எனவே, மாதாவின் தெய்வீகத் தாய்மையை நிந்திக்கிறவர்கள் :
1. சர்வேசுரனுடைய தேவ ஞானம் என்னும் உன்னத தேவ இலட்சணத்தைப் பழிக்கிறார்கள்.
2. சேசுநாதரின் தேவ- மானிட உற்பவத்தையும், பிறப்பையும் பரிகசிக்கிறார்கள்;
3. திவ்ய கன்னிகை சர்வேசுரனுக்குத் தாயாகும்படி அவர்களை இனி பிரிக்க இயலாதபடி தம்மோடு இணைத்துக் கொண்ட இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனையே பழிக்கிறார்கள்!
4. இதன் காரணமாக, மிகக் கொடிய, தேவ நிந்தையான, தேவத் துரோகமான ஒரு பெரும் பாவத்தை அவர்கள் கட்டிக் கொள்கிறார்கள். இது இஸ்பிரீத்து சாந்துவுக்கு எதிரான பாவம் என்பதால், மன்னிக்கப்படக் கூடாததாக இருக்கிறது.
எனவே, இந்தப் பரிதாபத்திற்குரிய தன் தீய பிள்ளைகளை மனந்திருப்ப, மாதா நம்முடைய ஜெபங்களையும், பரித்தியாகங்களையும் கேட்கிறார்கள்.
இந்தக் கருத்துக்காக நாம் ஜெபித்து, பரித்தியாகம் செய்து ஒப்புக்கொடுக்கும்போது, மாதா இந்த ஆன்மாக்களை மனந்திருப்புகிறார்கள்.
நாமும் மாதா வழியாக, பரலோகத்தில் அதிமேலான ஒரு சம்பாவனைக்குப் பாக்கியமுள்ளவர்களாகிறோம்!