ஆகமனக் காலம் முழுவதும்

ஆரம்ப வாக்கியம்: 

இஸ்பிரீத்து சாந்துவானவர் உம்மீது இறங்கி வருவார். ஓ மரியாயே, அஞ்சாதீர். தேவரீர் உமது திருவுதரத்தில் தேவசுதனைத் தாங்கியிருப்பீர்.

முதல்: ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.

பதில்: எனது அபய சத்தம் உமது சந்நிதி மட்டும் வரக் கடவது.

பிரார்த்திக்கக் கடவோம்

(இந்த ஜெபம் மூன்றாம் கணித ஜெபத்திலும் மாலை ஆராதனையிலும் ஜெபிக்கப் படுகிறது.)

சர்வேசுரா, உமது வார்த்தையானவர் முத்திப்பேறு பெற்ற கன்னிகையாகிய மரியாயின் திருவுதரத்தில் மாமிசமாக மனுவுருவெடுக்கவும், அதனை ஒரு சம்மனசானவரைக் கொண்டு அவர்களுக்கு அறிவிக்கவும் சித்தமானீரே. அந்தப் பரிசுத்த கன்னிகையையே உமது பரிசுத்த தாயாராக ஏற்று, மெய்யாகவே விசுவசிக்கிற உம்முடைய அடியார்களாகிய நாங்கள், தேவ மாதாவின் மன்றாட்டினால் உமது உதவியைப் பெற்றுக் கொள்ளத் தயைபுரியும்.  எங்கள் ஆண்டவராகிய கிறீஸ்துநாதர் வழியாக. 

பதில்: ஆமென்.