பாவசங்கீர்த்தனம் செய்ய ஆத்தும சோதனைகள்!

பத்துக்கட்டளைக்கு எதிரான பாவங்கள்

1 விசுவாச காரியங்களில் சந்தேகப்பட்டது. ஜெபம் செய்ய தவறினது, கோவிலில் மரியாதை குறைவாக இருந்தது,  பிற தெய்வங்களை வணங்கியது, சகுன சாஸ்த்திரம் பார்ப்பது,

2 இறைவன் பெயரை, புனிதர்கள் பெயரை, அவசங்கையாய் சொன்னது. காற்று மழை இயற்கையை முறையிட்டது. பிறரையும், தன்னையும் சபித்தது.

3. ஞாயிறு கடன் திருநாள் பூசை தவறியது , ஓய்வு நாளில் கடும் வேலை செய்தது,

4. பெற்றோர், பெரியோர்களுக்கு கீழ்படியாதது.

5. பிறர்மேல் பகை கொண்டது. கருக்கொலை செய்தது

6. கெட்ட நினைவு, கெட்டபேச்சு, கெட்டபார்வை, கெட்டபுத்தகம், கெட்டசெயல். இவற்றில் ஈடுபட்டது, கண்ணியமற்ற ஆடை அணிந்தது,

7.திருடியது, திருடியதை  திருப்பி கொடுக்காது, திருட்டுப் பொருளை வாங்கியது, பிறர்  பெயருக்கும் உடமைக்கும், நஷ்டம் உண்டாக்கியது.

8.பொய், அவதூறு, கோள் சொன்னது,

9. பிறர் மனைவியை விரும்பியது, மனைவி தவிர மற்றவர்களை சகோதரியாக,  தாயாக  நினைக்க தவறியது , டி.வி மற்றும் படங்களில் ஆபசங்களை பார்த்தது , இதனால் குடும்பத்தில் பிள்ளைகள் கெட காரணமாக இருந்தது ,

10. பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டது , அவர்கள் நன்றாக இருப்பதைக் கண்டு பொறாமை பட்டது

திருச்சபை கட்டளைக்கு எதிரான பாவங்கள்

கடன் பூசை தவறியது , பாதி பூசைக்கு வந்து பாதியில் ஓடுவது, பாவசங்கீர்தனம் பண்ணாதிருப்பது . பாஸ்கு காலத்தில் நற்கருணை வாங்காதது , விலக்கப்பட்ட நாட்களில் மாமிசம் சாப்பிட்டது , உபவாசம் இல்லாமல் இருந்தது, தவறான உறவுகளில் திருமணம் செய்தது . திருச்சபைக்கு வெளியே திருமணம் செய்தது , திருச்சபைக்கும் , குருக்களுக்கும் இயன்ற உதவிகளைச் செய்யாதது

மேலும் சில பாவங்கள் :

தற்பெருமை. கோபம். பண ஆசை. ஏழை எளியவரை மிகவும் கேவலமாக எண்ணுதல் . துன்புறும்  ஏழைகளுக்கு உதவாமல் இருப்பது . அளவுக்கு அதிகமாக உன்பது . வீணாக காலம் கடத்தி சோம்பலாக காலம் கடத்துவது . ஞான  உபதேசத்திற்கு பிள்ளைகளை அனுப்பாதது . குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு ஞான காரியங்களில் வழிக்காட்டாதது . தன் குடும்பத்தை கவனியாமல் விடுவது . கணவன் மனைவி ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்க தவறியது . பிள்ளைகள் முன் சண்டை போடுவது . பிறர் பாவம் செய்ய நாம் காரணமாக இருந்தது. ஆலயத்தை பொது மண்டபமாக நடத்துவது  இவை அனைத்தும் ஏக அப்போஸ்தலிக்க கத்தோலிக்க திருச்சபைக்கு ( கடவுளுக்கு)  எதிராக நாம் செய்யும் பாவங்கள்

சிந்தனை.

அன்புள்ளங்களே நாம் இறுதி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இனி நாம் வாழும் காலத்தில் இயேசுவின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து பாவங்களை மறந்து புண்ணிய நெறிகளை கடைப்பிடிக்கவும் பிறருக்கு நன்மை செய்யவும். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.  நூறு சதவிகிதம் நல்ல விதைகளை நல்ல  நிலத்தில் விளைச்சலை கொடுத்தது நமது மாமரி அன்னை மட்டுமே மற்ற புனிதர்கள் , பரிசுத்தவான்கள் , அறுபது, முப்பது என்று தந்தார்கள் விதைகள் உவமைகளில்,   நாமும் தேவமாதாவை நமது வாழ்வாக்கி அவர்களே மீட்பின் இரட்சண்யம் என்பதை அறிந்து அவர்களின் மாசற்ற திரு இருதயத்தின் வழியாக மூவொரு இறைவன் பாதம் செல்வோம். ஆமென்.