அன்னை எப்பொழுதும் நீலநிற உடையில் காட்சியளிப்பது ஏன்?​

அன்னையின் காட்சிகள், ஓவியங்களில் பொதுவாக காணப்படும் நிறம் நீலம். நீலநிறம் விண்ணகத்தையும், உன்னதத்தையும், அற்புதங்களையும் உணர்த்துகிறது. மேலும் எண்ணாகமம் அதிகாரம் 15, 37 முதல் 40 வரை உள்ள வார்த்தைகளில் கடவுள் இவ்வாறு சொல்கிறார்.

​"மேலும் ஆண்டவர் மோசேயிடம் கூறியது: இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச்செய்; நீங்கள் ஒழுக்கம் கேட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவுகூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம். அதனால் ​நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள்.​"​

அன்னையும் தன் வாழ்நாள் முழுவதிலும் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்து, பாவத்திலிருந்து விலகியே வாழ்ந்தார். கபிரியேல் தூதர் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தபோது தன்னையே அர்ப்பணித்தார். (லூக்கா 1:38)

(எண்ணாகமம் 4:5-6) "பாளையத்தினர் புறப்பட்டுச் செல்லும்போது ஆரோனும் புதல்வரும் உள்ளே சென்று மூடுதிரையை இறக்கி அதனைக் கொண்டு உடன்படிக்கை பேழையை மூடுவர்; பின் வெள்ளாட்டு தோலால் அதனை மூடி கருநீலமான ஒரு துணியை அதன்மேல் விரித்து நிலைக் கால்களில் வைப்பர்."

நாமும் அன்னையை உடன்படிக்கையின் பேழையாக, வாக்குத்தத்தத்தின் பெட்டகமாக உருவகப்படுத்துவதால் மாமரிஅன்னை  நீலநிற உடையில் தோன்றுகிறார்.