என் மகனே, உன்னுடைய இதயமான கெத்சமனியில் தனிமையாக நான் உனக்காக காத்திருக்கிறேன். ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க யாரேனும் வருவார்களாவென நான் காத்திருக்க, ஒருவரும் என்னை நெருங்கிவர துணியவில்லை.
நித்திய நரகத்திற்கு இட்டு செல்லக்கூடிய உலக செல்வங்களைத் தேடிச் சென்று, என்னைத் தனிமையில் துன்புற விட்டுவிட்டாய். இவ்வாறு நீ விழிப்பாயில்லாத நிலையில், பகைவன் வேகமாக முன்னேறி ஏராளமான ஆன்மாக்காளை வெற்றிக்கொள்கிறான். மகனே, என்னுடன் ஒரு மணி நேரமாவது விழித்திருந்து காத்திருக்க உன்னால் முடியாதா?
உன்னுடைய ஆன்மாவாகிய கெத்சமனியில் நான் தனிமையாக உனக்காகக் காத்திருக்கிறேன். ஏராளமான ஆன்மாக்கள்... ஏராளமான ஆன்மாக்கள் உடல் இச்சை சார்ந்த பாவங்களால், நரகத்திற்குப் போகிறார்கள். மகனே, உனது ஆடம்பர பகட்டு வாழ்வால், எவ்வளவு பேரை நீ நரகத்திற்கு இட்டு செல்கிறாய் என்று பார்.
நீ நிர்வாணியாய் சமூகத்தின் முன் நிற்க வைத்தது என்னையே. மகனே, எனக்கு ஆறுதல் கொடு. மகனே, என் மேல் மனமிரங்கு, ஆண் ஒரு போதும் பெண்ணின் வனைகளை பின்பற்றலாகாது! பெண் ஒரு போதும் ஆணின் பாவனைகளை பின்பற்றலாகாது! மகனே, நான் உன்னை எவ்வாறாக உருவாக்கினேனோ அவ்வாறே வாழ்ந்திடு. உலகக் கவர்ச்சியினின்று விலகியிரு. தூய ஆவியாரின் ஆலயமாகிய உனது உடலை அழிக்க பகைவனின் திட்டமிது. உன் வாழ்வு ஒழுக்கமுள்ளதாக இருக்கட்டும்.
என் அன்பு மகனே, உன்னை நான் அன்பு செய்வதால், நீ என்னை
அன்பு செய்ய வேண்டுமென விரும்புகிறேன். உன்னையே நீ முழுமையாக எனக்கு அர்ப்பணித்திடு. எனக்காக மட்டுமே நீ வாழ்ந்திடு. என்னையே நீ எப்போதும் மகிமைப்படுத்தி, ஆறுதல் கொடு. இந்த அழைப்பை நான் உலகிற்கு கொடுக்கவில்லை, நான் அன்பு செய்யும் உனக்கே இந்த அழைப்பை கொடுக்கிறேன். உலக மீட்புக்காக உன்னையே எனக்கு ஒப்புக்கொடு. உன்னை மனம் மாற அழைக்கும் வேதனையுறும் இயேசு கிறிஸ்து நானே.
என் மகனே, உன்னுடைய தலைவரும் மீட்பருமானவரை இப்படியா காட்டிகொடுப்பாய்? இவ்வுலக வாழ்வில் அழிந்து போகக்கூடிய உலக செல்வங்களுக்காக, உன் தலைவராகிய என்னைக் காட்டிகொடுக்க முடிவு செய்து, கொடூர மனிதர்களிடம் சிலுவையில். அறைய, கையளித்தாய்.
மகனே, உன்னையே இறுதி கால யூதாசாக ஆக்கிகொள்கிறாயே... இறைமகனை காட்டிகொடுத்து, சிலுவையில் அறைந்திட பாவிகளிடம் கையளிப்போருக்கு, அது எவ்வளவு பயங்கரமான தீர்ப்பாக இருக்கப்போகிறது. அவர்கள் வருந்தத்தக்க மரணத்தைக் கடந்து, நித்திய நரகத்தில் முடிவில்லா வேதனையுறுவர்.
எனது இருதய நேசத்திற்குரிய குருக்களிலேயே பலர், யூதாசை போல, வேதனையுற்றிருக்கும் தங்கள் தலைவராகிய என்னை விட்டு உலக செல்வங்களை தேர்ந்துக்கொள்கிறார்கள்.
என் தந்தையின் இல்லத்தை வணிகக்கூடமாக்கும் இச்செயல், என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. என் தந்தை மிகவும் கோபமாயுள்ளார். என்னுடைய திருத்தூயகத்தினின்று என்னை எப்படி விரட்டுகிறாய் என்று பார் மகனே. உன்னுடைய கடவுளாகிய எனது பிரசன்னம் உனக்கு வேண்டுமா? உன் வாழ்வையே எனக்கு அர்ப்பணி.
உன்னுடைய உலக செல்வ நாட்டங்களுக்காக, புறக்கணிக்கப்படுபவன் நானே. நீ உழைத்து சேர்க்கும் இவையாவும் நெருப்பினால் எரிக்கப்படவிருக்கும் போது, நீ ஏன் வீணாக உழைக்கிறாய்? மகனே, என்னிடம் திரும்பிவா. உன்னைக் காக்க வந்திருக்கும் என் மீது இரக்கம் கொள். என் குருக்கள் என்னிடம் திரும்பி வரட்டும். உன்னை அன்பு ' செய்து, என்னிடம் திரும்பிவர அழைக்கும் வேதனையுறும் இயேசு கிறிஸ்து நானே.