கிறீஸ்துமஸ் திருநாளிலிருந்து சுத்திகரத் திருநாள் வரை

ஆரம்ப வாக்கியம்: 

தனது குழந்தைப் பேற்றில் ஒரு பெண் ஓர் அரசரை ஈன்றெடுத்தாள்.  அவரது திருநாமம் நித்தியமானது. கன்னிமையின் மகிமையுடன் தாய்மையின் மகிழ்ச்சிகளையும் ஒருசேர அனுபவித்த அவளைப் போல, வேறு யாரும் இதுவரை தோன்றியதுமில்லை, இனி தோன்றப் போவதுமில்லை.

முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.

பதில்: எனது அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.

பிரார்த்திக்கக் கடவோம்

     ஓ சர்வேசுரா! முத்திப்பேறு பெற்ற கன்னி மரியாயின் பலனுள்ள கன்னிமையின் வழியாக மனுக்குலத்திற்கு நித்திய இரட்சணியத்தின் வெகுமதியை வழங்கியுள்ளீரே. அவர்கள் வழியாகவே ஜீவியத்தின் கர்த்தரை அடைந்து கொள்ள நாங்கள் தகுதி பெற்றோம்.  ஆதலால் தேவரீரை நோக்கி மன்றாடும் அடியோர்கள், அவ்வாறே அத்திருமாதா எங்களுக்காகப் பரிந்து பேசுவதையும் உணருவோமாக.  எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்து நாதர் வழியாக.  

பதில்: ஆமென்.