உலக முடிவு நாள் வரை கூட உத்தரிப்பு ஸ்தல வேதனை!

பல கிறிஸ்தவர்கள், வாழும் காலத்தில், துரதிஷ்டவசமாக, சாவான பாவம் புரிந்துவிட்டு அதற்காக மனம் வருந்தினாலும் உரிய பாவப் பரிகாரங்கள் செய்வதில்லை .

வணக்கத்திற்குரிய பெடே அவர்கள், "வாழும் காலத்தின் பெரும்பகுதியை சாவான பாவங்கள் புரிவதில் கழித்துவிட்டு, சாகும் தறுவாயில் மட்டும் அதற்காக மனம் வருந்துபவரது ஆன்மா உலக முடிவு நாள் வரை கூட உத்தரிப்பு ஸ்தலத்தில் வேதனைப்பட வேண்டிவரும்" எனக் கூறியுள்ளார்.

புனித ஜெர்ரூத்தம்மாள், சாவான பாவம் பல புரிந்துவிட்டு, உரிய பிராயச்சித்தம் செய்யாதவர்கள், திருச்சபையின் சாதாரண பரிகார முயற்சிகளின் பலன்களில் கூட, பல ஆண்டுகளாக பங்கேற்க இயலாத நிலை ஏற்படுகிறது என தமது வெளிப்படுத்துதல்களின் மூலம் தெரிவித்துள்ளார்.

வாழும் காலங்களான 20, 30, 40 அல்லது 60 வருடங்களாக சொத்து சேமித்து வைத்திருக்கும் நாம் புரிந்த அற்ப மற்றும் சாவான பாவங்கள் ஒவ்வொன்றுக்கும் மரித்த பின் பரிகாரம் செய்தே தீர வேண்டும்.