உத்தரிக்கிறஸ்தலம் - உணர்வுபூர்வமான சிந்தனை

விசுவாசிகள், மரித்த தங்கள் நேசர்கள் நித்தியப் பேரின்பத்தின் வாசஸ்தலத்திற்கு வந்து சேரும் வரையிலும், அவர்களை நினைவுகூரும்படி கிறீஸ்துநாதரின் மணவாட்டியாகிய திருச்சபை அவர்களைக் கேட்டுக் கொள்வதையும், உற்சாகப்படுத்துவதையும் ஒருபோதும் நிறுத்திக் கொள்வதில்லை .

நம் தெய்வீக இரட்சகர் தமது பரலோகப் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்த அவருடைய பலி மரணத்தை திவ்விய பலிபூசையில் அது புதுப்பிக்கிறது. இம்முறையில் துன்புறும் திருச்சபைக்காக இடையறாமல் ஜெபிக்கும்படி அது போராடும் திருச்சபையாகிய நம்மோடு சேர்ந்து கொள்ளுமாறு வெற்றி பெற்ற திருச்சபையை அழைக்கிறது.

பரிசுத்த தேவத்திரவிய அனுமானங்களால் சாவான பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டாலும், தாங்கள் போதுமான அளவுக்கு பரிசுத்தமாயிருக்கிறார்களா என்றும், மோட்சத்திற்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்களா என்றும் நிச்சயமில்லாமல் இருக்கிற மரிக்கிறவர்களுக்கு இவ்வளவு தேற்றரவும், ஆறுதலுமாயிருக்கிற ஒரு பரிசுத்த வேதத்தை அனுசரிப்பது, எத்தகைய ஆறுதலாக இருக் கிறது. ஜீவியர்களை அது எவ்வளவு உறுதிப்படுத்துவதாக இருக்கிறது!

மரிக்கிறவர்கள் தங்கள் மரணத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற திருச்சபையும், போராடும் திருச்சபையும் எப்போதும் தங்கள் உதவிக்கு வரும் என்பதில் உறுதியா யிருக்கலாம். தங்கள் நேசத்திற்குரியவர்கள் சுத்திகரிக்கிற நெருப்பில் செலவழிக்க வேண்டியுள்ள காலத்தைக் குறைத்து, அவர்களுக்கு உதவ விரும்பும் அவர்களுடைய உயிரோருக்கிற நண்பர்களுக்கு இது எவ்வளவு ஆறுதலளிப் பதாக உள்ளது!

மிகக் கடுமையான வேதனையோடு மரிக்கிற கணவன் தன் அன்பு மனைவியின் ஜெபங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து, அவளிடம் விடை பெறுகிறான்; பாச முள்ள குழந்தைகள் தங்கள் பிரியமுள்ள தாயின் மரணப் படுக்கையைச் சூழ்ந்து நிற்கும்போது, அல்லது பிரியமான ஒரு நண்பன் நம்மை விட்டுப் பிரிகையில், நாம் கடும் துயரத்தால் நிரப்பப்படும்போது, அந்தப் பிரிவின் துயரம் நம் இருதயத்தை உடைக்கிறது. அத்தகைய தருணங்களில், நம் பரிசுத்த வேதம், தனது பரலோக ஆறுதல்களோடு நம் உதவிக்கு வருகிறது.

வெற்றி பெற்ற திருச்சபையிலுள்ள நம் சகோதரர்களை நோக்கி நம் கரங்களையும் இருதயங் களையும் உயர்த்தும்படி அது நமக்கு அறிவுறுத்துகிறது. துன்புறும் நம் அன்புக்குரியவர்களுக்கு தாராளமுள்ள பிறர் சிநேகத்தோடு நம் ஜெபங்களையும், தானதர்மங் களையும், நம் நற்செயல்களின் பலன்களையும் பகிர்ந் தளிக்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்ளும் விதமாக இப்படிச் செய்யும்படி நம் திருச்சபை இப்படி நமக்கு அறிவுறுத்துகிறது. அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதிதப் பிரயோசனம் என்னும் இந்த சத்தியம் எவ்வளவு ஆறுத லானது!

ஆகவே, கிறீஸ்தவ ஆத்துமமே, நாம் துயரத்தில் அழுந்திக் கிடக்கத் தேவையில்லை ; அதற்குப் பதிலாக, "நம்பிக்கை இல்லாதவர்களைப் போல துக்கம் கொண்டாடா தீர்கள்" என்ற அர்ச். சின்னப்பரின் அறிவுரையைப் பின்பற் வோம். அர்ச். மோனிக்கம்மாள் தன் அர்ச்சியசிஷ்ட மகனை விட்டுப் பிரிந்த போது சொன்ன , "கடவுளின் பலிபீடத்தண்டையில், என்னை நினைத்துக் கொள்ளும்'' என்ற வார்த்தைகளை நினைவில் கொள்வோமாக!