ஏழு அதிதூதர்கள்!

ஏழு அதிதூதர்களைப் பற்றி அறிந்துகொள்வோம்:

பின் கடவுள்முன் நின்றுகொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். (திவெ 8:2).

"நான் இரபேல், ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்" என்றார். (தோபித்து 12:15).

ஏழு வானதூர்கள் பின்வருமாறு:

மிக்கேல் - சாத்தானை எதிர்த்து போரிடவும், நம் உடல் மற்றும் மன தைரியத்திற்கு உதவுபவர்.

இரபேல் - கடவுளின் குணமளிக்கும் வல்லமையைக் கொடுப்பவர்.

கபிரியேல் - கடவுளின் தூதுவர், செய்திகளை கொண்டுசேர்ப்பவர்.

உரியேல் (Uriel) - ஞானத்தின் தூதுவர். நோவா பேழை செய்யும்போது உடனிருந்தவர்.

சாமுவேல் (Chamuel) - மன அமைதி மற்றும் உறவுகளின் தூதுவர்.

ஜோஃபியேல் (Jophiel) - அழகின் தூதுவர். ஏதேன் தோட்டத்து அழகை பாதுகாத்தவர்.

இரகுவேல் (Raguel) - நட்பு மற்றும் நீதியின் தூதுவர்.