அர்ச். சாமிநாதர் பாடல்

திருச்சபையின் ஒளியே,
சத்தியத்தின் போதகரே,
பொறுமையின் ரோஜாவே,
கற்பின் வெண்தந்தமே,
ஞான நீரை நீர் வெகு
உதாரமாய்ச் சொரிந்தீர்.
வரப்ரசாதத்தின் போதகரே,
முத்தரோ டெம்மைச் சேர்த்தருளும்.

சீவன் பறந்து போய்விடினும் உம்மவரைக்
காப்பீரென நீர் தந்த திருவாக்கினால் உம்
சுவாசம் குன்றி மரணம் அண்டி வந்த வேளையிலும்
அவர்க்கினிய நம்பிக்கையின் ஆறுதல் தந்தீர்.

நோயுற்றோர் மத்தியில் தேவவல்லமைகளோடு
நினைத்த போதில் ஒளியிற் துலங்கிய அற்புதரே,
அல்லலுற்ற எம் ஆத்துமங்களிலும் உயிர்தரும்
கிறீஸ்துவின் பரிகாரத் திருவருளைப் பொழிவீரே.

பிதாவுக்கும் சுதனுக்கும் தேவ ஆவியானவர்க்கும்
நித்யமும் ஸ்தோத்திரமுண் டாவதாக.
தந்தாய், நம் ஆண்டவரிடம் எங்களுக்காய்
மன்றாடுவீரெனும் உம்வாக்கைக் காத்தருளும். ஆமென்.