உத்தரியம் - பாகம் 19 - கார்மெல் மாதா உத்தரியத்தின் புதுமைகள்!

வண.பிரான்சிஸ் இப்ஸ், ஒரு நாள் தான் அணிந்திருந்த உத்தரிய மேலங்கி கழன்று விழுவதை கவனித்தார், மறுபடியும் அணிந்து கொள்வதற்காக அவர் குனிந்து உத்தரிய மேலங்கியை எடுக்க போது, அந்த மேலங்கியை தூர. வீசி எறிந்துவிடு! அது, நரகத்திலிருந்து அநேக ஆத்துமங்களைப் பறித்துக் கொள்கிறது, என்று பசாசின் கூக்குரலொலி அவருக்குக் கேட்டது. உடனே, அர்ச்சிஷ்டவர் உத்தரிய மேலங்கியை பக்தி பற்றுதலுடன் முத்தி செய்து, அணிந்து கொண்டார்; 

திவ்ய சேசுவின் மகா பரிசுத்தத் திருநாமமும், தேவமாதாவின் மகா பரிசுத்தத் திருநாமமும், தேவமாதாவின் கார்மெல் உத்தரியமும், பசாசுகளுக்கு பயங்கரத்தை ஏற்படுத்தி, அவற்றை நரக பாதாளத்திற்கே விரட்டியடிக்கும் வல்லமை வாய்ந்தவையாக இருக் கின்றன! 

1944ம் வரும், கார்மெல் சபையைச் சேர்ந்த ஒரு வேத போதக குருவானவர்;பரிசுத்த பூமியான பாலஸ்தீனத்திலிருந்த நோயாளிகளுக்கு அவஸ்தைப் பூசுதல் கொடுப்பதற்காக, அங்குச் சென்றார்; அவர் சென்ற காரை ஓட்டியவன், ஒரு அரேபியன். அவர் அடையவேண்டிய இடத்திற்கு இன்னும் ஆறு கி.மீ. தூரம் இருக்கும் போதே கார் நிறுத்தப்பட்டது. ஏனெனில், இனி வரும் பாதை மிகப் பயங்கரமானதாகவும் புதை மணலாகவும் இருந்ததால், காரை ஓட்ட முடியாது என்று அந்த அரேபிய ஓட்டுனன் கூறிவிட்டான், 

குருவானவர், தொடர்ந்து அந்த பாதையில் நடந்தார்; ஒரு சில கி.மீ தூரம் நடந்ததுமே. அவர் கால்கள் புதை மண்ணில் சிக்கின. சிறிது நேரத்தில், ஒரு புதைகுழியினுள் அவர் சறுக்கி விழுந்தார். அதனுள் மூழ்கத் தொடங்கினார். உடனே, அவர் தேவமாதாவை நோக்கி உதவி கேட்டு ஜெபித்தார்; தான் அணிந்திருந்த தேவமாதாவின் கார்மெல் உத்தரியத்தை பக்தியுடன் முத்தி செய்து, அருகில் தெரித்த கார்மெல் மலையை நோக்கி மேலே பார்த்தபடி, எங்கள் கார் மெல் மாதாவே! ஓ தேவ மாதாவே! எனக்கு உதவி செய்தருளும்! என்னைக் காப்பாற்றியருளும்! என்று கூவி ஜெபித்து வேண்டிக்கொண்டார். உடனே, அடுத்து என்ன நடந்தது என்பது, அவருக்கு. நினைவில்லை. 

அடுத்த கண நேரத்தில், அவர் நல்ல ஸ்திரமான தரையில் படுத்திருப்பதை உணர்ந்தார், தேவமாதா,தமது, கார்மெல் உத்தரியத்தின் வழியாக, என்னைப் புதைக் குழியிலிருந்து.. பாதுகாத்துக் காப்பாற்றினார்கள், என்பதை நான் நன்கறிவேன்; என் காலணிகள் அந்த புதைகுழியில் சிக்கிக்கொண்டன. அவற்றை அதில் தொலைத்து விட்டேன். அந்த மண் என் உடல் முழுவதையும் மூடியிருந்தது. மீதியபிருந்த 3 கிமீ தூர பாதையில், நான் பரலோக இராக்கினியாகிய தேவமாதாவைப் போற்றி வாழ்த்தி, ஜெபமாலை ஜெபித்து நன்றி செலுத்தியபடி நடந்து சென்றேன், என்று அவர் கூறியுள்ளார். 

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஒஹியோவில், அஷ்டபுலா என்ற நகரில் ஒருவர் மீது, ஒரு இரயில் மோதி, இரண்டு பாதியாகி அவன் சாகக் கிடந்தார், அதே கணத்தில் இறக்க வேண்டிய.. அவர் , சுமார் 45 நிமிட நேரம் உயிருடன் இருந்தார்:-அதாவது குருவானவர் வந்து, அவருக்கு அவஸ்தைப் பூசுதல் கொடுக்கும் வரை அவர் உயிருடனிருந்தார். அவர் அணிந்திருந்த கார்மெல் உத்தரியத்தினுடைய புதுமையால் தான், அவர் அவஸ்தைப்பூசுதல் பெறும் வரை சாகாமலிருந்தார். “ 

(இன்று நிறைய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உத்தரியம் அணிவதும் இல்லை அதைப் பற்றி அறியவும் இல்லை என்பதே வேதனையை அளிக்கிறது ஆமாம் 10 ரூபாய் உத்தரியத்திற்கு இவ்வளவு வல்லமை இருப்பது யாருக்கும் தெரியாமல் இருக்கிறோம்! இன்றே உத்தரியம் அணியாதவர்கள் உங்கள் ஆலய டிப்போவில் பெற்றுக் கொண்டு குருவானவரிடம் கொடுத்து ஜெபித்து உங்கள் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்)

பிரியமுள்ள அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் கார்மேல் அன்னையின் திருவிழா வாழ்த்துக்கள்