திவ்ய பலி பூசைச் செபங்கள் - தீர்த்தம் தெளித்தல்

எழுந்து நிற்கவும்.

ஆரம்ப வாக்கியம். (சங். 50:7‡8).  ஆண்டவரே, நீர் ஈசோப் என்கிற புல்லினால் என்மேல் தெளித்தருளுவீர்.  நானும் சுத்தமாவேன்.  நீர் என்னைக் கழுவுவீர்.  வெண்பனிக் கட்டியிலும் தூய்மையாவேன்.

(சங். 50:3)  சர்வேசுரா, உமது தயையின் விசாலத்திற்குச் சரியானபடி என் மேல் இரக்கமாயிரும்.

பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக் கடவது.

ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருக்கக் கடவது.  ஆமென்.

குரு: ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காண்பித்தருளும். (பாஸ்கு காலத்தில்: அல்லேலுய்யா)

பரி.: உமது இரட்சணியத்தை எங்களுக்குத் தந்தருளும். (பாஸ்கு காலத்தில்: அல்லேலுய்யா).

குரு: ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.

பரி.: எனது கூக்குரல் உமது சன்னதி மட்டும் வரக் கடவது.

குரு: ஆண்டவர் உங்களுடனே இருப்பாராக.

பரி.: உமது ஆவியோடும் இருப்பாராக.

ஜெபிப்போமாக

பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபரான பிதாவே, நித்தியரான சர்வேசுரா, எங்கள் மன்றாட்டுக்கு இரங்கி, இந்த ஆலயத்தில் கூடியிருக்கும் எல்லோரையும் ஆதரித்துக் காப்பாற்றிச் சந்தித்துத் தற்காக்கும்படி உமது பரிசுத்த சம்மனசைப் பரலோகத்திலிருந்து அனுப்பியருளும்.  எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துவின் பேரால் ஆமென்.

பாஸ்கு கால ஞாயிற்றுக் கிழமைகளில்

ஆரம்ப வாக்கியம் (எசேக். 47:2):  தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன்.  அல்லேலுய்யா.  அந்தத் தண்ணீர் எவர்களிடம் வந்ததோ அவர்கள் எல்லோரும் இரட்சிக்கப் பட்டு, அல்லேலுய்யா என்று புகழ்ந்து சொல்லுவார்கள்.

(சங். 117:1) : ஆண்டவரைப் புகழ்ந்தேற்றுங்கள்.  ஏனெனில் அவர் நன்மை நிறைந்தவர்.  அவருடைய இரக்கப் பெருக்கம் என்றென்றும் நிலைத்திருக்கின்றது.

பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்து சாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக் கடவது.

ஆதியில் இருந்தது போல, இப்பொழுதும், எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக.  ஆமென்.

(திரும்பவும்):  தேவாலயத்தின் வலப் பக்கத்தினின்று........

(தொடர்ந்து மற்றவை முன் போல).