தாய் தேவமாதாவுக்கும் தூரத்து சொந்தம்தான். அது தவிர பாரம்பரிய முறைப்படி சேசுவின் நற்செய்திப் பயணங்களிலும், பணிகளிலும் சீடர்களை ஒருங்கினைத்தல், மக்களைச் சமாளித்தல், அவர் போதனை செல்லும் இடங்களுக்கு ஏற்பாடு செய்தல், சேசு சுவாமிக்கு உணவளித்தல் (  நற்செய்தி பணியில்) சேசுவையும் அவர் அன்னையையும் கவனித்துக்கொள்ளுதல் போன்ற பணிகளைச் செய்தார். அவரை ஒரு அமைச்சர் என்று குறிப்பிடுவதை வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அது தவிர சேசுவுக்கு நெருக்கமான இரண்டு சீடர்க்கள் ( சந்தியாகப்பர் & அருளப்பர்) இவர் பிள்ளைகள். இராயப்பர் சொந்தக்கார பிள்ளை. 

இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் அவர் தாயின் பரிந்துரையோடு அவரை சுவாமியின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர ஆசையை தூண்டிவிட்டது. இந்த இவர்களின் ஆசையை உலகம் சார்ந்த ஆசையாக கொள்ளலாம். அவர்களுக்கு என்று தனி முன்னுரிமை வேண்டும், சேசு முதலில் எங்களுக்குத்தான் சொந்தம் என்பதை காட்டவேண்டும் என்ற உலக போக்கான சிந்தனை தலைதூக்கியதால் நிகழ்ந்த சம்பவம். அதே நேரத்தில் பின் நாளில் நிகழ இருந்த ஒரு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுக்கு இதுதான் அடித்தளம் என்பது இந்த சகோதர்களுக்கும் அப்போது தெரியாது மற்ற சீடர்களுக்கும் தெறியாது.சேசு சுவாமியைத் தவிர வேரு யாருக்குமே தெறியாது. இப்போது நிகழ்வுக்கு செல்வோம்.

(மத்தேயு 20 : 20-23)

செபதேயுவின் மக்களுடைய தாய், தன் மக்களுடன் சேசுவைப் பணிந்து எதையோ கேட்க வந்தாள். “ என்ன வேண்டும்? “ என்று அவர் அவளைக்கேட்டார். என் மக்கள் இருவரும் உம் அரசில் ஒருவன் உமது வலப்பக்கமும், மற்றவன் உம் இடப்பக்கமும் அமர செய்வீர் என வாக்களியும்” என்றாள். அதற்கு சேசு “ நீங்கள் என்ன கேட்பது என்னவென்று உங்களுக்கு தெறியவில்லை. “ நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா “ என்று கேட்டார். அவர்களோ “ முடியும்“   என்றார்கள். அதற்கு அவர் “ ஆம் நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிப்பீர்கள். நான் பெறும் ஞானஸ்தானத்தை நீங்களும் பெறுவீர்கள் ( மாற்கு 10: 39). ஆனால் என் வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர்வது என்னுடையதன்று. யாருக்கு என் பிதா ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அது கிடைக்கும்” என்றார்.

இந்த பகுதியை நன்றாக சிந்தித்து பார்த்தால் சேசுவே இந்த சகோதர்களுக்கு சான்றிதழ் தருகிறார், உங்களால் முடியும். நீங்கள் செய்வீர்கள் என்று. இதுவே எவ்வளவு பெரிய பாக்கியம். அது அப்படியே நிறைவேறியது. அப்போஸ்தலர்களில் முதலாவதாக சேசுவுக்காக குருதி சிந்தி வேதசாட்சியாக மரித்தவர்  அர்ச்.சந்தியாகப்பர். கடைசியாக மரித்தவர் அர்ச்.அருளப்பர்

அர்ச்.அருளப்பருக்கும் வேத சாட்சியாக வாய்ப்பு கிடைத்தது. கொதிக்கின்ற தார் எண்ணெய்க்குள் அவர் இறக்கப்பட்டார். அவருக்கு ஆண்டவர் வேறு பணி கொடுத்திருந்ததால் அவரை ஆண்டவர் அதிலிருந்து காப்பாற்றிவிட்டார். இல்லையென்றால் நமக்கு அருளப்பர் நற்செய்தி, திருவெளிப்பாடு, அவர் திருமுகங்கள் நமக்கு கிடைத்திருக்காது.

சரி இப்போது விசயத்திற்கு வருவோம்.. அப்போஸ்தலர்களில் முதலில் மரித்தவர் நம் அர்ச்.சந்தியாகப்பர். கடைசியாக மரித்தவர் அர்ச். அருளப்பர்.  அர்ச்.இராயப்பருக்கு பரலோக வாசலில் திறவுகோலோடு வேலை. அப்படியானால் அவர் வலப்பக்கமும், இடப்பக்கமும் இருப்பது யார் ?  இந்த கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

சிந்தனை : “தான் என்ன கேட்டேன்?“ என்பது சந்தியாகப்பருக்கு விளங்கவில்லை. ஆனால் சேசு சுவாமியின் கொடிய சிலுவை மரணத்திற்கும், அவர் உயிர்ப்புக்கும் பின் அவருக்கு எல்லாமே விளங்கிற்று. முதல் பகுதியில் சொல்லியிருந்தது போல் தன்னை முழுவதுமாக தன் தலைவர் சேசுவுக்கு அர்ப்பணித்துவிட்டு. நான் எப்போது என் சேசுவுக்காக மரிப்பேன் என்று ஆவலாக காத்திருந்தார். மன மகிழ்ச்சியோடு சந்தோசமாக அவருக்காக மரித்து அவர் கிண்ணத்தில் குடித்து அவர் பெற்ற அதே ஞானஸ்தானத்தையும் பெற்றார்.

ஜெபம் : அர்ச்.சந்தியாகப்பரே  எங்கள் அன்பான பாதுகாவலரே ! உம் சகோதரரோடும், தாயோடும் தானாக முன் வந்து இடம் கேட்டும், அதன் பின்பு அந்த இடம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும் என்று தெள்ளந்தெளிவாக புரிந்து கொண்டு அதற்காக இரவு பகல், பயணங்களைப் பார்க்காமல் உழைத்து அவர் கிண்ணத்தில் குடித்தவரே ! இதோ உம் முன் மாதிரியை பின் பற்றி சேசுவை நோக்கி “ நாங்கள் உம் வலப்புறம் அமர ஆசைப்படுகிறோம். எங்களுக்கும் அந்த இடம் வேண்டும் “ என்று கேட்போமா ?

அவர் கிண்ணத்தில் குடிக்க அந்த தகுதியை பெறுவோமா?. அதற்கான தகுதியை பெற அவர் மிகவும் நேசித்த, அவரோடு மிக அருகில் இருந்த சீடர்களில் ஒருவரான  அர்ச்.சந்தியாகப்பரிடம் வேண்டுவோம்- ஆமென்.

கடவுளுக்கு சித்தமானால் மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..

சேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !