விசுவாசிகளாகிய நம் அந்தஸ்தின் கடமைகள்!

நமக்கு ஓர் ஆன்மா இருக்கிறது, நித்திய வாசல் திறக்கப்படும் வரை சகல பாவங்களிலிருந்தும் தேவ உதவியோடு அதைக் காத்துக்கொள்வது நம் முழு முதற்கடமை.

உண்ணவும், குடிக்கவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும், அவற்றில் மூழ்கிக் கிடக்கவும், பட்டம், பதவி, பணம், உலக மகிமை இவற்றிற்கு அடிமைகளாக இருக்கவும் நாம் படைக்கப்படவில்லை .

உலகமல்ல, தமத் திரித்துவரும், சேசுவும், மாதாவும், தேவதூதர்களும், புனிதர்களும், சகல இன்பங்களும் ஆறுதலும் நிறைந்துள்ள பரலோகமே நம் தகப்பன் வீடு என்பதை எப்போதும் நினைவில் இருத்தி வாழுங்கள்.

பாவத்தை விலக்கி, புண்ணியத்தைச் செய்வது நாம் மோட்சம் அடைய திருச்சபை விதிக்கும் நிபந்தனையாக இருக்கிறது.

இன்று தங்களுக்கு ஓர் ஆத்துமம் இருப்பதை பெரும்பாலான மனிதர்கள் மறந்து போய் விட்டார்கள்.

உங்களைப் பொறுத்த வரை இது உண்மை என்றால், உங்களைத் திருத்திக்கொள்வது உங்கள் இரட்சணியத்திற்கு இன்றியமையாதது.

நரகம் யாரை விழுங்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறது.