புனிதர்களை திருச்சபை கொடுத்திருப்பது, விழா எடுப்பதற்காகவா?

புனிதர்களை திருச்சபை கொடுத்திருப்பது, அவர்களுக்கு பிரமாண்ட விழா எடுப்பதற்காக அல்ல மாறாக அவர்களை பின்பற்றி நாமும் சாட்சிய வாழ்வு வாழவேண்டும் என்பதற்கே...

புனித அந்தோனியாரைப் போலவே இயேசுவை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு நம்பிக்கையோடு இருக்கணும்.

புனித அன்னை தெரசா போலவே புண்பட்டோரிடம் பேசணும்,எப்பொழுதும் அவர்களிடம் புன்முறுவல் பூக்கணும்

புனித தோமையாரைப் போலவே நற்செய்தியாக வாழணும்,நல்லவற்றுக்காக எப்பொழுதும் நடக்கணும்

புனித சவேரியார் போலவே இறையரசை பரப்பணும்,தெரிந்தவர் யாவரிடமும் நல்லதையே சொல்லணும்

புனித பேதுரு போலவே கலங்கா மனதோடு இருக்கணும், இயேசுவின் வழியில் தொடர்ந்து செல்லணும்

புனித டோமினிக் சாவியோ போலவே படிக்கும்பொழுது படிக்கணும்,
செபிக்கும்பொழுது செபிக்கணும்

புனித தெரசம்மாவைப் போலவே பாவிகளுக்காக தொடர்ச்சியாக மன்றாடணும், அவர்களையும் பக்தியோடு நினைக்கணும்

புனித வளனாரைப் போலவே கடுமையாக உழைக்கணும்,கண்ணும் கருத்துமாக அன்போடு இருக்கணும்

புனித மார்த்தா மரியா போலவே நல்ல பங்கை நாடணும்,இயேசுவின் அருகில் எப்பொழுதும் அமரணும்

புனித செபஸ்தியாரைப் போலவே இயேசுவின் சாட்சியாக வாழணும், வீரனைப் போல வீர நடை போடணும்.

நாம் புனிதர்களிடமிருந்து எதை கற்றுகொண்டோம்? எதை செயல்படுத்துகிறோம்?

வெறும் விழாக்களோடு முடிந்து விடுகிறதா நமது கிறிஸ்தவ வாழ்வு???

சிந்திப்போம்...