அர்ச். சாமிநாதர் மூன்றாம் தவச்சபையினரின் கவனத்திற்கு

13-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அர்ச். சாமிநாதருடைய சபை நிறுவப்பட்டபோது, உரோமாபுரியில் தேவமாதாவின் மந்திரமாலை நிரந்தரமாக ஜெபிக்கப்பட்டு வந்தது. மேற்றிராசனக் குருக்களும் தங்கள் கட்டளை ஜெபத்தில் ஒரு பகுதியாக தேவமாதாவின் மந்திரமாலையை ஜெபித்து வந்தனர்.

அர்ச். சாமிநாதர் சபையில் பெரிய கட்டளை ஜெபத்தைப் போலவே,  அந்தந்த சபைக்குரிய சிறப்பு வழிபாட்டு முறைக்கேற்ப தேவமாதாவின் சிறிய மந்திரமாலையும் ஜெபிக்கப்படுகின்றது.

சபையின் போதக துறவிகள், தங்கள் சபை நிறுவனரைக் கண்டுபாவிக்கும் வண்ணம் அவர்கள் எப்பொழுதும், சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவான அர்ச். கன்னி மரியம்மாள் மேல் விசே­ பக்தி கொண்டு விளங்குகின்றனர்.  சம்மனசானவரின் மங்கள வாழ்த்தைப் பிரதானமாகக் கொண்டு விளங்கும் ஜெபங்களான தேவமாதாவின் சிறிய மந்திரமாலை மற்றும் ஜெபமாலையை  தினமும் ஜெபிப்பதன் மூலம் சாமிநாதர் சபைத்துறவிகளின் அவ்வுன்னத பக்தியானது  வாய்மொழியாகவே விசே­மான விதத்தில் வெளிப்படுத்தப் படுகின்றது.

எனவே, அர்ச். சாமிநாதருடைய சபையினரின் முதன்மையான வாய்ஜெபமாக தேவமாதாவின் சிறிய மந்திரமாலை விளங்குகின்றது. அதை அவர்கள் குழுவாக ஜெபிப்பர். சாமிநாதர் சபையினர் தேவமாதாவின் சிறிய மந்திரமாலையை நாள் முழுவதும் பல இடைவேளைகளில் ஜெபிப்பார்கள். மேலும் அந்த ஜெபத்தை அவர்கள் தேவ நற்கருணையின் பிரசன்னத்தில் மிகுந்த விசேஷ­ கவனத்துடனும்  பக்தியுடனும் ஜெபிப்பார்கள்.