உத்தரிப்பு ஸ்தல ஆத்துமத்தின் கெஞ்சல், ஏக்கம்!

என் அன்பார்ந்தவர்களே,

என் உற்றார் உறவினர்களே,

நான் பெற்ற செல்வங்களே,

நான் பூவுலகில் இறந்தவுடன் கதறிக் கதறி அழுதவர்களே!

என்னைக் கல்லறையில் அடக்கம் பண்ண வந்தவர்களே,

என்னை ஏன் பின்பு மறந்துவிட்டீர்கள்?

ஏன் என் கல்லறைக்கு முதலாய் வருவதில்லை?

ஏன் என்னை நினைத்து பலிபூசை முதலாய் கொடுப்பதில்லை?

ஏன் என்னை நினைத்து தான, தர்மங்கள் முதலாய் செய்ய மறந்துவிட்டீர்கள்?

ஏன் என்னை முழுவதும் மறந்துவிட்டீர்கள்?

நீங்கள் என்னை மறக்கலாம், எப்போது நான் உங்களை மறந்தேன்?

உங்களை ஒருபோதும் மறவாத மனம் என்னுடையது!